Ad

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

சுஷாந்த் வழக்கு: `கட்டாயத் தனிமைப்படுத்தல்!’-பீகார் அதிகாரிக்கு இடம்வழங்க மறுத்த மும்பை போலீஸ்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தன் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அதீத மன அழுத்தத்தினால் இவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது. இருந்தும் சுஷாந்த் தற்கொலை செய்துகொள்ளவில்லை; அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் எனப் பெரும் சர்ச்சை வெடித்தது. இதையடுத்து, இவர் உயிரிழப்பு தொடர்பாக மும்பை போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

சுஷாந்த் சிங்

இதற்கிடையில், சுஷாந்த் உயிரிழந்து ஒரு மாதத்துக்குப் பிறகு அவரது உயிரிழப்புக்கு தோழி ரியா சக்ரபர்த்திதான் காரணம் என சுஷாந்தின் தந்தை கே.கே சிங் பிகார் போலீஸில் புகார் அளித்தார். அவர் அளித்துள்ள புகாரில்,``ரியா, தன் மகனின் நிதியைக் கட்டுப்படுத்தி சுஷாந்த் கணக்கிலிருந்து தனது கணக்குக்கு ரூ.15 கோடி மாற்றியுள்ளார். அவரது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துகிறார், குடும்பத்தினருக்குத் தெரிவிக்காமல், கம்பெனிகளின் பங்குகளை நிர்வகிக்கிறார். மேலும், அவரது சிகிச்சையின்போது அதிகப்படியான மருந்துகளை எடுக்க வைத்ததாகவும்’ குற்றம் சுமத்தியுள்ளார்.

Also Read: சுஷாந்த்: `ரூ.15 கோடி; அதிகப்படியான மருந்து!’ - லீக்கான வீடியோவும் தந்தை புகாரும்

இதையடுத்து ரியா சக்ரபர்த்தி மீது மோசடி, திருட்டு, தவறான வழிநடத்தல் போன்ற பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பாட்னாவில் விசாரணை நடைபெற்று வருகிறது. சுஷாந்த் மரணம் தொடர்பாக மும்பையிலும் பீகாரிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த விவகாரம் தொடர்பாக இரு மாநில போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். பாட்னா போலீஸ் குழு மும்பையில் முகாமிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இரு மாநில காவல்துறையினருக்கும் இடையே மோதல் போக்கு நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சுஷாந்த் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த பாட்னாவை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி வினய் திவாரி நேற்று மும்பைக்கு வந்துள்ளார். அப்போது மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அவரை கட்டாயத் தனிமைப்படுத்தலில் வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக பிகார் டி.ஜி.பி குப்தேஷ்வர் பாண்டே ட்விட்டரில்,``ஐ.பி.எஸ் வினய் திவாரி பாட்னா போலீஸ் குழுவை வழிநடத்துவதற்காக பாட்னாவிலிருந்து மும்பை வந்துள்ளார் ஆனால், இரவு 11 மணியளவில் அவரை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் வலுக்கட்டாயமாகத் தனிமைப்படுத்தியுள்ளனர். அவரின் கோரிக்கை இருந்தும் ஐ.பி.எஸ் மெஸ்ஸில் அவருக்கு தங்க இடம் வழங்கப்படவில்லை. அதனால் ஒரு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயம் பெரும் சர்ச்சையாகியுள்ளது.வினய் திவாரியின் தனிமைப்படுத்தல் புகைப்படம் மற்றும் வீடியோ வைரலாகியுள்ளது

Also Read: சுஷாந்த் சிங்: `நீ இப்போது இன்னும் அமைதியான இடத்தில் இருப்பாய்!’ - தோழி ரியா உருக்கம்



source https://www.vikatan.com/government-and-politics/controversy/patna-ips-officer-probing-sushant-case-forcibly-quarantined-in-mumbai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக