Ad

ஞாயிறு, 9 ஜனவரி, 2022

Doctor Vikatan: அடிக்கடி அறிகுறிகள்; வீட்டிலேயே ரேபிட் ஆன்டிஜென் கிட்டில் கொரோனாவை டெஸ்ட் செய்யலாமா?

கொரோனாவின் முதல் இரண்டு அலைகளிலும் அடிக்கடி எனக்கு அறிகுறிகள் தென்பட்ட காரணத்தால் இதுவரை பத்துக்கும் மேலான முறை ஆர்டிபிசிஆர் டெஸ்ட் செய்திருக்கிறேன். சில முறை மாநகராட்சியில் இலவசமாகவும், பலமுறை தனியார் பரிசோதனைக்கூடங்களில் பணம் கட்டியும் டெஸ்ட் செய்திருக்கிறேன். இந்நிலையில் ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட் கிட் பற்றி சிலர் சொல்லக் கேட்கிறேன். இதை வீட்டிலேயே வாங்கி டெஸ்ட் செய்து கோவிட் பாதிப்பை உறுதிசெய்யலாம் என்கிறார்களே.... அதை நம்பலாமா?

- சிவகாமி (விகடன் இணையத்திலிருந்து)

தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூர்

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் அப்துல் கஃபூர்.

``நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட் கிட்டுகள் மருந்துக் கடைகளிலும் ஆன்லைனிலும் கிடைக்கின்றன. இப்போதுள்ளதுபோல கொரோனா தொற்றின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில் ரேபிட் ஆன்டிஜென் கிட் வாங்கி, வீட்டிலேயே பரிசோதித்துக்கொள்ளலாம், தவறில்லை. அந்த கிட்டில் அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற குறிப்புகள் இருக்கும். அவற்றை முறையாகப் பின்பற்றி டெஸ்ட் செய்யலாம்.

ரேபிட் ஆன்டிஜென் கிட்டில் டெஸ்ட் செய்து ஒருவேளை உங்களுக்கு பாசிட்டிவ் என்று வந்தால், மீண்டும் ஆர்டிபிசிஆர் டெஸ்ட் செய்து அதை உறுதிப்படுத்த வேண்டிய தேவையில்லை. ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட்டில் பாசிட்டிவ் என்றால் நிச்சயம் உங்களுக்கு பாசிட்டிவ்வாகத்தான் இருக்கும்.

Also Read: Doctor Vikatan: அதிகரிக்கும் கொரோனா தொற்று; சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த இதுதான் காரணமா?

அதே நேரம் ரேபிட் ஆன்டிஜென்ட் டெஸ்ட்டில் நெகட்டிவ் என்று வந்து, இன்னொரு பக்கம் உங்களுக்கு கொரோனா தொடர்பான அறிகுறிகள் இருப்பதாக சந்தேகப்பட்டால், அப்போது நீங்கள் ஆர்டிபிசிஆர் டெஸ்ட் செய்து அதை உறுதிப்படுத்தலாம்.

ஆர்டிபிசிஆர் டெஸ்ட் செய்து, அதன் ரிசல்ட் தெரிய சில மணி நேரம் காத்திருக்க வேண்டும். ரேபிட் ஆன்டிஜென் கிட்டில் அதிகபட்சமாக அரை மணி நேரத்துக்குள் ரிசல்ட்டை தெரிந்துகொள்ளலாம்.

Health workers conduct COVID-19 antigen tests in New Delhi

Also Read: Doctor Vikatan: S gene-க்கும் ஒமிக்ரான் தொற்றுக்கும் என்ன தொடர்பு?

இப்போதுள்ள பெருந்தொற்றுக் காலத்தில் ரேபிட் ஆன்டிஜென் கிட்டுகளின் தேவை அதிகரித்திருப்பதும், அதன் பயன்பாடும் வரவேற்கக்கூடியவையே."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


source https://www.vikatan.com/health/healthy/can-i-have-rapid-antigen-test-at-home

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக