Ad

புதன், 19 ஆகஸ்ட், 2020

கோவை: `இரண்டு ஆண்டுகளாகப் பயிற்சி; மனஉளைச்சல்!’ - நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை

கோவை ஆர்.எஸ்.புரம் வெங்கடசாமி சாலை கிழக்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி சுமதி. இந்த தம்பதிக்கு 19 வயதில் சுபஸ்ரீ என்ற மகள் இருந்தார். சுபஸ்ரீ கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக தனியார் அகாடமி ஒன்றில் பயிற்சி எடுத்து வந்தார்.

மாணவி வீட்டில்..

கொரோனா வைரஸ், ஊரடங்கு காரணமாக நீட் தேர்வு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இதனிடையே, செப்டம்பர் 13-ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என அறிக்கப்பட்டுள்ளது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது் இதையடுத்து, நீட் உள்ளிட்ட தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. ஆனால், நீட் தேர்வை தள்ளிவைக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது.

Also Read: கொரோனா அழுத்தம், பயிற்சியில்லை... நீட் தேர்வை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் மாணவர்கள்? #KnowNeetNoNeet

இந்நிலையில், நீட் தேர்வு பயத்தால் சுபஸ்ரீ மனஉளைச்சலில் இருந்தார் என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அவர் நேற்று மாலை அவர்களது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சுபஸ்ரீயின் தாயார் சுமதி அளித்த புகாரின் அடிப்படையில் ஆர்.எஸ் புரம் காவல்துறையினர், அவரது உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவி தற்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவி வீட்டில்..

உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு தி.மு.க மாவட்ட பொறுப்பாளர்கள் சி.ஆர் ராமசந்திரன், நா.கார்த்தி எம்.எல்.ஏ ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளனர். நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை செய்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: நீட்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு! தமிழக அமைச்சரவை ஒப்புதல் #NowAtVikatan



source https://www.vikatan.com/news/death/coimbatore-student-committed-suicide-in-fear-of-neet-exam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக