Ad

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

ஷாருக்கான் படம் டிராப்பா... விஜய்யை இயக்குகிறாரா அட்லி?! #VikatanExclusive

ஓராண்டுக்கும் மேலாக ஷாருக்கானுக்காக கதை சொல்லி, அந்த கதையை ஓகே வாங்கி, இயக்குவதற்காக காத்திருந்த அட்லியை ஷாருக் ஓதுக்கிவிட்டார், வேறு இயக்குநருக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டார் எனத் தகவல்கள் பறக்க உண்மை என்ன என விசாரித்தோம்.

2015-ல் வெளியான `தில்வாலே' படத்துக்கு ப்பிறகு தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக ஃப்ளாப்களாகக் கொடுத்துக்கொண்டிருந்தார் ஷாருக்கான். உண்மையைச் சொல்லப்போனால் `தில்வாலே' படமுமே சுமார்தான். ஆனால், அதன்பிறகு வந்த `ரயீஸ்', `ஸீரோ' படங்கள் எல்லாம் மிகப்பெரிய தோல்வி. இதனால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக எந்தப்படத்திலும் கமிட் ஆகாமல் தொடர்ந்து கதைகள் கேட்டுக்கொண்டேயிருந்தார் ஷாருக்கான்.

இரண்டு ஆண்டுகளாக கிட்டத்தட்ட 20 இயக்குநர்களிடம் கதை கேட்டு, கடைசியாக இரண்டு இயக்குநர்களுக்கு ஓகே சொல்லியிருக்கிறார் ஷாருக்கான். முதல் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி. `முன்னாபாய்', `3 இடியட்ஸ்' போன்ற படங்களை இயக்கிய ஹிரானிதான் அடுத்து ஷாருக்கான் படத்தை இயக்குகிறார். இந்தப்படமும் ஹிரானியின் ஸ்டைலான சோஷியல் சட்டையர் படம்தான். லாக்டெளன் முடிந்ததும் இந்தப்படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்கிறார்கள்.

ஷாருக் கான், தீபிகா படுகோன்

அப்படியானால் அட்லி படம்?! ஷாருக்கான் ஓகே சொல்லியிருக்கும் இரண்டாவது இயக்குநர், இரண்டாவது படம் அட்லியுடையதுதான். யெஸ்... ஷாருக்கானை இயக்குகிறார் அட்லி. இதற்கான அக்ரிமென்ட் விஷயங்கள் எல்லாமே முடிந்து, ஒரு பெரும்தொகையின் பாதியை சம்பளமாகவும் வாங்கிவிட்டார் அட்லி.

`எந்திரன்' படத்தில் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் அட்லி. நயன்தாரா, ஆர்யா, ஜெய் நடித்த `ராஜா ராணி' படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநரானார். முதல் படத்தின் வெற்றி, அப்படியே அட்லியை விஜய்யிடம் கொண்டு சென்றது. தொடர்ந்து விஜய்காக மட்டுமே `தெறி', `மெர்சல்', `பிகில்' என மூன்று படங்களை இயக்கிவிட்டார். இந்நிலையில்தான் கடந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளின்போது ஷாருக்கானின் பக்கத்தில் உட்கார்ந்து மேட்ச் பார்த்த அட்லியை பிரமித்துப் பார்த்தது கோலிவுட். எப்படி இப்படி என எல்லோரும் யோசிக்க, கடந்த ஆண்டு அக்டோபரில் ஷாருக்கான் படத்தை இயக்கப்போகிறார் அட்லி என்கிற செய்தி வெளியானது. ஆனால், அதன்பிறகு எந்த அப்டேட்டும் இல்லாமல் இழுத்துக்கொண்டே போனநிலையில், `பிகில்' படமும் விமர்சன ரீதியாக அடிவாங்க, ஷாருக்கான் பின்வாங்கிவிட்டார் என்கிற வதந்திகள் பறந்தன. ஆனால், அது எதுவும் உண்மையில்லை என்கிறது பாலிவுட் வட்டாரம். ஷாருக்கானுக்கு நெருக்கமானவர்கள் இரண்டு படங்களையுமே உறுதிசெய்திருக்கிறார்கள்.

ஷூட்டிங்?!

விஜய் - அட்லி

ராஜ்குமார் ஹிரானி, அட்லி என ஷாருக்கானை வைத்து இருவர் இயக்கும் படமும் ஒரே நேரத்தில் ஷூட்டிங் போக இருக்கிறது. லாக்டெளன் முடிந்ததும் இரண்டு படங்களின் ஷூட்டிங்குமே தொடங்குகிறது. இரண்டு படங்களிலும் மாறி மாறி நடக்கயிருக்கிறாராம் ஷாருக். ஹிரானியின் படம் சமூக விஷயங்களைப்பேச, அட்லி படம் மாஸ் கமர்ஷியல் படமாக இருக்குமாம். இரண்டு படங்களில் அட்லியின் படம்தான் பெரிய பட்ஜெட் படம் என்கிறார்கள்.

நவம்பர் 2 ஷாருக்கான் பிறந்தநாள். அன்றைய நாளில் இரண்டு புதிய படங்களின் பெயர்களுமே அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் ஏ.ஆர்.முருகதாஸ், வெற்றிமாறன் படங்களை முடிக்கவும், ஷாருக் படத்தை அட்லி முடிக்கவும் சரியாக இருக்கும் என்கிறார்கள்.

வாழ்த்துகள் அட்லி... பட்டையைக் கிளப்புங்க!



source https://cinema.vikatan.com/tamil-cinema/vikatans-exclusive-details-about-shahrukh-khans-next-two-movies

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக