இந்தியாவில் 18 லட்சத்தைக் கடந்த பாதிப்பு!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,03,695 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 52,972 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 771 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,135ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 11,86,203 ஆகவும் உயர்ந்துள்ளது.
Also Read: கொரோனா:`வெளியே வந்து சாப்பிடுறாங்க; டீ குடிச்சுட்டு போறாங்க!' - நோயாளிகளால் பதறும் திருச்சி
கொரோனா - உலக நிலவரம்!
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,82,33,977 உயர்ந்துள்ளது. 6,92,785 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 48,13,647ஆக அதிகரித்திருக்கிறது. இதனால், 1,58,365 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
Also Read: கொரோனா: `ஆளுநருடனான சந்திப்பு; நோ அறிகுறி!’ - கர்நாடக முதல்வருக்கு வைரஸ் பாசிட்டிவ்
source https://www.vikatan.com/news/general-news/03-08-2020-corona-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக