Ad

திங்கள், 5 டிசம்பர், 2022

மதுரை பாஜக முக்கிய நிர்வாகிகள் விலகல் - காரணம் என்ன?!

மதுரை மாவட்ட பா.ஜ.க முக்கிய நிர்வாகிகள் சிலர் கட்சியிலிருந்து வெளியேறி வெவ்வேறு கட்சிகளில் இணையும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயராம் அ.ம.மு.கவில்..

சில மாதங்களுக்கு முன் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பா.ஜ.கவினர் நடத்தியதாக சொல்லப்பட்ட செருப்பு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து மதுரை மாநகர தலைவராக இருந்த டாக்டர் சரவணன் பா.ஜ.கவிலிருந்து உடனே விலகினார்.

அதிமுகவில் இணைந்த ராஜா சீனிவாசன்

அதைத்தொடர்ந்து இரண்டு மாவட்டமாக செயல்பட்ட மதுரை மாவட்ட பா.ஜ.க, மூன்று மாவட்டமாக பிரிக்கப்பட்டு தலைவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

இந்நிலையில் பா.ஜ.க பொருளாதார அணியில் மாநிலத் துணைத்தலைவராக இருந்த மதுரையைச் சேர்ந்த முனியசாமி சென்னையில் கமல்ஹாசனை சந்தித்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். இவர் ஏற்கனவே மய்யத்திலிருந்துதான் பா.ஜ.கவுக்கு வந்தார்.

அமமுகவில் இணைந்த ஜெயராம்

பா.ஜ.க வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஜெயராமன் அ.ம.மு.கவில் இணைந்தார். சில நாள்களுக்கு முன் முன்னாள் கவுன்சிலர் ராஜா சீனிவாசன் செல்லூர் ராஜூ முன்னிலையில் அ.தி.மு.கவில் இணந்தார். இவரும் அ.தி.மு.கவிலிருந்து பா.ஜ.கவுக்கு வந்தவர்தான்.

இதுகுறித்து பா.ஜ.க.வின் மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரனிடம் கேட்டோம், "இவர்கள் யாரும் நீண்டகாலம் பா.ஜ.க.வில் பணியாற்றியவர்கள் இல்லை. திடீரென்று வந்தவர்கள்,

சுசீந்திரன்

டாக்டர் சரவணன் விலகியபோதே போய்விட்டார்கள். ரொம்ப நாளாயிடுச்சு. அவர்கள் ஏற்கெனவே இருந்த கட்சியில் தற்போது சேர்ந்துள்ளார்கள். அதனால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவ்வளவுதான்" என்றார்.



source https://www.vikatan.com/news/politics/bjp-in-trouble-in-madurai-politics-whats-happening

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக