Ad

வியாழன், 13 ஜனவரி, 2022

Doctor Vikatan: கொரோனா தொற்றாளருடன் இருந்தால் அறிகுறிகளற்ற தொற்றாளருக்கும் நோய் தீவிரமாகுமா?

கொரோனா உறுதிசெய்யப்படாத நிலையில் ஒருவருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருக்கும்பட்சத்தில், அவர் கொரோனா உறுதிசெய்யப்பட்ட இன்னொரு நபருடன் இருந்தால் முந்தைய நபருக்கும் அறிகுறிகள் தீவிரமாகுமா?

- தீபன் (விகடன் இணையத்திலிருந்து)

பூங்குழலி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.

``கொரோனா உறுதிசெய்யப்பட்ட ஒருவர், கொரோனா அறிகுறிகள் தென்படும் நிலையில், தொற்று உறுதிசெய்யப்படாதவர் என இந்தக் கேள்வியில் இரண்டு நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். கொரோனா உறுதிசெய்யப்பட்ட ஒரு நபர் தனிமையில் இருக்க வேண்டியது அவசியம். மருத்துவரின் அறிவுரையின் பேரில் வீட்டிலேயோ, மருத்துவமனை அல்லது கொரோனா சிகிச்சை மையங்களிலோ தன்னை அவர் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

Also Read: Doctor Vikatan: அதிகரிக்கும் கொரோனா தொற்று; சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த இதுதான் காரணமா?

கொரோனா உறுதிசெய்யப்படாத அந்த இன்னொரு நபர், ஆரம்பநிலை தொற்றில் இருக்கக்கூடும். அதனால் அடுத்தடுத்த நாள்களில் தொற்றின் இயல்பான தீவிரம் காரணமாக அவருக்கு ஏற்பட்ட அறிகுறிகளும் தீவிரமடைந்திருக்கலாம்.

ஒருவேளை இந்த நபருக்கு, கொரோனா உறுதிசெய்யப்பட்ட நபருடன் இருந்ததற்கு முன்பே அறிகுறிகள் இருந்து, அவை சாதாரண சளி, காய்ச்சல் அறிகுறிகளாகக்கூட இருந்திருக்கலாம். தொற்றுள்ள நபருடன் இருந்ததால், அவரிடமிருந்து இவருக்கு கொரோனா தொற்றும் பரவியிருக்க வாய்ப்புண்டு.

India Covid 19 Outbreak

Also Read: Doctor Vikatan: அடிக்கடி அறிகுறிகள்; வீட்டிலேயே ரேபிட் ஆன்டிஜென் கிட்டில் கொரோனாவை டெஸ்ட் செய்யலாமா?

அதாவது, ஏற்கெனவே இருந்த கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்திருக்கலாம் அல்லது அவருக்கு ஏற்கெனவே இருந்த சளி, காய்ச்சல் அறிகுறிகளேகூட சற்றுத் தீவிரமடைந்திருக்கலாம் அல்லது புதிதாக அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம். எப்படியிருந்தாலும் அறிகுறிகள் இருக்கும்பட்சத்தில் டெஸ்ட் செய்து பார்த்து, ஒருவேளை கொரோனா உறுதிசெய்யப்பட்டால் அதற்கேற்ற சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


source https://www.vikatan.com/health/healthy/will-infection-become-severe-to-asymptomatic-covid-person-if-contacted-symptomatic-one

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக