நாணயம் விகடன் சார்பில் ஆகஸ்ட் 10-ம் தேதி மாலை 6 மணி முதல் 7 மணி வரை, `நிதிச் சேவை, வேலை வாய்ப்புகள்' என்கிற ஆன்லைன் நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியை முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன் நடத்துகிறார். இலவச நிகழ்ச்சியான இதில், சில கூடுதல் தகுதியை ஏற்படுத்திக்கொள்வது மூலம் எப்படி நிதிச் சேவையில் ஈடுபட்டு பணம் ஈட்ட முடியும் என்பது விளக்கி சொல்லப்படுகிறது.
முதலீடு, காப்பீடு, நிதி ஆலோசனையின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கூடவே, இது குறித்து பொதுமக்களிடமும் விழிப்புணர்வு உயர்ந்து வருகிறது.
எதிர்காலத்தில் நிதிச் சேவை என்பது நல்ல வேலை மற்றும் தொழில் வாய்ப்பாக அமைய உள்ளது.
நிதிச் சேவை சார்ந்த சில படிப்புகளை படிப்பது மூலம் தகுதியை உருவாக்கிக்கொள்ள முடியும் என்பதையும் சுய தொழில் அல்லது பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலைக்கு சேர முடியும். அதற்கு வழிகாட்டும் நிகழ்ச்சிதான் நிதிச் சேவை வேலை வாய்ப்புகள்..!
Also Read: நாணயம் புக் ஷெல்ஃப் : வெற்றிக்கு உதவும் நம்பிக்கையுடன் பேசும் கலை! - கற்றுக்கொள்ளும் சூட்சுமங்கள்!
வ.நாகப்பன் பற்றி..
முதலீட்டு ஆலோசகர் மற்றும் பொருளாதார நிபுணர் வ.நாகப்பன். பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வருமான வரி உள்ளிட்ட பல நிதிச் சார்ந்த விஷயங்கள் ஆழந்த ஞானம் கொண்டவர். நிதி ஆலோசனையில் 25 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். மெட்ராஸ் ஸ்டாக் எக்சேஞ்சின் இயக்குநராக இருந்தவர். இப்போது எம்.எஸ்.இ ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் முதன்மை ஆலோசகராக இருக்கிறார்.
அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம்.
முன் பதிவு செய்ய
source https://www.vikatan.com/events/editorial/nanayam-vikatans-online-workshop-on-finance-service-job
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக