தேனி மாவட்டம் ஆண்டிபட்டி காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் காண்ட்ராக்டர் பாண்டி. இவரது மனைவி மீனா, இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகன் அபிஷேக் (வயது 15), கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். 9ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற நிலையில், 10 வகுப்பிற்கான பாடங்களை பள்ளி நிர்வாகம் ஆன்லைன் வகுப்பு மூலம், ஆசிரியர்களை வைத்து கற்றுக் கொடுக்கின்றனர். அபிஷேக் வீட்டில் இருந்து மொபைல் போன் மூலம் ஆன்லைன் வகுப்பில் கடந்த சில வாரங்களாக பாடங்களைப் படித்துவந்துள்ளார். இந்நிலையில், சில பாடங்கள் அபிஷேக்கிற்கு சரிவர புரியவில்லை என்றும், இதனால் ஆன்லைன் வகுப்பினை தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
Also Read: தேனி: `அழிக்கப்பட்ட படம்; சிக்க வைத்த செல்போன்!’ - கொலை வழக்கில் நீதிமன்றம் அதிரடி
ஆன்லைன் வகுப்பிற்குச் செல்லாதது குறித்து, பாண்டிக்கு தெரியவர, அபிஷேக்கை கண்டித்துள்ளார். தொடர்ந்து புரியாத ஆன்லைன் பாடங்களை கற்றுக்கொள்ள மனம் இல்லாத அபிஷேக், மனமுடைந்து நேற்று இரவு உணவு சாப்பிடாமல் தூங்கச் சென்றுள்ளார். குடும்ப உறுப்பினர்களும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில், இன்று அதிகாலையில், திடீரென அபிஷேக்கிற்கு வலிப்பு வந்துள்ளது. பதறிய குடும்பத்தினர், அபிஷேக்கிடம் விசாரிக்க, தான் விஷம் குடித்ததாக தெரிவித்துள்ளார்.
Also Read: `கேரளாவில் தாக்கப்படும் தேனி லாரிகள்; இரு மாநிலப் பிரச்னை அபாயம்!’ - கொதிக்கும் உரிமையாளர்கள்
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக அபிஷேக்கை தேனி கானாவிலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனையில், அபிஷேக்கை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வழியில் இறந்துவிட்டார் என கூறியுள்ளனர். ஆண்டிபட்டி காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். மாணவனின் உடல், பிரேத பரிசோதனைக்குப் பின்னர், பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Also Read: தேனி: `திருமணமானவருடன் பழக்கம்!’ - மகளைக் கொன்று தற்கொலை நாடகமாடிய தந்தை
ஆன்லைன் வகுப்பிற்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்துவரும் சூழலில், ஆன்லைன் வகுப்பு புரியவில்லை என கூறி மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், தேனியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/crime/depressed-10th-class-student-commits-suicide-in-theni
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக