Ad

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

`தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஐயா OPS!' - தேனியை அதிர வைத்த போஸ்டர்கள்

இன்று காலை தேனி மக்களின் கண்களுக்கு பளிச்சென்று போஸ்டர்கள் தென்பட்டது. போடி, தேனி, பெரியகுளம் என தேனியின் அனைத்துப் பகுதிகளின் முக்கிய சந்திப்புகளில் அந்த போஸ்டர்களை பார்க்க முடிந்தது. துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தொகுதியான போடி அருகே அமைந்துள்ள கெஞ்சம்பட்டி எனும் கிராம மக்களின் சார்பாக என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த போஸ்டர்களில், ’அம்மா ஆசி பெற்ற என்றென்றும் மக்கள் முதல்வர் OPS’ என்றும்,. மற்றொரு போஸ்டரில், ’ஏழை எளியோரின் எளிய முதல்வர் OPS ஐயா’ என்றும். மற்றுமொரு போஸ்டரில், ’தமிழகத்தின் நிரந்த முதல்வர் OPS ஐயா’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அனைத்து போஸ்டர்களிலும், எடப்பாடியின் படம் ஸ்டாம்ப் சைசில் இருந்தது.

Also Read: ஓ.பி.எஸ் மாஸ்டர் பிளான்; தினகரன் மகள் திருமணப் பின்னணி; தொகுதி மாறும் எடப்பாடி? - கழுகார் அப்டேட்ஸ்!

போடியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

அனைத்து போஸ்டரிலும், ”#2021 CM FOR OPS” என்ற ஹேஸ்டேக் இடம்பெற்றிருந்தது. இந்த போஸ்டர் குறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் விசாரித்த போது, “கடந்த சில நாட்களாக, அமைச்சர்கள் மாறி, மாறி கருத்து சொல்லிக்கொண்டிருந்தனர். ராஜேந்திரபாலாஜியும், ஜெயகுமாரும் வெளியிட்ட கருத்துகளால், கட்சியில் சிறு சலசலப்பு ஏற்பட்டது. அதனை தீர்க்க, கட்சி தலைமையகத்தில் ஆலோசனைக் கூட்டமும் நடந்தது. இது அனைவரும் அறிந்ததே.

போடியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

Also Read: தேனி: `சுடுகாட்டில் இருப்பதும் நல்லதுதான்!' - ஓ.பி.எஸ் சொன்ன விளக்கம்

இதற்கிடையில், கட்சியில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு முதல்வர் எடப்பாடியார் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்றும், ஒதுக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுவந்த நிலையில், அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத கட்சி நிர்வாகிகள் சிலர் இப்படி போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதற்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் எந்த தெடர்பும் இல்லை. இது கட்சி நிர்வாகிகள் தனிபட்ட முறையில் செய்த காரியம் இது” என்று முடித்துக்கொண்டனர்.

போஸ்டர்

தேனி மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்காண போஸ்டர்களை ஒரே இரவில் ஒட்டியுள்ளதால், பெரும் பணச் செலவு ஏற்பட்டிருக்கும். ஓ.பி.எஸ் சொல்லாமல், இவ்வளவு பணம் செலவு செய்திருக்க மாட்டார்கள். இது ஓ.பி.எஸ்’ன் அரசியல் ராஜதந்திரம் தான் என்று கட்சிக்குள் சிலரும், எதிர்கட்சி நிர்வாகிகளும் முனுமுனுப்பதை நம்மால் கேட்க முடிகிறது.

போஸ்டர்

Also Read: இ.பி.எஸ், ஓ.பி.எஸ்... யார் முதல்வர் வேட்பாளர்?

முன்னதாக, எடப்பாடிக்கு ஆதரவாக, கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையனின் மகன், பாலமணிமார்பன், தேனி முழுவதும் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் பின்னர், இப்போது ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரால், தேனி அரசியல் வட்டாரத்தில் அரசியல் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/politics/ops-chief-minister-of-tamil-nadu-stir-by-the-poster-pasted-in-theni

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக