Ad

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

புதுக்கோட்டை - `தினமும் 10 பேர் சாப்பிடணும்!' - குடும்பத்தைக் காப்பாற்றப் போராடும் பெரியநாயகி

புதுக்கோட்டை அருகே அழகம்பாள்புரத்தில் வசிக்கிறது ஆறுமுகத்தின் குடும்பம். மகன்கள், பேரன்-பேத்திகள், கொள்ளுப்பேரன்-கொள்ளுப்பேத்திகள் அழகான கூட்டுக்குடும்பம். ஆறுமுகத்திற்குப் பிறந்த 3 மகன்கள்,1மகள் என 4 பேர் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள். பார்வையற்ற தன் மூத்த மகன் சிதம்பரத்திற்குத் தனது உடன்பிறந்த தங்கை மகள் பெரியநாயகியைத் திருமணம் செய்து வைத்தார் ஆறுமுகம். பார்வையற்ற தன் மாமன் மகன் சிதம்பரத்தை, பெரியநாயகி இன்று வரையிலும் ஒரு குறையுமில்லாமல் பார்த்து வருகிறார். அதோடு, கணவரின் தம்பிகளுக்கும் சாப்பாடு போடுவதோடு தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து வருகிறார்.

ஆறுமுகத்தின் குடும்பம்

பார்வையற்ற சகோதரர்கள் 3 பேராலும் எந்த வேலையும் செய்ய முடியாத நிலையில், வேறுவழியின்றி கூட்டுக் குடும்பத்தை வழிநடத்தும் பொறுப்பைக் கையில் எடுத்துக்கொண்ட பெரியநாயகி கூலி வேலை, வீட்டு வேலைகளுக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். வீட்டில் ஒரு நாளைக்கு ஒரு வேளைக்கு 10 பேருக்காக உலை கொதிக்க வேண்டும். கொரோனா ஊரடங்கால், பெரிய நாயகிக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. சிதம்பரத்திற்கு வரும் ரூ.1,000 உதவித்தொகையை வைத்து மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கிறது அந்தக் கூட்டுக் குடும்பம்.

பெரியநாயகியிடம் பேசினோம்.`` `அண்ணனின் மூத்த மகன் சிதம்பரத்தை நீ தான் கல்யாணம் பண்ணிக்கிட்டு, நல்லபடியா பார்த்துக்கணும்னு' அம்மா அடிக்கடி சொல்லிக்கிட்டு இருப்பாங்க. அவங்க சொன்ன மாதிரியே அவரையே கல்யாணம் பண்ணிக்கிற சூழ்நிலை வந்திருச்சு. மொதல்ல, பார்வையற்றவர்ங்கிறதால, நம்மளால சமாளிக்க முடியுமான்னு கொஞ்சம் யோசனை இருந்துச்சு. ஆனாலும்,`நம்மளே கல்யாணம் பண்ணிக்கலைன்னா, வேற யாரு பண்ணிக்க முன்வருவாங்க.’ அதனால, அவரையே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டேன். நல்லபடியாகக் கல்யாணமும் ஆகிருச்சு. பார்வைதான் தெரியாது. ரொம்ப தங்கமான மனசு என் வீட்டுகாரருக்கு. என்னை எந்தச் சூழ்நிலையிலும் கஷ்டப்படுத்த மாட்டாரு. அதனாலயே, இன்னும் அவரை நல்லா பார்த்துக்கணும்னு எனக்குத் தோணும்.

Also Read: வேலூர்: `வாழ்நாளைக்கும் மறக்க மாட்டேன்’ - தாய், மகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கலெக்டர்

ஆறுமுகத்தின் குடும்பம்

அதனாலயே, இன்னும் அவரை நல்லா பார்த்துக்கணும்னு எனக்குத் தோணும். என் வீட்டுக்காரருக்கு இருந்த பிரச்னை, எங்களுக்குப் பிறக்கிற பிள்ளைகளுக்கு வந்திரக் கூடாதுன்னு தினமும் கடவுளை வேண்டிக்குவேன். அதுபடியே எந்த பிரச்னைகளும் இல்லாம, எனக்கு 3 பிள்ளைகளும் பிறந்தாங்க. வீட்டுக்காரரோட தம்பிங்க ரெண்டு பேரும் கண்ணு தெரியாதவங்கதான். நான் அண்ணியாக இருந்தாலும், என்னை அம்மா மாதிரிதான் பார்ப்பாங்க. அதனால, அவங்களுக்கும் சாப்பாடு, தேவையான உதவிகளைச் செய்துகொடுப்பேன். அவங்க ரெண்டு பேரும் எங்களோட பிள்ளைகள் மேல உசுரா இருப்பாங்க. அம்மா பக்கத்துலயே இருப்பதால, எனக்கு ரொம்பவே ஆதரவு. ரெண்டு மகன்கள்ல, ஒரு மகனுக்குக் கல்யாணம் ஆகி தனியா போயிட்டான். பொண்ணு கல்யாணம் பண்ணி மாப்பிள்ளையோட எங்க வீட்டுலதான் இருக்கா.

Also Read: புதுக்கோட்டை: யாசகம் பெற்று ஒருவேளைச் சாப்பாடு! - தவிக்கும் மாற்றுத்திறனாளி குடும்பம்

மாப்பிள்ளை ஒரு மாற்றுத்திறனாளி. ஆனால், ரொம்பவே நல்ல மனசு. அதனாலதான் அவரை என்னோட மகளுக்கு கல்யாணம் பண்ணி வச்சோம். மாப்பிள்ளை தையல் வேலைபார்த்து, அதில் கிடைக்கிற வருமானத்தையும் எனக்கு உதவியா குடும்பத்துக்குக் கொடுப்பாரு. கணவர் அவங்க தம்பிங்க 3 பேரும் ஆரம்பத்துல சின்ன, சின்ன வேலைகளை செஞ்சு ஒத்தாசையாக இருந்தாங்க. இப்ப அவங்களால எந்த வேலை செய்ய முடியலை. நானும் அவங்களை கஷ்டப்படுத்திறதில்லை. மாப்பிள்ளை கொஞ்சம் பணம் கொடுப்பாரு. என்னோட, மாப்பிள்ளையோட வருமானத்தை வச்சு மட்டும்தான் குடும்பம் ஓடிக்கிட்டு இருந்துச்சு. இப்போ, ஊரடங்கால் எனக்கு எந்த வேலையும் கிடைக்கலை. சுத்தமாக வருமானமே இல்லை.

ஆறுமுகத்தின் குடும்பம்

மாப்பிள்ளையும் கூலிக்குத்தான் வேலைபார்க்கிறாரு. சொந்தமா மாப்பிள்ளைக்கு ஒரு தையல் மிஷின் வாங்கிக் கொடுக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. ஆனா, இதுவரைக்கும் வாங்கிக்கொடுக்க முடியலை. மாப்பிள்ளைக்கும் ஸ்கூல் இல்லாதாதல் சட்டை ஆர்டர்கள் கிடைக்கலை. அவருக்கும் வேலை இல்லை. சாப்பாட்டிற்கு ரொம்பவே கஷ்டம். கணவருக்குக் கிடைக்கிற ரூ.1000-த்தை வச்சு மட்டும்தான் ஓட்டுறோம். ஒரு நேரத்துக்கு 10 பேர் சாப்பிடணும். இட்லி, தோசை எல்லாம் நாங்க சாப்பிட்டதே இல்லை. ரேஷன்ல அரிசி கிடைக்குது. தினமும் ரேஷன் அரிசி சாப்பாடுதான். காய்கறி விலை எல்லாம் ஏற்றத்தால, காசு கொடுத்து வாங்க முடியலை. இப்ப கொஞ்ச நாள் பல நேரம் தண்ணீர் கஞ்சிதான் சாப்பாடு. சின்ன பிள்ளைங்க இருக்கே அவங்களுக்காவது சாப்பாடு கொடுக்கணும்ல. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் கடன் எல்லாம் வாங்காமல் இதுவரைக்கும் ஓட்டிக்கிட்டு இருக்கோம். இன்னும் எத்தனை நாளுக்கு இது நீடிக்கும்ணு தெரியலை" என்கிறார் வேதனையுடன்.



source https://www.vikatan.com/news/tamilnadu/pudukottai-poor-family-severely-affected-due-to-corona-lock-down

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக