Ad

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

Corona Live Updates: உலக அளவில் 1.84 கோடி; இந்தியாவில் 18.5 லட்சத்தைக் கடந்த பாதிப்பு!

இந்தியாவில் 18.5 லட்சத்தைக் கடந்த பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,55,745 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 52,050 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 803 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,938 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 11,46,879 ஆகவும் உயர்ந்துள்ளது.

Also Read: அயோத்தி: `கொரோனா அச்சம்; மோடி குறித்து கவலை!’ - அடிக்கல் நாட்டு விழாவை தவிர்க்கும் உமா பாரதி?

கொரோனா - உலக நிலவரம்!

Corona

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,84,40,689 உயர்ந்துள்ளது. 1,16,72,261-க்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 48,62,174 ஆக அதிகரித்திருக்கிறது. இதனால் 1,58,929 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

Also Read: கொரோனா: `சரியான தடுப்பு மருந்து கிடைக்காமலும் போகலாம்!’ - எச்சரிக்கும் WHO



source https://www.vikatan.com/news/general-news/04-08-2020-corona-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக