Ad

வியாழன், 30 ஜூன், 2022

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை கோரிய மனு; சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு!

பல்வேறு பரபரப்புக்கு மத்தியில் ஜூன் 23-ம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், கே,பி.முனுசாமி ஆகியோர் அறிவித்தனர். மேலும், நிரந்தர அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டார். அடுத்த பொதுக்குழுக் கூட்டம் ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என தமிழ்மகன் உசேன் அறிவித்தார்.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை மீறி ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

அதிமுக பொதுக்குழு

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி தலைமையிலான அமர்வு, ``ஜூலை 11-ம் தேதி நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழுவுக்குத் தடைவிதிக்கும் கோரிக்கையை விசாரிக்க முடியாது. இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் மனுவை 4-ம் தேதி விசாரிக்க ஒப்புதல் வழங்குகிறோம்'' எனத் தெரிவித்திருக்கின்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/chennai-high-court-refused-to-ban-admk-general-body-on-july-11

சீனா: பாஸ்போர்ட்டை மாற்றி வெளிநாடு பயணம்; சிக்கிக்கொண்ட ட்வின்ஸ் சகோதரிகள்!

சீனாவில் வெளிநாட்டுப் பயணங்களுக்காக தங்களின் பாஸ்ப்போர்ட்டை மாற்றிக்கொண்ட இரட்டைச் சகோதரிகளில் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

இது குறித்து சீனாவின் ஹார்பின் டெய்லி ஊடகம், ``இரட்டைச் சகோதரிகளான ஹாங், வெய் ஆகியோரில், ஹாங் என்பவர் தன் கணவருடன் வெளிநாடு செல்ல முயன்றபோது, தன் சகோதரியின் பாஸ்போர்ட்டை மாற்றிக்கொண்டது தெரியவந்தது" என போலீஸார் கூறியதாகச் செய்தி வெளியிட்டிருக்கிறது. ஹாங், தன் கணவருடன் ஜப்பான் செல்ல நினைத்திருக்கிறார். ஆனால், அவருக்கு விசா மறுக்கப்படவே, அவர் தன் சகோதரி வெய்-ன் பாஸ்போர்ட்டை மாற்றிக்கொண்டிருக்கிறார். அவர்மீது சந்தேகமடைந்த விமான நிலைய அதிகாரிகள் அவரை மடக்கி விசாரித்தனர். அதில், சீனா, ஜப்பான், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு குறைந்தது 30 முறை பயணம் செய்ய ஹாங், தன் சகோதரியின் பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தியிருப்பது தெரியவந்திருக்கிறது.

விமான நிலையம்

இதே போல், மறுபுறம் வெய்-யும், தன் சகோதரியின் பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி நான்கு முறை தாய்லாந்துக்குச் சென்று வந்திருக்கிறார். இருப்பினும், போலீஸ் தரப்பிலிருந்து இரட்டைச் சகோதரிகளின் அடையாளம், வயது குறித்த விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

இது குறித்து ஊடகங்களிடம் பேசிய குடியேற்ற நிர்வாகத்துறைச் (Immigration Management Department) சேர்ந்த உள்ளூர் போலீஸ் அதிகாரி வாங் சியாடோங், ``இது போன்று பயணங்களுக்கு டி.என்.ஏ-வைப் பயன்படுத்திக்கொள்வதென்பது, சட்டவிரோதமானது. பாஸ்போர்ட் பிரச்னைகள் குறித்து குடியேற்ற நிர்வாகத்துறை அதிகாரிகளிடம் நீங்கள் விசாரிக்கலாம். ஆனால் அதற்காக வேறொருவரின் பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி வெளிநாடு செல்ல முடியாது. இது தண்டனைக்குரிய குற்றமாகும்" எனத் தெரிவித்தார்.



source https://www.vikatan.com/news/international/in-china-twin-sisters-illegally-exchange-their-passports-for-foreign-journey

``திராவிட மாடல் என் முகம்... ஒன்றியம் என் குரல்; நான் விளம்பரப் பிரியரா?’’ - ஸ்டாலின் விளக்கம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகப் புதிய கட்டடத்தை இன்று காலை திறந்துவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசு விழாவிலும் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், ‘‘பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டதாக நினைப்பதைபோல சிலர் என்னைப் பற்றிப் பேசுகிறார்கள். ‘ஸ்டாலின் விளம்பரப் பிரியராக இருக்கிறார்’ என்று சொல்கிறார்கள். எனக்கு, எதற்கு விளம்பரம்... 55 ஆண்டுக்காலமாக அரசியலில் இருக்கிறேன். இனிமேலும், எனக்கு விளம்பரம் தேவையா... ‘நாடோடி இனத்தவர் வீட்டுக்குப் போனார். பழங்குடியினர்வீட்டுக்குப் போனார். அங்கேபோய் சாப்பிட்டார்’ என்று வரும் செய்திகளைவைத்து, அவர்கள் சொல்கிறார்கள். அந்தச் சந்திப்புக்குப் பின்னால் எத்தனை நலத்திட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

நாடோடி இனத்தவர் வீட்டுக்கும், பழங்குடியினர் வீட்டுக்கும் சென்றதன் மூலமாக, ‘இது நமது அரசு’ என்பதை அவர்கள் மனதில் ஆழமாக விதைத்திருக்கிறோம். அதுதான் முக்கியமானது. ஏதோ, ஒருநாள் அவர்கள் வீட்டுக்குச் சென்றதன் மூலமாக என்னுடைய கடமை முடிந்துவிட்டது என்று நினைத்து, சும்மா இருந்துவிட்டேனா?

முதலமைச்சர் ஸ்டாலின்

இதே ராணிப்பேட்டையில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சியின் மூலமாக உங்களைச் சந்தித்து மனுக்களைப் பெற்றேன். சிலரைப் பேசவைத்தேன். அப்போது, நாடோடி இனப் பெண்கள் சிலர் மேடைக்கு வந்து, ‘நாங்களும் பேசணும்’ என்று கேட்டார்கள். பேசவைத்தோம். அவர்களின் கோரிக்கையை கவனமாகக் கேட்டேன். ஆட்சிக்கு வந்ததும், அதையெல்லாம் மறந்துவிடவில்லை என்பதன் அடையாளமாகத்தான் பல்வேறு திட்டங்களை செய்துகொண்டிருக்கிறோம். இன்றைக்கும் 291 நரிக்குறவ இன மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இருளர் பழங்குடியின மக்களுக்கு அரசினுடைய அனைத்து நலத் திட்டங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. விளிம்புநிலை மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீர்க்கிறோம்.

இன்றைக்கு நலத்திட்ட உதவிகளைப் பெறக்கூடிய 60,795 நபர்களில் 5,767 பேர் இருளர் இனமக்கள். அதேபோல், திருநங்கைகள் 20 பேருக்கும், 9,522 மாற்றுத்திறனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டிருக்கின்றன. 101 மாற்றுத்திறனாளி மற்றும் சிறப்புக் குழந்தைகளின் தாய்மார்களுக்கு மின்மோட்டாருடன்கூடிய தையல் இயந்திரம் வழங்கி, அவர்கள் மூலமாக குறைந்த விலையில் மஞ்சள் பைகளை தயாரித்து விநியோகிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருக்கிறது.

இந்த அரசாங்கத்தினுடைய ‘இதயம்’ என்பது இத்தகைய விளிம்புநிலை மக்களின் மகிழ்ச்சியில்தான் இருக்கிறது. பழங்குடியின மக்களுக்கு ஓர் அடையாள அட்டை கொடுப்பது என்பது பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை உருவாக்குவதற்கு இணையானது. இது, விளம்பரத்துக்காகச் செய்யப்படுவது அல்ல. பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படும் புத்தகப் பைகளில், கடந்த ஆட்சியைப்போல முதலமைச்சரான நான் என்னுடைய படத்தையும் போட்டுக்கொண்டால் விளம்பரம் என்று சொல்லலாம். கடந்த ஆட்சிக்காலத்தில் அப்போதைய முதலமைச்சர் படத்தை அச்சிட்டு தயாரிக்கப்பட்ட பைகள் மிச்சம் இருந்தன. ‘அதைப் பயன்படுத்த வேண்டாம்’ என்று அமைச்சர்களும் அதிகாரிகளும் என்னிடம் சொன்னார்கள். அதைப் பயன்படுத்தாமல் போனால், 17 கோடி ரூபாய் அரசுக்கு வீண் இழப்பு ஏற்படும். பணம் வீணாகும். பரவாயில்லை. முன்னாள் முதலமைச்சர்களின் படமே இருக்கட்டும் என்று சொல்லி, அந்தப் பைகளை கொடுக்கச் சொன்னவன்தான் இந்த ஸ்டாலின்.

நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்

விளம்பரம் எனக்குத் தேவையில்லை. ஏற்கெனவே கிடைத்த பெருமையையும் புகழையும் காலமெல்லாம் கரையாமல் காப்பாற்றினாலே போதும் என்று நினைப்பவன் நான். ‘திராவிட மாடல்’ என்று சொன்னால் காலமெல்லாம் இந்த ஸ்டாலின் முகம்தான் நினைவுக்கு வரும். ‘இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்’ என்று சொன்னால் போதும், என் குரல்தான் நினைவுக்கு வரும். ‘21 விழுக்காடு இட ஒதுக்கீட்டை இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்த்தது யார்?’ என்றால், என் முகம்தான் நினைவுக்கு வரும். ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் என்பது யார் ஆட்சிக்காலத்தில் அமலானது?’ என்று கேட்டால், அப்போதும் என் முகம்தான் நினைவுக்கு வரும். ‘தமிழ்நாட்டின் அம்பேத்கரான பெரியார், இந்தியாவின் பெரியாரான அம்பேத்கர் ஆகியோரின் பிறந்தநாள்களை சமூகநீதி நாளாகவும், சமுத்துவ நாளாகவும் அறிவித்தது யாரென்றால்?’ என் பெயர்தான் நினைவுக்கு வரும்.

கையில் காசு இல்லை என்றாலும் போகவேண்டிய இடத்துக்கு போய்ச் சேரலாம் என்ற நம்பிக்கையோடு பேருந்துகளில் ஏறும் பெண்களுக்கு என்னாளும் என் முகம்தான் நினைவுக்கு வரும். ‘நான்’ என்று சொல்வதை தனிப்பட்ட ஸ்டாலின் என்று நினைக்க வேண்டாம். நாம் அனைவரும் சேர்ந்த கூட்டுக் கலவைதான் நான். என்றும் உங்களில் ஒருவன்தான். நமக்கான ஆட்சி இது. இந்த ஆட்சியானது, கடந்த 10 ஆண்டுக்காலமாக தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கக்கூடிய பள்ளங்களை நிரப்பிவருகிறது. துன்பங்களைப் போக்கிவருகிறது. தொய்வைத் துடைத்துவருகிறது. அதேசமயத்தில், ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க எந்நாளும் உழைத்துவருகிறது. என் சக்தியை மீறி உங்களுக்காக உழைப்பேன்’’ என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/ranipet-government-ceremony-chief-minister-stalins-speech

உ.பி: அடிக்கடி சண்டை; ஆண் நண்பர்கள் மூலம் சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சகோதரி

உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் கரும்புத்தோட்டத்தில் 13 வயது மைனர் பெண் ஒருவர் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். அவரின் உடலை பிரேத பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்து நெரித்துக் கொலைசெய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸார் தனிப்படை அமைத்து கொலையாளிகள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் கொலைசெய்யப்பட்ட பெண்ணின் மூத்த சகோதரியின் நடவடிக்கையில் போலீஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. உடனே போலீஸார் அவரைத் தனியாக அழைத்து தீவிர விசாரணை நடத்தியதில் அவர்தான் இந்தக் கொலையின் முக்கியக் குற்றவாளி என்று தெரியவந்தது. இது குறித்து மாவட்ட எஸ்.பி சஞ்சீவ் கூறுகையில், ``இரண்டு சகோதரிகளும் வீட்டில் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டனர்.

கைதானவர்கள்

சமீபத்தில் 19 வயது மூத்த சகோதரி நான்கு பேருடன் ஒரே நேரத்தில் பழகிவந்திருக்கிறார். இதை இளைய சகோதரி கண்டுபிடித்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதனால் இது குறித்து ஆண் நண்பர்களிடம் பேசி தனது சகோதரிக்கு தக்க பாடம் புகட்ட நினைத்தார். எனவே, தனது இளைய சகோதரியை ஊருக்கு வெளியில் இருக்கும் கரும்புத் தோட்டத்துக்கு இயற்கை உபாதையைக் கழித்து வரலாம் என்று கூறி அழைத்துச் சென்றார்.

அங்கு ஏற்கெனவே இருந்த அவரின் ஆண் நண்பர்கள் ரஞ்சித் சௌகான், அமர்சிங், அங்கித், சந்தீப் ஆகியோர் இளைய சகோதரியைக் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றனர். அதற்கு அந்தப் பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். பின்னர் மூத்த சகோதரியின் உதவியுடன் அந்தச் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கிறார்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமை

அதன் பின்னர், அப்படியேவிட்டால் பிரச்னையாகிவிடும் என்று சிறுமியை துப்பட்டாவைக் கொண்டு கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இந்தக் குற்றம் நடக்கும்போது யாராவது வந்துவிடக்கூடும் என்பதற்காக கரும்புத் தோட்டத்துக்கு வெளியில் தீபு, அர்ஜுன் ஆகியோர் பாதுகாப்புக்கு நின்றனர். குற்றத்தில் ஈடுபட்ட அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்” என்று தெரிவித்தார். சொந்தச் சகோதரியே தம் சகோதரியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யவைத்து கொலைசெய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/the-woman-who-gang-raped-and-murdered-her-sister-by-lovers-after-discovering-a-fake-relationship

01.07.22 வெள்ளிக்கிழமை - Today RasiPalan | Indraya Rasi Palan | July - 1 இன்றைய ராசிபலன் #astrology

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்.

#இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam.



source https://www.vikatan.com/spiritual/astrology/01072022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

புதன், 29 ஜூன், 2022

தீஸ்தா சீதல்வாட் கைது: ஐ.நா மனித உரிமை ஆணையத்துக்கு இந்திய வெளியுறவுத் துறை பதில்!

பிரதமர் மோடிக்கு எதிராக 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பாகத் தொடுக்கப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கைத் தொடுப்பதற்குப் பின்னணியிலிருந்து செயல்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் டி.ஜி.பி ஆர்.பி.ஸ்ரீகுமார், 2002 குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக வாதிட உருவாக்கப்பட்ட சிட்டிசன்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் அண்ட் பீஸ் (Citizens for Justice and Peace) அமைப்பின் செயலாளரான மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட் (Teesta Setalvad) ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித உரிமை ஆணையம் மற்றும் ஐ.நா-வின் மனித உரிமை பணிக்குழு (The Working Group on Human Rights in India and the UN) அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில்,"இந்திய அரசு மனித உரிமைப் பாதுகாவலர்களைத் திட்டமிட்டு இலக்கு வைப்பது நிறுத்தப்பட வேண்டும். சட்டபூர்வமான மனித உரிமைப் பணிகளைச் செய்யும் பாதுகாவலர்கள் மற்றும் உரிமையியல் சமூக அமைப்புகளுக்கு எதிரான பழிவாங்கல்கள், மற்றும் அரசியல் நடவடிக்கைகள் ஜனநாயகத்தில் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

ஐ.நா மனித உரிமை கவுன்சில்

இந்திய அரசியலமைப்பின் கீழ் குடிமக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைக் கடுமையாக மீறும் வகையில், அரசு இயந்திரத்தின் அதிகாரத்தையும், சட்டத்தையும் துஷ்பிரயோகம் செய்வதைப் பிரதிபலிக்கும் வகையில் தீஸ்தா கைதுசெய்யப்பட்டிருக்கிறார்" எனக் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இதற்குப் பதிலளிக்கும் விதமாக, இந்திய வெளியுறவு அமைச்சகம் ( MEA) அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்," சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட் மற்றும் மேலும் இரு நபர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை குறித்து மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகத்தின் கருத்தைப் பார்த்தோம். இந்தக் கருத்துக்கள் முற்றிலும் தேவையற்றது மற்றும் இந்தியாவின் சுதந்திரமான நீதித்துறை அமைப்பில் தலையிடுவதாக அமைகிறது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்

இந்தியாவில் உள்ள அதிகாரிகள் நீதித்துறை செயல்முறைகளின்படி சட்ட மீறல்களுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள். இத்தகைய சட்ட நடவடிக்கைகளைத் துன்புறுத்துதல் என முத்திரை குத்துவது தவறானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது" எனத் தெரிவித்துள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/india-slams-uns-completely-unwarranted-remarks-on-arrest-of-teesta-setalvad

`நான் செத்துப் போயிடுறேன் ப்ளீஸ்’ - கருமுட்டை விவகாரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு முயற்சி

ஈரோட்டில் பெற்ற தாயே ஆண் நண்பருடன் சேர்ந்து கொண்டு, தனது 16 வயது மகளை மிரட்டி, மகளின் வயிற்றிலிருந்து கருமுட்டையை எடுத்து விற்பனை செய்துவந்த விவகாரம் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. `ஈரோடு, சேலம், ஒசூர், திருப்பதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று கருமுட்டையை எடுத்து விற்பனை செய்ததோடு, தாயின் ஆண் நண்பர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும்’ பாதிக்கப்பட்ட சிறுமி கண்ணீர் மல்க போலீஸில் புகார் அளித்திருந்தார். அதையடுத்து சிறுமியின் தாய் இந்திராணி, அவருடைய ஆண் நண்பர் சையத் அலி, கருமுட்டை விற்பனையில் புரோக்கராகச் செயல்பட்ட மாலதி மற்றும் சிறுமிக்கு போலியான ஆதார் அட்டையினை தயாரித்துக் கொடுத்த ஜான் ஆகிய 4 பேரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்திராணி - சையத் அலி - ஜான் - மாலதி

பாதிக்கப்பட்ட சிறுமி ஈரோடு ஆர்.என்.புதூரில் உள்ள காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டு இருந்தார். இந்த விவகாரம் குறித்து உயர்மட்ட மருத்துவக் குழுவினர் மற்றும் போலீஸார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காப்பகத்தில் இருந்த சிறுமி திடீரென கழிவறையை சுத்தம் செய்யும் ரசாயனத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதையடுத்து சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து சிறுமியிடம் போலீஸார் மற்றும் ஈரோடு மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சிறுமியின் வயிற்றிலிருந்து கருமுட்டையை எடுத்து விற்பனை செய்தது, தாயினுடைய ஆண் நண்பர் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தது, இந்த விவகாரம் பெரிதாகி பரபரப்பை உண்டாக்கியது போன்றவையெல்லாம் சிறுமிக்கு கடும் மன அழுத்ததைக் கொடுத்திருக்கிறது. மேலும், காப்பகத்தில் இருந்த சிறுமி இதனையெல்லாம் நினைத்து கடும் மன உளைச்சலில் இருந்திருக்கிறார்.

தற்கொலை முயற்சி/ Representational Image

பெற்ற தாயே தன்னுடைய வாழ்க்கையை சீரழித்துவிட்டார் என்பதனை தாங்க முடியாமல் ‘எதுக்கு எனக்கு மட்டும் இவ்ளோ பிரச்னை நடக்குது. நான் செத்துப் போயிட்டா எல்லா முடிஞ்சிடும்ல’ என சிறுமி கழியவறையை சுத்தம் செய்யும் ரசாயனத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.

மருத்துவமனையில் உள்ள சிறுமி சிகிச்சைக்குப் பிறகு, மனநல ஆலோசனைகள் கொடுக்கப்பட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார் என அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/crime/16-years-old-girl-suicide-attempt-she-is-the-one-affected-by-her-own-mother-and-his-lover

உச்ச நீதிமன்ற தீர்ப்பால் முதல்வர் பதவியிலிருந்து விலகிய உத்தவ் தாக்கரே... புதிய அரசு எப்போது?!

மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருந்த சிவசேனா தலைமைக்கு எதிராக 50 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர். அவர்கள் சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டேயிக்கு ஆதரவாக பிரிந்து சென்றனர். இதில் 40 பேர் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஆவர். அவர்கள் அனைவரும் குஜராத் வழியாக அஸ்ஸாம் அழைத்து செல்லப்பட்டு கவுகாத்தியில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களை மீண்டும் கட்சிக்கு இழுக்க உத்தவ் தாக்கரே மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. அவர்களில் 16 பேருக்கு கட்சி தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று துணை சபாநாயகர் நர்ஹரி நோட்டீஸ் அனுப்பினார். இதையடுத்து துணை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நோட்டீஸ் கொடுத்திருந்தனர்.

எம்.எல்.ஏ.க்களுடன் பட்னாவிஸ்

ஆனால் அந்த நோட்டீஸ் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து கட்சி தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்கவேண்டும் என்று கோரி 16 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் ஜூலை 12-ம் தேதி வரை சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சி தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

இதையடுத்து சட்டமன்றத்தில் 30-ம் தேதி காலை 11 மணிக்கு பெரும்பான்மையை நிரூபித்துக்காட்டும் படி உத்தவ் தாக்கரே அரசுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷாரியா உத்தரவிட்டார். இதை எதிர்த்து சிவசேனா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இம்மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் சூர்யகாந்த், பி.பார்த்திவாலா அடங்கிய அமர்வு, வியாழக்கிழமை சட்டமன்றத்தில் நடக்க இருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. அதே சமயம் நம்பிக்கையில்லா தீர்மானம் உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்புக்கு உட்பட்டதாக இருக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்றத்தில் விவாதம் நடந்து கொண்டிருந்த போது மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் ஒளரங்காபாத் நகரத்திற்கு சாம்பாஜி நகர் என்றும், ஒஸ்மனாபாத் நகரத்திற்கு தாராசிவ் என்றும் பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்று அமைச்சர் அனில் பரப் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் உத்தவ் தாக்கரே ஆன்லைன் மூலம் உரையாற்றினார்.

அதில், `எனது முதல்வர் பதவி மற்றும் சட்டமேலவை உறுப்பினர் பதவி இரண்டையும் ராஜினாமா செய்கிறேன். நான் எதிர்பாராமல் ஆட்சிக்கு வந்தேன். அதே போன்று ஆட்சியில் இருந்து செல்கிறேன். நான் எங்கேயும் போய்விடவில்லை. இங்குதான் இருக்கிறேன். சிவசேனா பவனில் அமருவேன். எனது ஆட்களை கூட்டுவேன். எனக்கு ஆதரவளித்த தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியினருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பதவியை விட்டு விலகுவதற்காக நான் வருத்தப்படவில்லை. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பை திரும்ப சிவசேனா தொண்டர்கள் அனுமதிக்கவேண்டும். போராட்டம் எதுவும் நடத்தவேண்டாம். சிவசேனா மற்றும் பால் தாக்கரேயால் வளர்ச்சியடைந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தாக்கரேயின் மகனை முதல்வர் பதவியில் இருந்து இறக்கியதற்காக மகிழ்ச்சியடையட்டும்.

உத்தவ் தாக்கரே

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சூரத் அல்லது கவுகாத்தி செல்லாமல் நேரடியாக என்னிடம் வந்து உங்களது கருத்தை சொல்லி இருக்கலாம். சிவசேனா சாமானிய மக்களின் கட்சி. பல சவால்களை சந்தித்து வெற்றி பெற்றுள்ளது. சிவசேனாவை மீண்டும் புதிதாக உருவாக்குவோம்” என்று தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து உத்தவ் தாக்கரே ஆளுநர் மாளிகைக்கு சென்று பகத்சிங் கோஷாரியாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். உத்தவ் தாக்கரே பதவி விலகி இருப்பதால் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக அரசு விரைவில்(நாளை) பதவியேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஸ்ஸாமில் தங்கி இருந்த சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நேற்றே கோவா வந்துவிட்டனர். அவர்கள் இன்று மும்பை திரும்புகின்றனர். முன்னதாக எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.



source https://www.vikatan.com/news/politics/supreme-court-refuses-to-ban-no-confidence-motion-uddhav-thackeray-resigns-from-cm

வில்லனாக ஆசை! - அரவிந்த்சாமி #AppExclusive

"னக்குத் தமிழ் தெரியுமா..?”- மணிரத்னம் கேட்டது ஒரே கேள்விதான். ஏற்கெனவே இந்த இளைஞர் நடித்த சில விளம்பரப் படங்களை மணிரத்னம் பார்த்திருந்தார்." `ஓ... நல்லாவே...' என்று சந்தோஷமாய்ச் சொன்னேன். ஸ்க்ரீன் டெஸ்ட் நடந்தது. நான் நடிகனாய் செலக்ட் ஆனேன்.”- சிரித்தார் அரவிந்தசாமி.

'தளபதி'யில் கலெக்டர் 'ரோஜா'வில் கம்ப்யூட்டர் இன்ஜினியர்; கிராமத்து 'குழந்தை'யாகத் 'தாலாட்டு'.மூன்றே படங்கள். இப்போது எல்லோருக்கும் அரவிந்தசாமியைத் தெரியும்!

I want to play villain roles - Arvind Samy

குறும்பு மின்னும் கண்கள்; குழந்தைத்தனம் மாறாத வசீகரம்; அபார உயரம் ஈடு கொடுக்கும் உடற்கட்டு; தோள் வரை புரளும் ஹேர் ஸ்டைல்; சரளமான ஆங்கிலம் - இதுதான் அரவிந்தசாமி!அரவிந்தசாமி நடிகர் என்பது ஒருபுறமிருக்க, அவரது தந்தையின் எக்ஸ்போர்ட் கம்பெனியான வி.டி. சுவாமி அண்ட் கம்பெனியின் டைரக்டர் என்ற முக்கிய பொறுப்பையும் வகிக்கிறார். பிஸியான படப்பிடிப்பு நாட்களைத் தவிர மற்ற நாட்களில் ஆபீஸ் நிர்வாக விஷயங்களையும் கவனித்துக் கொள்கிறார்."என் சின்ன வயதெல்லாம் மெட்ராஸ் - பெங்களுர் ரூட்ல உள்ள ஒரு பண்ணை வீட்டில்தான் கழிந்தது.

I want to play villain roles - Arvind Samy

அப்புறம் மெட்ராஸ்தான். சிஷ்யா, டான்பாஸ்கோ ஸ்கூல் படிப்பு. அப்புறம் 'லயோலா'ல பி.காம் முடித்தேன். உடனே அப்பாவோட நிறுவனமான திருச்சி காவேரி இன்ஜினீயரிங் கம்பெனியின் நிர்வாகப் பொறுப்பைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அதுகூட ஒரு வருடம்தான். மறுபடியும் மெட்ராஸ். நான் பள்ளியில் படிக்கும்போதே பிரபல விளம்பரப் படத் தயாரிப்பாளரான ஜெயேந்திராவின் அலுவலகத்தில் பணிபுரிந்த என் நண்பர் ஒருவர் என்னை மாடலிங் பண்ண ஜெயேந்திராவிடம் அழைத்துப் போனார். அதிலிருந்து ரஸ்னா, சாலிடெர், லியோ காபி என பல விளம்பரப் பட வாய்ப்புகள் கிடைத்தன."

"பெரும்பாலும் மாடல்களின் அடுத்த லட்சியம் சினிமாதான் என்பதாலேயே நீங்கள் சினிஃபீல்டுக்கு வந்தீர்களா...? நடிப்பில் உங்களுக்கு அவ்வளவாக ஆர்வமில்லை என்றும் அயல்நாட்டில் படிக்கப் போகிறீர்கள் என்றும் கூட செய்திகள். இது வழக்கம்போல் பல நடிகர், நடிகைகள் 'நான் சினிமாவுக்கு வந்திருக்காவிட்டால் டாக்டராகியிருப்பேன், இன்ஜினியராகி யிருப்பேன்’ என்று சொல்வது போலவா, உண்மையா?”

நீளமாய் கேள்வி கேட்டதும் நிதானமாய் சிரித்த அரவிந்த்... "நடிப்பில் ஆர்வமில்லை என்று சொல்வதைவிட எனக்குப் படிப்பில் ஆர்வம் இருக்கிறது என்பதுதான் பொருத்தம். நான் 'ரோஜா' முடித்தவுடனேயே அமெரிக்கா போய் விட்டேன். அங்கே நார்த் கரோலினா பல்கலைக்கழகத்தில் எம்.பி. ஏ. அட்மிஷன் எனக்குக் கிடைத்தது. சேர்ந்து விட்டேன். ஆனால், சேர்ந்த சில மாதங்களிலேயே 'அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை' என்ற தகவல் வர, உடனே சென்னை திரும்பியவன்தான்!ஆனால், ஒன்றிரண்டு வருடங்களில் மீண்டும் நான் அமெரிக்கா போய் என் படிப்பைத் தொடரப் போகிறேன்."

"படிப்பில் ஆர்வம் இருந்தால் இங்கேயே படிக்கலாமே?”

"நான் படிக்க இருப்பது சர்வதேச அளவிலான பிஸினஸ் விஷயங்கள் பற்றியது. அதற்கு அந்த அமெரிக்கப் பல்கலைக்கழகம் பெயர் பெற்றது. தவிர, எனக்கும் ஒரு சேஞ்ச் வேண்டும் என்பதற்காகத்தான் அமெரிக்கா பயணமே!"

"ஒகே... படிப்பு முடித்த பிறகு என்ன செய்வதாக ஐடியா?”

"அது எனக்கே தெரியாத விஷயம்.அது பற்றி நான் இன்னும் சிந்திக்கவில்லை. சொல்ல முடியாது... நான் சமூக சேவையில் இறங்கினால்கூட ஆச்சரியப்படுவதற்கில்ல. அப்படி ஒரு யோசனை கூட உண்டு."

"அமெரிக்கா போகும்வரை நடித்துக் கொண்டுதானே இருப்பீர்கள்?"

"ஓயஸ்! ஆனால், நான் ஒவ்வொரு படத்தையும் கதையைக் கேட்டு என்னுடைய ரோல் பற்றியும் தெரிந்து கொண்டு எனக்குச் சம்மதம் என்றால் தான் ஒப்புக்கொள்வேன். ஒவ்வொரு படத்திலும் ஏதாவது புதுமையாகக் கற்றுக்கொள்ள வேண்டும், வித்தியாசமாகச் செய்துகாட்ட வேண்டும் என்கிற ஆர்வம்தான் காரணம்.”

"வித்தியாசம் என்கிற பெயரில் 'தாலாட்டு' படத்தில் நீங்கள் ஏற்றிருக்கும் கிராமத்து வேடம் உங்களுக்குப் பொருத்தமாக இல்லை என்று ஒரு பேச்சு...”

"இதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். யார் விமரிசிக்கிறார்கள்? சில ஆங்கிலப் பத்திரிகைக்காரர்கள்தானே. என்னை விமரிசிக்கும் இவர்களுக்கு முதலில் கிராமத்து பாஷை பற்றி எந்த அளவுக்குத் தெரியும்? 'தாலாட்டு' படத்தில் நான் பேசும் கொங்கு பாஷை சரியில்லை என்று எழுதுகிறார்கள். ஆனால், கோயம்புத்தூரில் இந்தப் படம் நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது. அப்படியானால் அந்த ஊர் மக்களே என்னை அந்த ரோலில் ஏற்றுக் கொண்டார்கள் என்றுதானே அர்த்தம்.

நீங்களாகவே எதற்கு எனக்கு ஒரு இமேஜ் குத்துகிறீர்கள்..? என்னை 'தளபதி'யிலும், 'ரோஜா'விலும் ஒரே மாதிரி பாணியில் பார்த்துவிட்டு இப்போது கிராமத்தானாக என்னைப் பார்க்க உங்களுக்குப் புதிதாய் இருக்கலாம். ஆனால், என் முதல் படத்தையே நான் கிராமத்து ரோலில் செய்திருந்தால் என்னை ஒப்புக்கொண்டிருப்பீர்களோ... என்னவோ."

I want to play villain roles - Arvind Samy

"அது சரி, உங்களுக்குப் பத்திரிகைகள் மீது ஏன் இப்படி ஒரு கோபம்?”

"ஒரு விஷயம்... நான் எப்போதுமே பப்ளிஸிடியை வெறுப்பவன். போஸ் கொடுத்து போட்டோ எடுத்துக் கொள்வது, பேட்டி கொடுப்பது இதெல்லாம் எனக்குப் பிடிக்காத விஷயங்கள். இது வரை இவற்றைத் தவிர்த்து வந்திருக்கிறேன். இனியும் அப்படித்தான்.தவிர, பத்திரிகைகள் எப்போதுமே தங்களுக்குச் சரி என்று தோன்றியதை எழுதவேண்டும் என நினைப்பவன் நான். உதாரணமாக - ஒரு நடிகர் அபாரமாக நடிக்கிறார் என்றால், அதை உடனே உங்கள் மனதுக்குத் தோன்றியவாறு பாராட்டி எழுதுங்கள். அப்போதெல்லாம் சும்மா இருந்துவிட்டு, அவருக்கு ஒரு அவார்டு கிடைத்தவுடன் எழுதித் தள்ளுவது செயற்கையான விஷயம்.

சொல்லப் போனால், சத்யஜித்ரேக்கு ஆஸ்கார் கிடைத்த பிறகும் அவர் மறைந்த பிறகும் அவரைப் பற்றி பத்திரிகைகளில் வருகிற ஏராளமான பாராட்டுக் கட்டுரைகளும் விமரிசனங்களும், அவர் உயிரோடு இருந்தபோதுதானே வந்திருக்க வேண்டும்" - பேசும்போதே லேசாகக் கோபம் தொனிக்கிறது.

"திடீரென அடுத்தவருக்கு டப்பிங் குரல் எல்லாம் கொடுக்க ஆரம்பித்து விட்டீர்களே?”

" 'புதிய முகம்' படத்தைத்தான் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்றுதான் சுரேஷ் மேனன் அணுகினார். எனக்கு அந்தக் கதையில் இஷ்டம் இல்லை. பிறகு தனக்குப் பின்னணி குரல் கொடுக்கச் சொல்லி சுரேஷ் மேனன் கேட்டபோது கொடுத்தேன். அவ்வளவு தான்... மற்றபடி டப்பிங் பேசுவது எனக்குத் தொழில் இல்லை.”

"திடீரென நீங்கள் கல்லூரி மாணவிகளின் கனவு நாயகனாக உருவாகி இருக்கிறீர்கள்... இதை எப்போது நீங்களே உணர்ந்தீர்கள்?"

"காரணம் என்ன என்று எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன். நானும் தெரிந்து கொள்கிறேன்... (சிரித்துவிட்டு) உங்களுக்குத் தெரியாத இன்னொரு தகவலை நான் சொல்லட்டுமா...எனக்கு குழந்தை ரசிகர்கள்தான் மிக அதிகம். அவர்களிடமிருந்துதான் அதிக பாராட்டுக்கள் வருகின்றன. குழந்தைகளுக்கு நானும் ஒரு ரசிகன். படவுலகத்துக்கு முழுக்குப் போடும் முன்பு இரண்டு விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று ஆசை. ஒன்று படத்தை இயக்குவது... நானே கைவசம் இரண்டு மூன்று ஸ்கிரிப்ட்களை வைத்திருக்கிறேன். அநேகமாக அதில் ஒன்றையே இயக்குவேன். இரண்டாவது... ஒரு படத்திலாவது வில்லனாக நடிக்க வேண்டும். நெகட்டிவ் ரோல்கள் செய்ய வேண்டும்..."வித்தியாசமான ஆசைதான்!

- ரமேஷ் பிரபா

படங்கள்: கே. ராஜசேகரன்

(12.09.1993 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் இருந்து...)


source https://cinema.vikatan.com/tamil-cinema/i-want-to-play-villain-roles-arvind-samy

30.06.22 வியாழக்கிழமை - Today RasiPalan | Indraya Rasi Palan | June 30 இன்றைய ராசிபலன் #astrology

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam



source https://www.vikatan.com/spiritual/astrology/30062022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

செவ்வாய், 28 ஜூன், 2022

Doctor Vikatan: ஹார்ட் அட்டாக் வந்தவர்களிடம் அதிர்ச்சியான தகவல்களைப் பகிரக்கூடாதா?

ஹார்ட் அட்டாக் வந்தவர்களிடம் அதிர்ச்சியான செய்திகளையோ, மிக சந்தோஷமான தகவல்களையோ சொல்லக்கூடாது; சொன்னால் அவர்களால் தாங்க முடியாது என்கிறார்களே.... அது உண்மையா? அதிர்ச்சியான தகவலுக்கும் இதய ஆரோக்கியத்துக்கும் என்ன தொடர்பு? ஒருமுறை அட்டாக் வந்தவர்களை எப்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும்?

மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

ஹார்ட் அட்டாக் வந்தவர்களிடம் அதிர்ச்சியான அல்லது அதிக மகிழ்ச்சியான தகவல்களைச் சொல்லக்கூடாது என்றெல்லாம் ஒன்றுமில்லை. பொதுவாக, சாதாரணமான நபர்களிடமே மிகவும் அதிர்ச்சிக்குள்ளான, உணர்ச்சிவசப்படக்கூடிய தகவல்களைப் பகிரும்போது, அவர்களுக்கு அதைத் தாங்க முடியாத நிலை ஏற்படலாம்.

Healthy Heart

இதை மருத்துவ அறிவியலில், 'டாக்கோசுபோ கார்டியோமயோபதி' (Takotsubo Cardio Myopathy - TCM) என்று சொல்வோம். ஆனால் அது மிகமிக அரிதான நிகழ்வு.

மற்றபடி ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் அதிர்ச்சியான தகவல்களைக் கேள்விப்படவே கூடாது என்பதையெல்லாம் நம்ப வேண்டாம். ஸ்ட்ரெஸ் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதே நேரம் ஹார்ட் அட்டாக் வந்தவர்களும் மற்றவர்களைப் போலவே இயல்பான வாழ்க்கையை வாழலாம்.

ஹார்ட் அட்டாக் வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம். சரியான உணவுப்பழக்கம், உடலியக்கம், ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கை போன்றவை அவசியம். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தவர்களுக்கும் இது பொருந்தும்.

Healthy

சரிவிகித உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, ஸ்ட்ரெஸ் தவிர்த்த வாழ்க்கை, புகை மற்றும் மதுப் பழக்கங்களைத் தவிர்த்தல், மருத்துவர் பரிந்துரைத்த சிகிச்சைகளை முறையாகப் பின்பற்றுவது போன்றவை மிக முக்கியம்.

அவர்கள் ஏற்கெனவே ரிஸ்க் பிரிவில் இருப்பதால் கூடுதல் எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியம். முதல் முறை வந்த ஹார்ட் அட்டாக் எவ்வளவு தீவிரமானது என்பதும் இதில் கவனிக்கப்பட வேண்டும். அதற்கேற்ப உங்கள் இதயநோய் மருத்துவர் ஆலோசனைகளை வழங்குவார்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/healthy/should-not-you-share-shocking-news-with-those-who-had-a-heart-attack

கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெறும் கிரகமாலிகா யோகம் - ஜூலை 2 - 12 வரை ஜோதிடர்கள் சொல்லும் பலன் என்ன?

ஜோதிடத்தில் கிரகப் பெயர்ச்சிகளைப் போலவே சில யோகங்களும் முக்கியமாகக் கருதப்படுவன. மனித வாழ்வில் ஏற்றத்தையும் மாற்றத்தையும் தரக்கூடிய பல யோகங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று கிரக மாலிகா யோகம்.

‘கிரகம்’ என்றால் நவகிரகங்களைக் குறிக்கும். ‘மாலிகா’ என்றால் ‘மாலை’ என்று பொருள். கிரங்கள் மாலை தொடுப்பதைப் போல வரிசையாக ராசி வீடுகளில் தொடுக்கப்பட்டிருந்தால் (அமர்ந்திருந்தால்) அது, ‘கிரகமாலிகா யோகம்’ எனப்படும். அப்படி அபூர்வ நிகழ்வு வரும் ஜூலை மாதம் 2 - ம் தேதி சனிக்கிழமை நிகழ இருக்கிறது. இந்த நாளில் ஆறு கிரகங்கள் ஆட்சி பெற்றும் அதன்பின் ஒன்பது நாள்கள் ஐந்து கிரகங்கள் ஆட்சி பெற்றும் கிரக மாலிகா யோகம் ஏற்பட இருக்கிறது. இந்த யோகம் குறித்து ஜோதிடர் ஆதித்ய குருஜியிடம் கேட்டோம்.

ஆதித்ய குருஜி

சொந்த வீட்டில் கிரகங்கள் தரும் பலன் என்ன?

“மனிதர்களாகிய நமக்கு எப்படிச் சொந்த வீட்டில் இருந்தால் சந்தோஷமும் மகிழ்ச்சியும் அதிகாரமும் ஏற்படுமோ அதேபோன்று கிரகங்கள் அவற்றுக்குரிய சொந்த வீட்டில் அமைவது மகிழ்ச்சியான விஷயம். அவை சொந்த வீட்டில் ஆட்சி உச்சம் பெற்று அமர்கின்றன. நவ கிரகங்களில் ஏழு கிரகங்களுக்கு மட்டுமே சொந்த வீடு உண்டு. அவற்றில் ஆறு கிரகங்கள் தம் சொந்த வீட்டில் அமைந்திருக்கும் நிலை வரும் நாள்களில் ஏற்பட இருக்கிறது. வானியல் ரீதியாக கிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் அமைகின்றன என்றும் சொல்லலாம். இதைத்தான் ‘கிரகமாலிகா யோகம்’ என்று சொல்கிறார்கள்.

இதில் ஜூலை 2 -ம் தேதி மட்டும் (காலை 9:45 முதல் மறுநாள் 3.7.22 -ம் தேதி காலை 6.30 மணி வரை) ஆறு கிரகங்கள் வரிசையாகத் தத்தமது சொந்த ஆட்சி வீட்டில் அமையப் போகின்றன.

சனி - கும்பத்திலும், குரு - மீனத்திலும் செவ்வாய் - மேஷத்திலும் சுக்கிரன் - ரிஷபத்திலும் புதன் - மிதுனத்திலும் சந்திரன் - கடகத்திலும் என ஆறு கிரகங்களும் ஆட்சி உச்சம் பெற்று அபூர்வ கிரக மாலிகா யோகமாக அமைந்திருக்கிறது. அதன் பின் அடுத்த பத்து நாள்களுக்கு சந்திரன் தவிர்த்து பிற ஐந்து கிரகங்கள் ஆட்சி பெற்று கிரக மாலிகா யோகத்தில் அமைந்திருக்கின்றன.

இத்தகைய யோகத்தின் முக்கியத்துவம் என்னவென்றால், இந்தக் காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகத்தில் இந்த யோகம் பிரதிபலிக்கும். அது அந்தக் குழந்தை பிறக்கும் லக்னத்தைப் பொறுத்து யோக ஜாதகமாக மாறும். காரணம் ஒரு ஜாதகத்தில் முக்கியமான ஒரு கிரகமோ அல்லது இரண்டு கிரகமோ உச்சமும் ஆட்சியும் பெற்றிருந்தாலே சிறப்பு என்று சொல்கிற நிலையில் இந்த யோகத்தில் குறைந்த பட்சம் ஐந்து கிரகங்கள் ஆட்சி பலம் பெற்று அமர்ந்திருக்கும். அது இந்தக் காலகட்டத்தில் குறிப்பிட்ட லக்னங்களில் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகத்தில் பிரதிபலிக்கும். அவர்கள் வாழ்க்கை மிளிரும். இது ஒரு முக்கியமான அமைப்பு என்று சொல்லலாம். இந்த அற்புதமான காலகட்டத்தில் அனைத்து ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்கள் அமைய இருக்கின்றன. அதற்கு இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன். எல்லோரும் நன்றாக இருப்பீர்கள்” என்று கூறினார் ஆதித்ய குருஜி.

நவகிரகங்கள்

12 ராசிகளுக்கும் இந்த கிரகமாலிகா யோகம் எப்படி ?

அனைத்து ராசிக்காரர்களுக்கும் இந்த கிரகமாலிகா யோகம் நற்பலன் தருமா என்றால் பொதுவாக ராசிக்கட்டங்களின் அமைப்பைப் பார்த்தால் நாம் ஒன்றைப் புரிந்துகொள்ளலாம். நவகிரகங்களும் 12 ராசிக்கட்டங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வீடுகளைத் தம் ஆட்சி வீடாகக் கொண்டிருக்கின்றன. பொதுவாக மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகளை செவ்வாய் பகவானும், ரிஷபம், துலாம் ஆகிய ராசிகளை சுக்கிரபகவானும் மிதுனம், கன்னி ஆகிய ராசிகளை புத பகவானும், கடக ராசியை சந்திரபகவானும் சிம்ம ராசியை சூரியபகவானும், தனுசு, மீனம் ராசிகளை குருபகவானும் மகரம், கும்பம் ராசிகளை சனிபகவானும் ஆட்சி செய்கின்றன. இவற்றில் சூரியனைத் தவிர்த்த பிற ஆறு கிரகங்களும் ஆட்சி பலம் பெற்று அமர்கின்றன என்னும்போது பன்னிரெண்டு ராசிக்காரர்களுக்குமே நற்பலன்கள் அதிகரிக்கும். இந்த நாள்களில் சந்திராஷ்டமம் இல்லை என்றால் அந்த ராசிக்காரர் தங்கள் ஜனன கால தசாபுத்திகள் சாதகமாக இருக்கும் பட்சத்தில் புதிய முயற்சிகளில் துணிந்து இறங்கலாம். அது அற்புதமான பலனைக் கொடுக்கும். கொடுக்கல் வாங்கல் பயன் தரும். ஆரோக்கியம் மேன்மையுறும். பல அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும்.

புதாதித்ய யோகம் - நற்பலன்கள் பெருக என்ன செய்யலாம்?

சூரியன் மிதுனத்தில் புதனுடன் இணைந்துள்ளார். இதனை ‘புதாதித்யயோகம்’ என்பார்கள். சந்திரனுக்குக் குரு பார்வை. ஆட்சிபலம் பெற்ற செவ்வாயுடன் ராகு இணைந்திருக்கிறார். ஆக, இந்த இரண்டு தினங்களிலும் சில சிறப்பு வழிபாடுகளைச் செய்வதன் மூலம் அனைத்து ராசிக்காரர்களும் நற்பலன்களைப் பெறலாம். குறிப்பாக சூரிய வழிபாடும் புதபகவானுக்குரிய பெருமாள் வழிபாடும் செய்வது சிறப்பு. ஸ்ரீரங்கநாதர், மதுரை மீனாட்சி, துர்கை, முருகப்பெருமான் ஆகிய தெய்வங்களை வழிபாடு செய்வது மிகவும் விசேஷமாகும்.

புதன் கிரகம்

இந்த நாள்களில் வீட்டில் தினமும் காலையில் நீராடி விளக்கேற்றி இஷ்டதெய்வத்தை வழிபட்டு ஒரு நைவேத்தியம் செய்து அதன்பிறகு சாப்பிடுவது உத்தமம். இந்த கிரகமாலிகா யோகம் அமைந்திருக்கும் பன்னிரண்டு நாள்களில் ஏதேனும் ஒரு நாள் ஆலய தரிசனம் செய்வதும் இறைவனுக்கு நடைபெறும் அபிஷேகத்துக்கான திரவியங்கள் வாங்கிக்கொடுப்பதும் நல்ல பலன்களை அதிகப்படுத்தும். குறிப்பாக கன்னி, துலாம், மகரம், கும்பம், மேஷம் ஆகிய ராசியைச் சேர்ந்தவர்கள் அன்னதானம் செய்வது புண்ணியபலன்களை அதிகரிக்கச் செய்து நற்பலன்கள் உண்டாகும் என்கிறார்கள் ஜோதிடர்கள்.



source https://www.vikatan.com/spiritual/astrology/rare-astrology-event-graha-malika-yoga-what-the-astrologers-predicts

வேலூரில் பாலாறு பெருவிழா: இன்று தொடங்கி 5 நாள்கள் நடக்கிறது!

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் மற்றும் அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம் ஆகியவை சாா்பில், பாலாறு பெருவிழா இன்று தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது. இந்த விழா குறித்து, அகில பாரதீய சந்நியாசிகள் சங்கப் பொதுச்செயலாளர் ஆத்மானந்த சரஸ்வதி சுவாமிகள் வேலூரில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘நதிகளைப் பாதுகாக்கவும், புனிதப்படுத்தவும் வலியுறுத்தி, தமிழகத்தில் ஏற்கெனவே காவிரி, வைகை, தாமிரபரணி, தென்பெண்ணை ஆகிய நதிகளுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன. அதன் தொடா்ச்சியாக, பாலாறு நதிக்குப் பெருவிழா நடத்தப்படுகிறது.

செய்தியாளர்களைச் சந்தித்த ஆத்மானந்த சரஸ்வதி சுவாமிகள்

இந்த விழா இன்று (புதன்கிழமை) (ஜூன்-29) தொடங்கி ஜூலை 3-ம் தேதி வரை 5 நாள்களுக்கு நடைபெற உள்ளது. இந்த விழாவைத் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தொடக்கி வைக்கவும், முதல்வா் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி, புதுச்சேரி ஆளுநா் தமிழிசை செளந்திரராஜன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்கள் பங்கேற்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை விழா நடைபெறும். முதல் நாள் நிகழ்வில் தேசிய அளவில் உள்ள சந்நியாசிகள் பங்கேற்கும் மாநாடு நடக்கிறது. 2-ம் நாள் நிகழ்வில் தமிழகத்தின் துறவிகள், ஆதீனங்கள் பங்கேற்கும் மாநாடும், மூன்றாம் நாள் நிகழ்வில் தென்துறவிகள் பங்கேற்கும் மாநாடும், 4-ம் நாள் நிகழ்வில் பசு, நீா்நிலைகள் பாதுகாப்பு மாநாடும், 5-ம் நிகழ்வில் கிராமக் கோயில் பூசாரிகள் பங்கேற்கும் மாநாடும் நடைபெறுகிறது.

பாலாறு

இந்த 5 நாள்களும் காலை நிகழ்ச்சிகளும், மாலையில் பாலாற்றில் ஆரத்தி நிகழ்வும் நடைபெறும். இந்த விழாக்கள் மூலம் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நதிகளை தேசிய மயமாக்கி இணைக்க வேண்டும். கழிவுகள் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட உள்ளது. விழாவில் நாடு முழுவதுமிருந்து ஆயிரம் துறவிகள், அமைச்சா்கள், முக்கியப் பிரமுகா்கள் பங்கேற்க விருப்பதாகத்’’ தெரிவித்தார்.



source https://www.vikatan.com/spiritual/news/palar-festival-in-vellore-starting-tomorrow-and-going-on-for-next-5-days

சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா கைது... `திட்டமிட்டு இலக்கு வைப்பதை நிறுத்த வேண்டும்’ - மனித உரிமை ஆணையம்

பிரதமர் மோடிக்கு எதிராக 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பாகத் தொடுக்கப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கைத் தொடுப்பதற்குப் பின்னணியிலிருந்து செயல்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் டி.ஜி.பி ஆர்.பி.ஸ்ரீ குமார், 2002 குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக வாதிட உருவாக்கப்பட்ட சிட்டிசன்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் அண்ட் பீஸ் (Citizens for Justice and Peace) அமைப்பின் செயலாளரான மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டீஸ்டா செதால்வத்(Teesta Setalvad) ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

டீஸ்டா

இந்த நிலையில், அவர்களின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித உரிமை ஆணையம் மற்றும் ஐ.நா-வின் மனித உரிமை பணிக்குழு (The Working Group on Human Rights in India and the UN) அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,"இந்திய அரசு மனித உரிமை பாதுகாவலர்களைத் திட்டமிட்டு இலக்கு வைப்பது நிறுத்தப்பட வேண்டும். சட்டப்பூர்வமான மனித உரிமைப் பணிகளைச் செய்யும் பாதுகாவலர்கள் மற்றும் உரிமையியல் சமூக அமைப்புகளுக்கு எதிரான பழிவாங்கல்கள், மற்றும் அரசியல் நடவடிக்கைகள் ஜனநாயகத்தில் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

இந்த பழிவாங்கும் அரசியல் நடவடிக்கை இந்தியாவின் சர்வதேச சட்டக் கடமைகளை மீறுவதாகும். இந்தியாவில் வகுப்புவாத வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்காக, டீஸ்டா செதால்வத் அயராது போராடி வருபவர். எஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி உட்படத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்பவர்களுக்கு டீஸ்டா செதால்வத்தின் கைது பதிலடி மட்டுமல்ல எச்சரிப்பதற்குச் சமம் என்று WGHR உறுதியாக நம்புகிறது.

மோடி

இந்திய அரசியலமைப்பின் கீழ் குடிமக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைக் கடுமையாக மீறும் வகையில், அரசு இயந்திரத்தின் அதிகாரத்தையும், சட்டத்தையும் துஷ்பிரயோகம் செய்வதைப் பிரதிபலிக்கும் வகையில் டீஸ்டா கைது செய்யப்பட்டுள்ளார்.

எனவே, இவரின் கைது மனித உரிமைகள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கு (HRDs) இந்திய அரசின் பாதுகாப்பு குறித்து, உள்நாட்டில் மட்டுமின்றி உலக அளவிலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. எனவே, உடனடியாக டீஸ்டா விடுதலை செய்யப்பட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/aggressive-abuse-of-power-human-rights-group-condemns-teestas-arrest

வெளிநாட்டு வேலையில் கணவன்... இறப்பு சான்றிதழ் மூலம் 25 லட்சம் மோசடி செய்த மனைவி - நடந்தது என்ன?

மேற்கு வங்க முர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் நூர் ஜமால் ஷேக். இவர் சவுதி அரேபியாவில் கடந்த 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், அவர் தனது மனைவி மீது காவல்நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், "நான் சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்தேன். அதனால் நான் வங்கியில் டெபாசிட் செய்து வைத்த பணத்துக்கு எனது மனைவிக்கு தான் பொறுப்பளித்திருந்தேன்.

பணம்

இந்த நிலையில், நான் வெளிநாட்டிலிருந்து வரத் தாமதமானதால் என் மனைவி என்னைவிட்டுப் பிரிந்து சென்றுவிடுவதாகக் கூறினார். அதன் பிறகு அவர் என்னை பிரிந்து சென்று விட்டார் என்பதால், வங்கியில் டெபாசிட் செய்த பணத்தை எடுக்க இந்தியா வந்தேன். அப்போதுதான் என் பணம் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டதை அறிந்தேன். எனது இறப்புச் சான்றிதழைக் காண்பித்து, என் மனைவி பணத்தை எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது. அதுமட்டுமில்லாமல். இந்த சான்றிதழை வைத்து எனது சொத்துகளை அவர் பெயருக்கு மாற்றிக்கொண்டுள்ளார் என்பதும் தெரிய வந்தது.

டெபாசிட்

மேலும், எனது பெயரில் இருந்த இன்சூரன்ஸ் தொகையையும் பெற்றுள்ளார். வங்கி நிர்வாகத்திடம் இதைத் தெரிவித்தும் எந்த உதவியும் கிடைக்கவில்லை. சுமார் ரூ.25 லட்சம் என்னிடம் மோசடி செய்துள்ளார். மேலும் எனது மனைவிக்கு திருமணம் தாண்டிய உறவு இருந்ததும் தெரியவந்துள்ளது. எனவே எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்து வருகிறது.



source https://www.vikatan.com/news/crime/woman-used-fake-death-certificates-to-claim-rs-26-lakh-of-husband-while-he-was-abroad

``உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்” - அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக?

மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனாவில் பிளவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியை சேர்ந்த 40 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தனி அணியாக செயல்படுகின்றனர். அவர்களை வைத்து ஆட்சியமைக்க பாஜக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கடந்த 20-ம் தேதியில் இருந்து அஸ்ஸாம் மாநிலத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது வரும் ஜூலை 12-ம் தேதி வரை நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதையடுத்து மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று அவசரமாக டெல்லி சென்று பாஜக தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.

சட்டமன்றத்திற்கு வெளியில் பட்னாவிஸ்

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் ஆட்சியமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க கட்சி தலைமை அனுமதி கொடுத்தது. உடனே மும்பை வந்த தேவேந்திர பட்னாவிஸ், பாஜக தலைவர்களுடன் ஆளுநர் பகத் சிங் கோஷாரியாவை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது ஆளுநரிடம் தேவேந்திர பட்னாவிஸ் கடிதம் ஒன்றையும் கொடுத்தார். ``சட்டமன்றத்தில் உடனே உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடவேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 39 எம்.எல்.ஏ.க்கள் அரசில் இடம் பெறவிரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டனர்.

எனவே உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு சஞ்சய் ராவத் தொடர்ந்து மிரட்டல் விடுத்துக்கொண்டிருக்கிறார். இதே போன்று மற்ற சிவசேனா தலைவர்களும் மிரட்டல் விடுத்து வருகின்றனர். அதற்கு எங்களிடம் ஆதாரம் இருக்கிறது” என்றும் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

இச்சந்திப்பிற்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த பட்னாவிஸ், ``ஆளுநர் உடனே சட்டமன்றத்தில் அரசிடம் பெரும்பான்மையை நிரூபிக்க கேட்டுக்கொள்வார் என்று எதிர்பார்க்கிறோம். மும்பைக்கு வெளியில் இருக்கும் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மகா விகாஷ் அகாடியில் தொடர விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.

தேவேந்திர பட்னாவிஸ்

பட்னாவிசுடன் கிரீஷ் மகாஜன், ஆசிஷ் ஷெலார், பிரவின் தாரேகர், சந்திரகாந்த் பாட்டீல், ஸ்ரீகாந்த் பாரதியா ஆகியோரும் சென்று இருந்தனர். இதற்கிடையே சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் ஆளுநருக்கு மெயில் அனுப்பி இருக்கின்றனர். அதில் உடனே சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். இதனால் ஆளுநர் விரைவில் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் விரைவில் மும்பை வருவேன் என்று தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 144 உறுப்பினர்களின் ஆதரவு தேவையாக இருக்கிறது. தாக்கரே அரசுக்கு 152 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது. ஆனால் இப்போது அதில் 40 பேர் அதிருப்தி கோஷ்டியாக மாறிவிட்டனர்.



source https://www.vikatan.com/news/politics/uddhav-thackeray-must-be-ordered-to-prove-majority-in-assembly-bjp-urges-governor

29.06.22 புதன்கிழமை - Today RasiPalan | Indraya Rasi Palan | June 29 இன்றைய ராசிபலன் #astrology

#indrayarasipalan #rasipalantoday #dailyrasipalan மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்.

#இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam.



source https://www.vikatan.com/spiritual/astrology/29062022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

திங்கள், 27 ஜூன், 2022

ஒற்றைத் தலைமை: `அதிமுக சட்டத்துக்கு புறம்பானது’ - தேர்தல் ஆணையத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

அதிமுக-வில் ஒற்றைத் தலைமை சர்ச்சை மிகப் பெரிய அளவில் வெடித்திருக்கிறது. நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோரின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருந்தாலும், கட்சி விதிகள், நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் பன்னீர்செல்வம் எடப்பாடி தரப்புக்கு கடும் போட்டி அளித்து வருகிறது. ஓ.பன்னீர் செல்வத்தின் ஒப்புதல் இல்லாமலேயே அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று(27-06-2022) நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் ஜூலை மாதம் 11-ம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பினரால் நடைபெறும் என கூறப்படும் பொதுக்குழு தொடர்பாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது சொல்லப்பட்டது.

அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி

அதிமுக-வில் தொடர்ந்து நிலவி வரும் தலைமை சர்ச்சைகளுக்கு மத்தியில் தொண்டர்களை சந்திப்பதற்காக சொந்த ஊரான தேனிக்கு புறப்பட்ட சென்றார் ஓ.பன்னீர்செல்வம். எனினும் அதிமுக தலைமை அலுவலகத்தில் அவசரக் கூட்டம் எடப்பாடி தரப்பினரால் கூட்டப்பட்ட காரணத்தினால் தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார்.

ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை சென்னை திரும்பிய நிலையில் அவரின் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகளுடனும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களுடனும் இணைந்து ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி தரப்பினரால் ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள பொது குழுவுக்கு தடை வாங்குவது தொடர்பாக நீதிமன்றத்தை நாட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பன்னீர்செல்வம்

இதனிடையே ஓ. பன்னீர்செல்வம் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு ஆதாரங்களுடன் மிக நீண்ட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் அவர் பல்வேறு விவகாரங்களை அதிமுக-வின் சட்ட விதிகளின்படி குறிப்பிட்டிருக்கிறார். அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார் முக்கிய அம்சங்களை பார்க்கலாம்....

``2017 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ம் தேதி அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி அதிமுக-வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகள் உருவாக்கப்பட்டது. இந்த இரண்டு பதவிகளும் பொதுக் குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று விதியில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. இந்த இரு பதவிகளுக்கும் பதவிக்காலம் 5 ஆண்டுகள் எனவும் முடிவு செய்யப்பட்டது. இந்த சட்டத் திருத்தம் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு முறையாக தெரிவிக்கப்பட்டது. அதுமுதல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கட்சியின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தங்கள் கடமைகளை ஆற்றி வந்தோம், வருகிறோம்.

இந்த புதிய சட்டத் திருத்த விதி கொண்டுவரப்பட்ட பின்பு இந்திய தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையம் நடத்திய பல்வேறு தேர்தல்களை எங்கள் கட்சி சந்தித்து இருக்கிறது. இந்த நிலையில் அதிமுக பொதுக் குழுக் கூட்டமானது கடந்த 23-ம் தேதி அன்று நடத்தப்படும் என ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களால் அறிவிக்கப்பட்டது. இதன்பின்னர் கட்சிக்கு ஒற்றைத் தலைமை குறித்து சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து 23-ம் தேதி அன்று நடைபெற்ற பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட 23 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது.

அவை பொதுக்குழு உறுப்பினர்களுக்கு முன்னதாகவே வழங்கப்பட்டிருந்தது. எனினும் 23-ம் தேதி அன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினரான முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், அந்த 23 தீர்மானங்களை நிராகரிப்பதாக அறிவித்தார். பொதுக்குழுவில் எந்த ஒரு விவாதமும் மேற்கொள்ளாமல் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த நிர்வாகிகளுக்கும் ஒப்புதல் அளிக்காமலேயே கூட்டம் முடிவுக்கு வந்தது. அதிமுக வரலாற்றில் முதல்முறையாக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு

இதனை தொடர்ந்து புதிய அவைத்தலைவர் தேர்வு நடத்தப்பட்டது. மேலும் ஜூலை மாதம் 11-ம் தேதி புதிய பொதுக்குழு கூட்டம் நடைபெறும் எனவும் அந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது சட்டத்திற்கு புறம்பான ஒன்று. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அந்த கூட்டத்தில் இருந்த போதும், இது தொடர்பான தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர், `இந்தக் கூட்டம் சட்டவிரோதமானது, அவைத்தலைவர் தேர்வு, அடுத்த பொதுக்குழு கூட்ட அறிவிப்பு அனைத்துமே சட்ட விதிகளுக்குப் புறம்பானது’ என தெரிவித்துவிட்டு அக்கூட்டத்தில் இருந்து வெளியேறினோம்.

பொதுக்குழு கூட்டத்தில் வெளியாட்கள் யாரையும் அனுமதிக்கக் கூடாது. உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்திருந்த போதிலும் வெளியாட்கள் பலர் சட்டத்துக்கு புறம்பாக அனுமதிக்கப்பட்டிருந்தனர். மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அந்தக் கூட்டத்தில் என் மீது தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டன. கூட்டம் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

அதிமுக பொதுக்குழு

இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையில் தான் 27-ம் தேதி காலை 10 மணிக்கு தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெறும் என ஒரு அறிவிப்பு வெளியானது. அதில் முறையான கையெழுத்து இன்றி தலைமை நிலைய செயலாளர் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என யாருடைய கையெழுத்தும் இல்லை.

கட்சி விதிகளின்படி தலைமை நிலைய செயலாளர் என்ற பெயரில் அழைப்பு விடுக்க முடியாது. அதிமுக சட்ட விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரும் மட்டுமே இதுபோன்ற ஒரு கூட்டு அறிவிப்பை வெளியிட்டு கூட்டத்தை நடத்த முடியும். அப்படி ஒரு அறிவிப்பு வெளியிடாமல் 27-ம் தேதி அன்று நடைபெற்ற கூட்டம் சட்டத்திற்கு புறம்பானது.

அக்கூட்டத்தில் ஜூலை 11-ம் தேதி அன்று நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என முடிவு எடுத்திருப்பது சட்ட விதிகளுக்குப் புறம்பானது. மேலும் அதிமுக பொருளாளர் என்கிற அடிப்படையில் கட்சியின் வரவு செலவு கணக்குகளை கடந்த பொதுக்குழு கூட்டத்தில் தாக்கல் செய்ய என்னை அனுமதிக்கவில்லை. 14-6-2002 முதல் தற்போது வரை அதிமுகவில் நடந்த சட்ட விதி மீறல் சம்பவங்களை தேர்தல் ஆணையத்தின் முன் சமர்ப்பிக்கிறேன்” எனக் கூறியுள்ள ஓ.பன்னீர்செல்வம், இது தொடர்பாக ஐந்து ஆதாரங்களையும் இணைத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அதில், சென்னை உயர்நீதிமன்றம் 23-ம் தேதி அதிகாலை 4:45 மணிக்கு வழங்கிய உத்தரவையும், பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்ட 23 தீர்மானங்களையும், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களும், 27-ம் தேதி கூட்டத்திற்கான அறிவிப்பும், ஓ பன்னீர் செல்வத்தின் அறிக்கை ஆகியவையும் இக்கடிதத்துடன் தேர்தல் ஆணையத்திடம் ஓ.பன்னீர்செல்வம் சார்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/admk-opanneerselvam-wrote-a-letter-to-election-commission-regarding-recent-controversies

6 மாநில இடைத்தேர்தல்: ஆம் ஆத்மிக்கு ஷாக்; சமாஜ்வாடியை கவிழ்த்த பாஜக - முடிவுகள் எப்படி?!

ஆந்திரா, உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், திரிபுரா, பஞ்சாப், டெல்லி ஆகிய ஆறு மாநிலங்களில் காலியாக இருந்த சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளுக்குச் சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. யூனியன் பிரதேசமான டெல்லியிலும் ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தல்களுக்கான முடிவுகள், கடந்த ஜூன் 26 அன்று வெளியாகின. அந்த முடிவுகள் குறித்து அலசுவதுதான் இந்தக் கட்டுரை!

ஆம் ஆத்மிக்கு ஷாக்!

பஞ்சாப் மாநிலம் சங்ரூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியான ஆம் ஆத்மிக்கு ஷாக் கொடுத்து வெற்றிபெற்றிருக்கிறது சிரோமணி அகாலி தளம் (அமிர்தசரஸ்) கட்சி. 2019 நாடாளுமன்றத் தேர்தலில், தற்போதைய பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் வெற்றிபெற்ற தொகுதிதான் சங்ரூர். 2022 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் மான். இடைத்தேர்தலில், ஆம் ஆத்மி வேட்பாளர் குர்மயில் சிங்கைவிட (Gurmail Singh), 5,822 வாக்குகள் அதிகம் பெற்று சிரோமணி அகாலி தளம் (அமிர்தசரஸ்) கட்சியின் வேட்பாளர் சிம்ரன்ஜித் சிங் மான் வெற்றி பெற்றிருக்கிறார்.

பக்வந்த் மான் - கெஜ்ரிவால்

கடந்த 2022 சட்டமன்றத் தேர்தலில், 92 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றிபெற்ற ஆம் ஆத்மி, ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் இடைத்தேர்தலில் தோல்வியடைந்திருக்கிறது. அதுவும் முதல்வர் பக்வந்த் மானின் தொகுதியான சங்ரூரில் தோல்வியடைந்திருப்பது கட்சிக்குள் சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது. ஆம் ஆத்மியின் கோட்டையான சங்ரூரில், 1999-க்குப் பிறகு, எந்தவொரு தேர்தலிலும் வெற்றிபெறாத சிம்ரன்ஜித் சிங் வெற்றிபெற்றிருப்பது, ஆளும் பக்வந்த் மான் அரசுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

பஞ்சாப்பில் கோட்டைவிட்டிருந்தாலும், டெல்லியில் ராஜிந்தர் நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் வெற்றிபெற்றிருக்கிறது ஆளும் ஆம் ஆத்மி கட்சி. பா.ஜ.க வேட்பாளர் ராஜேஷ் பாட்டியாவை சுமார் 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறார் ஆம் ஆத்மி வேட்பாளர் துர்கேஷ் பதக்.

சமாஜ்வாடியைக் கவிழ்த்த பா.ஜ.க!

2019 நாடாளுமன்றத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சியின் வசமிருந்த ராம்பூர், அசாம்கர்க் ஆகிய இரண்டு தொகுதிகளையும், இடைத்தேர்தலில் கைப்பற்றியிருக்கிறது பா.ஜ.க. 2019-ல் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வெற்றிபெற்றிருந்த அசாம்கர்க் தொகுதியில், தற்போது 8,679 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார் பா.ஜ.க-வின் தினேஷ் லால் யாதவ். அதேபோல ராம்பூர் தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்கிறது பா.ஜ.க.

அகிலேஷ் யாதவ்

தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக சமாஜ்வாடி கட்சியினர் குற்றம்சாட்டிவந்தாலும், ``அகிலேஷ் யாதவ் இடைத்தேர்தலில் அதிக கவனம் செலுத்தாததுதான் தோல்விக்குக் காரணம்'' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

திரிபுராவில் வெடித்த வன்முறை!

திரிபுராவில் நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. போர்டோவலி, சுர்மா, ஜுபராஜ்நகர் ஆகிய மூன்று தொகுதிகளிலும் ஆளும் பா.ஜ.க வெற்றிவாகை சூடியிருக்கிறது. போர்டோவலி தொகுதியில், அந்த மாநிலத்தின் முதல்வர் மாணிக் சாஹா வெற்றிபெற்றிருக்கிறார். கடந்த மே மாதம் திரிபுராவின் முதல்வராக இருந்த பிப்லப் குமார் தேப், தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, மாணிக் சாஹா முதல்வராக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீதமுள்ள ஒரு தொகுதியான அகர்தலாவில் காங்கிரஸ் வேட்பாளர் சுதீப் ராய் பர்மான் வெற்றியடைந்திருக்கிறார். இதையடுத்து அகர்தலாவில் காங்கிரஸ், பா.ஜ.க கட்சியினரிடையே மிகப்பெரிய மோதல்கள் வெடித்து பின்னர், வன்முறையாக மாறியது.

பா.ஜ.க

ஜார்க்கண்ட்டில் காங்., ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்.!

ஜார்க்கண்டின் மந்தர் தொகுதியில், பா.ஜ.க வேட்பாளரைவிட 23,517 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார் காங்கிரஸ் வேட்பாளர் ஷில்பி நேகா (Shilpi Neha). ஆந்திர மாநிலம் ஆத்மகுரு தொகுதியில், ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸைச் சேர்ந்த விக்ரம் ரெட்டி வெற்றிபெற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் பரத் குமார் யாதவைவிட, 82,888 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார் விக்ரம் ரெட்டி.



source https://www.vikatan.com/government-and-politics/politics/story-about-six-state-by-election-results

பொருளாதார நெருக்கடி: `பள்ளிகள் மூடல்; எரிபொருளை சேமிக்க வீட்டிலிருந்து வேலை பாருங்க' - இலங்கை அரசு

இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடியில், மக்கள் போராட்டத்தின் உச்சகட்ட விளைவாக மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார். ஆனாலும் இலங்கையில் இன்னும் பொருளாதார நெருக்கடி சரியான பாடில்லை.

இந்த நிலையில், ``இலங்கை முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்கள் வாடிக்கையாளர்களுக்கு டோக்கன் வழங்கும் முறை தொடங்கும். 9,000 டன் டீசல் மற்றும் 6,000 டன் பெட்ரோல் கையிருப்பில் உள்ளது" என்று இலங்கையின் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை

வர்த்தகத் தலைநகரான கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு வார காலத்திற்கு பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அரசாங்கம் வலியுறுத்தியிருக்கிறது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, மூன்று சக்கர வாகனங்கள் பெட்ரோல் வாங்க வரிசையில் காத்திருக்கின்றன. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

இது தொடர்பாக ஆட்டோரிக்‌ஷா ஓட்டுநர் ஷெல்டன் என்பவர் கூறியதாவது, ``நான்கு நாள்களாக வரிசையில் நிற்கிறேன். நான் சரியாக தூங்கவில்லை, சாப்பிடவில்லை. எங்களால் சம்பாதிக்க முடியாது, எங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்கவும் முடியாது'' என்றார் கலக்கத்துடன்.



source https://www.vikatan.com/government-and-politics/international/schools-closed-people-work-from-home-to-save-fuel-in-sri-lanka

இந்த வார ராசிபலன்: ஜூன் 28 முதல் ஜூலை 3 வரை! #VikatanPhotoCards

வார ராசிபலன்
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்


source https://www.vikatan.com/spiritual/astrology/astro-predictions-for-the-week-of-june-28th-to-july-3rd