Ad

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

மக்கள் நீதி மய்யம்: `நற்பணிமன்றம் டு நிர்வாகக் குழு!’ - தேர்தலை ஒட்டி நடக்கும் மாற்றங்கள்?

தமிழகத்தில் வரும் 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை நடத்துவதற்கான பணிகளை ஊரடங்கு முடிந்ததும் தேர்தல் ஆணையம் தொடங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர். தேர்தல் வருவதை ஒட்டி அனைத்துக் கட்சிகளும் நிர்வாகிகள் மாற்றம் உட்பட பல்வேறு விஷயங்களில் தங்களது கவனத்தை செலுத்தி வருகின்றன. இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் நிர்வாக ரீதியிலான சில மாற்றங்கள் நடந்து வருகின்றன.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்

அவ்வகையில், கட்சியின் செயற்குழுவில் இருக்கும் நற்பணி மன்றத்தின் மாநிலச் செயலாளர் தங்கவேலுவுக்கு கட்சியின் நிர்வாகக் குழுவில் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தங்கவேலு கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக நற்பணி மன்றத்தில் செயல்பட்டு வந்துள்ளார். இந்தநிலையில் அவருக்கு தற்போது கட்சியின் உயரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியைப் பொருத்தவரை நிர்வாகக் குழு என்பது மிகவும் வலிமையான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. கட்சியின் அடுத்த கட்ட மற்றும் முக்கிய நடவடிக்கைகளை இந்த நிர்வாகக் குழுதான் எடுக்கும். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் தரப்பில் பேசியபோது, `தேர்தல் நேரங்களில் உழைப்பவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்’ என்று தெரிவித்தனர். தேர்தல் நெருங்கும்போது இன்னும் பல அதிரடிகள் இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.

Also Read: முதல் கொலையைக் கண்டுபிடிக்கல; அந்தத் தைரியத்தில் அடுத்த கொலை! - சென்னை மநீம நிர்வாகியின் பின்னணி



source https://www.vikatan.com/news/politics/thangavelu-appointed-in-mnm-administration-team

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக