Ad

புதன், 19 ஆகஸ்ட், 2020

கேரளா: `நான் அவசியத்துக்கு மட்டும் சிரிக்கும் ஆளாக்கும்!’ - மனம் திறந்த முதல்வர் பினராயி விஜயன்

கேரள அரசு சார்பில் "சபா டி.வி" என்ற தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன் முதலாக சட்டசபை நிகழ்வுகள் மற்றும் அரசு சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப கேரள அரசு இந்த டி.வி-யை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆட்சிக்கு வந்த பிறகு டி.வி அல்லது பத்திரிகைகளுக்கு கூட்டாக மட்டுமே பேட்டி அளித்துவந்தார் பினராயி விஜயன். ஆனால் அவர் ஒரு செய்தி நிறுவனத்துக்காக பிரத்யேக பேட்டி அளித்தது இல்லை. இந்த நிலையில் சபா டி.வி-யில் நடந்த தனி நேர்காணலில் பினராயி விஜயன் கலந்துகொண்டார். காங்கிரஸ் கட்சியின் கேரள மாநில துணைத்தலைவரும் எம்.எல்.ஏ-வுமான வி.டி சதீசன் இந்த நேர்காணலை நடத்தினார். அதில் அரசியல், பொதுவாழ்வு உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பினராயி விஜயன் பதிலளித்தார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ வீ.டி.சதீசன்

வீ.டி.சதீசன் எம்.எல்.ஏ-வின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய பினராயி விஜயன் கூறுகையில், "நான் பொது வாழ்க்கையில் பல ஆண்டுகளாக உள்ளேன். நான் எம்.எல்.ஏ-வாக இருந்த சமயத்திலும் அதற்கு பிறகும் தனிக்கவனம் பெறவில்லை. ஆனால் மாநில அளவிலான நிலையை எட்டிய பிறகு மீடியாக்களை கையாள வேண்டிய நிலை ஏற்பட்டது.

சில விஷயங்களில் நமக்கு கடுமையாக பேசவேண்டிய நிலை ஏற்படும். அப்படி பேசும் சமயத்தில் அதை மறைத்துவைத்துவிட்டு, ஒரு சிரிப்பு சிரித்து கூறும் வழக்கம் எனக்கு கிடையாது. காட்சி ஊடகங்கள் வந்ததை தொடந்து காட்சிகளில் மாற்றம் வந்தது. அதனால் கடுமையாக கூறுவதை தொடர்ந்து காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பினார்கள். என்னை அறிந்தவர்கள் நான் சிரிக்காதவன் என கூறமாட்டார்கள். ஆனால் புகைப்படங்களில் சிரிக்காதவர் போன்ற நிலை உருவாகிவிட்டது.

சபா டி.வி நிகழ்ச்சியில் பினராயி விஜயன்

இயற்கையாகவே சிரிக்காத எனது புகைப்படங்கள் குறைவாக உள்ளது. சிலர் எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பார்கள். ஆனால் நான் அவசியத்துக்கு மட்டும் சிரிக்கும் ஆளாக்கும். எப்போதும் சிரிக்கும் வழக்கம் எனக்கு இல்லை. இதற்கு நான் வளர்ந்துவந்த முறையும் காரணமாக இருக்கலாம்" என்றார். சி.பி.எம் கட்சி முதல்வரை எதிர்கட்சியான காங்கிரஸை சேர்ந்த எம்.எல்.ஏ நேர்காணல் நடத்தும் ஆச்சர்ய நிகழ்வுகள் கேரளம் போன்ற மாநிலங்களில் மட்டுமே நடக்கும்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/kerala-cm-pinarayi-vijayan-interview-in-kerala-government-tv

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக