பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியாவில் எடுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு வரலாற்றில் முதல் முறையாக தள்ளிப்போயுள்ளது. முதல் கட்டமாக ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை வீடுகளின் கணக்கெடுப்பில் 14 கேள்வியும், அதன் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாடு முழுவதும் 2021 பிப்ரவரி 9 முதல் 28 வரை நடைபெறுவதாய் இருந்தது.
இது இந்தியாவின் 16-வது இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பாகும்.
சுதந்திரம் அடைந்த பிறகு மேற்கொள்ளும் எட்டாவது கணக்கெடுப்பாகும்.
முதன்முறையாக கணக்கெடுப்பிற்கு மொபைல் செயலியை உபயோகித்தல் என புதுமையான முறையை கையாள திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
1948 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து சட்டம் இயற்றப்பட்டது. சுதந்திரம் அடைந்த பின், முதல் முறையாக கடந்த 1951 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது முப்பத்தாறு கோடியே பத்து இலட்சத்து எண்பத்து எட்டாயிரத்து தொன்னூறு.
இம் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும் தவிர்க்கப்பட்டு, கடந்த கால புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்த மாநிலத்திற்கான தரவு எடுக்கப்பட்டது. 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தியாவின் 16 வது கணக்கெடுப்பாகும். முதல்கட்ட கணக்கெடுப்பில் 14 கேள்விகளும், இரண்டாம் கட்ட கணக்கெடுப்பில் 34 கேள்விகளும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டது. இதில் முதன் முறையாக திருநங்கைகள் பற்றிய கணக்கெடுப்பு சேர்க்கப்படுகிறது.
#மக்கள் தொகை கணக்கெடுப்பு வரலாறு
சந்திரகுப்த மெளரியர் காலத்தில் போருக்காக நாட்டில் உள்ள இளைஞர்களின் எண்ணிக்கை கணக்கெடுத்ததாக கூறப்படுகிறது.
இந்தியாவின் முதல் முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பு 1830 ஆம் ஆண்டில் ஹென்றி வால்டர் டக்காவில் (இப்போது டாக்கா) நடத்தப்பட்டது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் பாலினம், வயதுவாரியாக, வீடுகளின் புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டன.
Also Read: லாக்டெளனில் சோலோ ஹீரோவான தபால்துறை! #MyVikatan
அதன் பின் பிரிட்டிஷார் காலகட்டத்தில் சில இடங்களில் அவ்வப்போது எடுக்கப்பட்டாலும் 1872ம் ஆண்டு வங்காளத்தில் மேயோ பிரபு காலத்தில் எடுக்கப்பட்டது. பிறகு 1881ம் ஆண்டு ரிப்பன் பிரபு காலத்தில் முறையாக நடத்தப்பட்டதுடன் இனி பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டது. 1921 மற்றும் 1931 சுதந்திர போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டாலும் சாதிவாரியாக கடைசியாய் கணக்கெடுக்கப்பட்டது.
ஒரு பகுதியில் கணக்கெடுப்பு நடத்தும் நிலை இல்லையெனில் இடைக்கணிப்பு முறையில் மக்கள் தொகை தீர்மானிக்கப்பட்டு பட்டியலில் சேர்க்கப்படும். 1991 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் சில அரசியல் காரணங்களுக்காக கணக்கெடுப்பு பாதிக்கப்பட்டது. 2010 ஆம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தொடங்கியது. ஆசிரியர்கள், சத்துணவுப் பணியாளர்கள், ஓய்வுபெற்ற ஊழியர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு ஒவ்வொருவருக்கும் 120 முதல் 150 வீடுகள் அல்லது 600 நபர்கள் வரை கணக்கெடுப்பார். 2011 பிப்ரவரி மாத இறுதிவரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது. குறிப்பிட்ட ஒருநாளில் மாலை 6 மணி முதல் குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் வீடற்றோரின் தகவல்கள் இரவு வரை சேகரிக்கப்பட்டன.
#இந்தியாவில் மக்கள் தொகை
இந்தியாவில் மக்கள் தொகை வளர்ச்சி வீதத்தை நான்கு நிலைகளாக பிரிக்கிறார்கள்..
1891-1921 வரை மக்கள் தொகையின் தேக்கநிலை என்றும், 1921-1951 வரை சீரான வளர்ச்சி நிலை,1951-1981 வரை விரைவான உயர் வளர்ச்சி நிலை,1981-2011 வரை குறைவான அறிகுறிகள் கொண்ட உயர்ந்த வளர்ச்சி நிலை என வரையறுக்கிறார்கள். 2011ல் ஆண் பெண் இருவரது சராசரி ஆயுட்காலம் 70 வயதிற்கு மேல் உயர்ந்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது வெறும் தரவு அடிப்படையிலான புள்ளி விவர சேகரிப்பு மட்டுமல்ல. இதன் முடிவுகள் பொது மக்கள் பயன்படுத்தத்தக்க வகையில் வெளியிடப்படும். அனைத்து தரப்பினருக்கும் தேவையான விபரங்கள் கிடைக்கும். பொருளாதார நிலையை அறிந்து கொள்வதுடன் எதிர்கால திட்டங்களுக்குப் பயன்படும்.
*மாநகர/நகர/கிராம நிர்வாக திட்டங்களுக்குப் பயன்படுகிறது.
*2021 கணக்கெடுப்பு உலகின் மிகப்பெரிய கணக்கெடுப்பாக கருதப்படுகிறது.
*1901முதல் 1951 வரை 12.27 கோடியும் 1951 முதல் 2011 வரை 85 கோடியும் அதிகமாகியுள்ளது.
*சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்ய
தேர்தல் நடத்த,
*வேலைவாய்ப்பினை திட்டமிட, ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டுக்கு உதவ வழிவகை செய்கிறது.
#கட்டுப்பாடு
இந்தியாவில் முதன்முறையாக 1952ல் குடும்பக் கட்டுப்பாட்டிற்கான தேசிய திட்டத்தை துவங்கியது.
1959 ல் சென்னையில் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்பவர்களுக்கு 30 ரூபாயும் உடன் அழைத்து வருவதற்கு 15 ரூபாய் வழங்கும் தலைமைச் செயல் அனுமதி வழங்கியிருந்தார். இந்தியாவில் குடும்ப கட்டுபாட்டை செயல்படுத்திய பின்னர் மேலை நாடுகளிடம் விழிப்புணர்வு ஏற்பட்டது.
*1967ல் பெண்களுக்கான கருத்தடை மாத்திரையும்,1968ல் ஆணுறையும் அமெரிக்க நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டன. 1971ல் மருத்துவ கருக்கலைப்பு சட்டம் 20 வாரங்களுக்கு மேற்பட்ட கருவை கலைக்க அனுமதிக்காதவாறு இயற்றப்பட்டது.
*தற்போது கருக்கலைப்பு 20 வாரங்களிலிருந்து 24 வாரங்களாக உயர்த்தும் சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
*2016 குடும்ப மேம்பாட்டுத் திட்டம் துவங்கி இனப்பெருக்க வளர்ச்சி மிகுதியாய் உள்ள 7 மாநிலங்களில் செயல்படுத்தி 2025 ம் ஆண்டுக்குள் இனப்பெருக்க விகிதத்தை 2.1 சதவீதமாய் குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
*சஞ்சய் காந்தியின் குடும்ப கட்டுப்பாட்டு திட்டம் அப்போது எமர்ஜென்சி காலத்தில் பரவலாய் பேசப்பட்டது. ஆண்களுக்கான கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சையை நாடு முழுவதும் செயல்படுத்த திட்டம் தீட்டி டெல்லியில் முதலில் அமல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. ரூ 75 பணம் ஒரு டின் நெய், ஒரு வாரம் சம்பளத்துடன் விடுப்பு போன்றவை "வாசெக்டமி" அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இரண்டு பிள்ளைகள் உள்ள அரசு ஊழியர்கள் குடும்பங்களில் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டால் தான் ஊதிய உயர்வு, பதவி உயர்வு, வருமான வரி கட்ட ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க எல்லாவற்றிற்கும் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்ட சான்றிதழை கொடுப்பது கட்டாயமானது பின் அவை நீக்கப்பட்டன.
#மக்கள் தொகை பிரச்சனையில் இந்தியா எதிர்கொண்ட சவால்கள்
1951 இந்தியாவின் மக்கள் தொகை 36.1 கோடியாக இருந்து 2011ல் 120 கோடியாக உயர்ந்தது. 2027ல் சீனாவைத் தாண்டிவிடும் என்றும், 2050ல் 160 கோடியைத் தாண்டும் என்று ஐ.நா சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.1966ல் ஒரு பெண்ணுக்கு 6 குழந்தைகள் என்னும் சராசரி 1992 ல் 3.8 குழந்தைகளாக குறைந்தாலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்தியாவில் உள்ள 621 மாவட்டங்களில் 174 மாவட்டங்கள் 2.1 கருத்தரிப்பு அளவில் இருந்தாலும் 9 மாநிலங்களில் 72 மாவட்டங்கள் சராசரி 4 குழந்தைகள் என்கிற விகிதத்தில் உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகையில் இந்தியா முதலிடம் பிடிக்குமென கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2001-2011ல் இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி 17.64% ஆகும். அதிக பிறப்பு விகிதமும் குறைந்த இறப்பு விகிதமும் சவாலாய் உள்ளன. 2025ல் சீனாவை மிஞ்சிவிடும் என சொல்லப்படுகிறது. இந்தியாவின் வறுமைக்கு மக்கள் தொகைதான் காரணமாக இருக்கும் என மால்தஸின் கூற்றை நினைவு கூற வேண்டியுள்ளது.
1798ல் மக்கள் தொகை குறித்த முறையான கோட்பாட்டை தாமஸ் இராபர்ட் மால்தஸ் வெளியிட்டது முதல் விழிப்புணர்வாய் உலகத்திற்கு எடுத்துச் சொன்னது. ஆனாலும் அவரின் கூற்றுகளில் உணவு உற்பத்தி கூட்டல் வீதத்திலும், மக்கள் தொகை பெருக்கல் வீதத்தில் 25 ஆண்டுகளில் இரட்டிப்பாகிவிடும் எனும் கூற்று மெய்ப்பிக்கப்படவில்லை.
விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் குறைக்க முடியும். ஆனால் கொரோனா தொற்று போன்றவை தற்போது அச்சத்தை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன. NRC,NPR ஐ பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்.. இது குறித்த அச்சமும் மக்கள் மனதில் இருக்கின்றன. அதனை விவாதித்து ஒருமித்த முடிவெடுத்தால் மக்கள் தங்களை பத்தாண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு எனும் தேசிய பணியில் மக்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள தயாராய் இருக்கிறார்கள்.
-மணிகண்டபிரபு
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
source https://www.vikatan.com/oddities/miscellaneous/population-census-got-delayed-for-the-first-time
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக