Ad

செவ்வாய், 6 டிசம்பர், 2022

கார்த்திகை தீப விளக்குகள், பயனுள்ள டிப்ஸ்! #VisualStory

விளக்குகள்

கார்த்திகை என்றாலே விளக்குகள்தான். வீட்டை அழகாக்கும் கார்த்திகை தீப விளக்குகளுக்கான பயனுள்ள டிப்ஸ்...

Oil

புது மண்சட்டி விளக்குகள் எண்ணெய் குடிக்காமல் இருக்க அவற்றைத் தண்ணீரில் மூன்று முதல் நான்கு மணி நேரம் ஊற வைத்து, பிறகு துடைத்துப் பயன்படுத்த வேண்டும்.

Hot Water

பழைய விளக்குகளில் படிந்திருக்கும் எண்ணெய்ப் பிசுக்கு நீங்க, வெந்நீரில் சிறிது வினிகர், சோப் பவுடர், சோடா உப்பு, சேர்த்து அதில் விளக்குகளை நன்கு ஊற வைத்துக் கழுவிப் பயன்படுத்த வேண்டும்.

பட்ஸ்

விளக்குகளுக்கு மஞ்சள், குங்குமம் வைக்கும்போது விரல்களை பயன்படுத்துவதைவிட `பட்ஸ்’ பயன்படுத்தி வைக்கும்போது அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கும்.

அட்டை

பழைய அட்டைகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி, விளக்குக்கு அடியில் வைத்து விளக்கேற்றலாம். இதனால் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டாலும் தரையில் படியாது.

நெயில் பாலிஷ்

விளக்கின் அடிப்பகுதியில் நெயில் பாலிஷை பூசி வைத்தாலும் அதைத் தாண்டி எண்ணெய் கசிவு ஏற்படாது.

கண்ணாடி விளக்குகள்

கண்ணாடி விளக்குகள், பெயின்ட் செய்யப்பட்ட விளக்குகள் என விதவிதமாகக் கிடைக்கும் விளக்குகளையும் வாங்கிப் பயன்படுத்தலாம்.

தீபங்கள்

கனமான பிளாஸ்டிக் பாட்டிலின் அடிப்பகுதியை மட்டும் எடுத்துவிட்டு, விளக்கின் மீது கவிழ்த்து வைத்தால் காற்றடித்தாலும் விளக்கு அணையாது.

பாத்திரம்

ஒவ்வொரு திரியாக எடுத்து விளக்கிலிட்டு எண்ணெய் ஊற்றுவதற்குப் பதிலாக, மொத்தமாக ஒரு டப்பாவில் எண்ணெய் ஊற்றி, திரியைப் போட்டு ஊறவைத்துக்கொண்டால், எளிதில் பயன்படுத்திக்கொள்ளலாம்.



source https://www.vikatan.com/ampstories/spiritual/functions/karthigai-deepam-super-tips-for-maintaining-lights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக