Ad

வியாழன், 13 ஜனவரி, 2022

ஐபோனுக்கு வயசு 15, முதல் ஐபோன் அறிமுகப்படுத்தப்பட்ட தினம் இன்று! | இன்று ஒன்று நன்று - 9!

நேத்து ப்ளிப்கார்ட்ல ஒரு ஸ்மார்ட் போன் ஒன்று ஆர்டர் பண்ணியிருந்தேன். 8,000 ரூபாய்க்கும் குறைவான விலையில தான் அந்த ஸ்மார்ட் போனை வாங்கியிருந்தேன். வாங்கி போனைப் ஆன் பண்ணிப் பார்த்துட்டு ஸ்கிரீன்ல ரெப்ரஷ் ரேட் கம்மியா இருக்கு, வெறும் 32 GB ஸ்டோரேஜ் தான் இருக்கு அப்படி இப்படினு நிறைய குறைகள் தோனுச்சு. வெறும் 8,000 ரூபாய்க்கும் குறைவான விலையில இந்த ஸ்மார்ட் போனை வாங்கிட்டு இந்தக் குறைகளை எல்லாம் சொல்லிட்டு இருக்கோம். ஆனால், முதல் ஸ்மார்ட் போன் எப்ப வந்துச்சுனு கொஞ்சம் ஃப்ளாஷ்பேக்கை ஓட்டிப் பார்த்தா 15 வருஷங்கள் தான் ஆகியிருக்கு. 2006 டிசம்பர் 12-ஆம் தேதி தான் ஒரு முழுமையான டச்ஸ்கிரீன் மொபைலை வெளியிடப் போறதா அறிவிச்சுது LG நிறுவனம். ஆனால், இப்போ நம்ம பார்க்க போறது LG நிறுவனத்தைப் பத்தி இல்லை. LG அறிவிச்ச அடுத்த மாதம், 14 வருஷங்களுக்கு முன்ன சரியா இதே ஜன 9-ஆம் தேதி தங்களோட முதல் ஐபோனை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியது ஆப்பிள். அந்த அறிமுக விழாவுல பங்கேற்று ஐபோனை உலகத்துக்கு காமிச்சாரு ஸ்டீவ் ஜாப்ஸ்.

ஆப்பிள் ஐபோன்

முதல்ல ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்துனது LG தான, அப்போ LG-ஐ பத்தி தான பேசனும். முதல் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்துனது LG தான், ஆனா அதைத் தொடர்ந்து LG-யால அந்தப் பாதையில் பயணிக்க முடியல. LG Prada அப்படிங்கிற பேர்ல தான டச்ஸ்கிரீன் போனை அறிமுகப்படுத்துனாங்க. கிட்டத்தட்ட 18 மாசத்துல 1 மில்லியன் மொபைல் வரைக்கும் வித்துச்சு LG. ஆனால், அதுக்கு அடுத்த வந்த LG Prada II-வே பெரிய ஃப்ளாப். வாடிக்கையாளர்களோட எதிர்பார்ப்ப LG-யால பூர்த்தி பண்ண முடியல. இன்னைக்கு LG நிறுவனமே ஸ்மார்ட் போன் சந்தைய விட்டுட்டு வெளிய போய்டுச்சு. ஆன, அதே சமயத்துல ஸ்மார்ட் போன அறிமுகப்படுத்துன ஆப்பிள், இன்னைக்கு ஸ்மார்ட் போன் சந்தையில அசைக்க முடியாத இடத்துல உட்காந்திருக்கு. கிட்டத்தட்ட அன்னைக்கி தொடங்கி இன்னைக்கு வரைக்கும் 14 வருஷங்களா சந்தைக்கு ஏத்த மாதிரி தன்னைத் தகவமைச்சு நிலைச்சு நிற்குது ஆப்பிள்.

சரி, முதல் முதலா ஐபோனை அறிமுகப்படுத்துனப்போ ஸ்டீவ் ஜாப்ஸ் என்ன சொல்லி அறிமுகப்படுத்துனார் தெரியுமா? "நம்மா எல்லோருமே பாட்டு கேக்குறதுக்கு ஐபாட் பயன்படுத்தியிருப்போம், போன் பேசுறதுக்கு மொபைலே போன் பயன்படுத்தியிருப்போம், இணையத்தைப் பயன்படுத்துறதுக்கு கம்ப்யூட்டரைப் பயன்படுத்தியிருப்போம். இது மூனையும் ஒன்னா சேர்த்து மொபைல் போன்கள்ல கூட பயன்படுத்தியிருப்போம். ஆனால், அதையெல்லாம் பயன்படுத்த ரொம்ப கஷ்டமா இருக்கு. தேவையில்லாத பட்டன்களை எல்லாம் நிறைய குடுத்துருக்காங்க. இது எதுவுமே இல்லாம, முழுமையா நம்ம விரலை மட்டும் வச்சு பயன்படுத்தக்கூடிய புதிய ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்துறோம்" அப்படினு சொல்லிட்டே ஆப்பிளோட முதல் ஐபோனை அறிமுகப்படுத்துறாரு ஸ்டீவ் ஜாப்ஸ்.

ஆப்பிளின் முதல் ஐபோன்

2007-ல ஐபோன் அறிமுகமானலும், இதற்கான விதை 2004-லேயே போடப்பட்ருச்சு. 2004-ல ஹார்டுவேர் இன்ஜினியர் டோனி ஃபடெல், சாப்ட்வேர் இன்ஜினியர் ஸ்காட் ஃபோர்ஸ்டால் அப்புறம் டிசைன் இன்ஜினியர் ஜோனதன் ஐய்வ் மூனு பேர் கிட்டயும், ஐபோன் உருவாக்குறதைப் பத்தி சொல்றாரு ஸ்டீவ் ஜாப்ஸ். இதுக்கு ப்ராஜெக்ட் பர்ப்பிள்னு பேர் வச்சு ரொம்ப ரகசியமாவே வச்சிருந்துருக்காங்க. எந்த பட்டன்களும் இல்லாம முழுமைய ஸ்கிரீன் மட்டுமே கொண்ட ஒரு ஸ்மார்ட் போனை உருவாக்குறது தான் திட்டம். ஸ்மார்ட் போன் மட்டுமில்லாம டேப்ளட்டையும் உருவாக்கனும்னு திட்டமிட்டாங்க. அந்த நேரத்துல ஆப்பிளோட மொத்த வருமானத்துல 48 சதவிகிதம் ஆப்பிளோட ஐபாட்ல இருந்து தான் வந்துட்டு இருந்துச்சு. அதுனால, தான் ஐபாட், இன்டர்நெட் அப்புறம் போன்கால் மூனையும் சேர்த்து செய்யக்கூடிய ஸ்மார்ட் போனை உருவாக்கனும்னு ஸ்டீவ் ஜாப்ஸ் நினைச்சாரு. இதையெல்லாம் மனசுல வச்சு 2004-லையே ஒரு போனை உருவாக்கவும் செஞ்சாங்கலாம். ஆனால், ஒரு மொபைல் போனை உருவாக்குறது கொஞ்சம் கஷ்டமான வேலையா தான் இருந்திருக்கு. அதுனால, மேட்டரோலா கிட்ட ஒரு ஒப்பந்தம் போட்டது ஆப்பிள்.

2005-ல ஆப்பிளும் மோட்டோரோலாவும் சேர்ந்து மோட்டோரோலா ROKR E1 அப்படிங்கிற பேர்ல ஒரு போனை உருவாக்குனாங்க. ஆனால், ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு அது சரியில்லையோனு தோனுச்சு. அதுனால, சொந்தமா தாங்களாகவே திரும்பவு போனை உருவாக்குற முயற்சியில இறங்குறாங்க. அதுக்கு அப்புறம் தான் AT&T நிறுவனத்தோட கைகோர்த்து புதிய ஐபோனை வெளியிடுது ஆப்பிள். ஜனவரி 7-ல அறிவிச்சு, ஜூன் 29-ம் தேதி முதல் ஆப்பிள் ஐபோனை வெளியிடுராங்க. ஆப்பிள் புது ஸ்மார்ட் போனை வெளியிடும்போது ஆப்பிள் கடைகளுக்கு வெளிய மக்கள் வரிசையில நின்னு போனை வாங்கிட்டு போவாங்கனு நாம செய்தியில பார்த்திருப்போம். இந்த பழக்கம் முதல் ஐபோன்லையே தொடங்கிடுச்சு. ஆப்பிளோட முதல் ஐபோனை வாங்க மக்கள் கூட்டம் கூட்டமா வரிசையில ஆப்பிள் கடைகளுக்கு வெளிய காத்துட்டு இருந்துருக்காங்க.

ஆப்பிள் ஐபோன்

அன்னைக்கு தொடங்கி இன்னைக்கு வரைக்கும் ஆப்பிளோட ஐபோனை மிஞ்ச வேற ஸ்மார்ட் போன் வரலை. இன்னைக்கு உலகத்துலயே அதிக மதிப்புடைய நிறுவனம்னா அது ஆப்பிள் தான். அதோட இன்றைய சந்தை மதிப்பு 3 ட்ரில்லியன் கோடிய தான்டி நிக்கிது. 3 ட்ரில்லியன் கோடி சந்தை மதிப்பை வச்சிருக்கிற ஒரே நிறுவனம் ஆப்பிள் தான். ஆப்பிளோட இத்தனை வளர்ச்சிக்கும் காரணம் ஐபோன் தான். ஆப்பிளோட வருமானத்துல முதன்மையா இருக்கிறது ஐபோன் விற்பனையில் இருந்து வர்ர வருமானம் தான். ஐபோன் தான் டெக் உலகத்துல ஆப்பிளோட கோல்டன் டிக்கெட்டா இருந்துருக்கு.

முதல் முதலா வெளியான ஆப்பிள் ஐபோனோட விலை 499 அமெரிக்க டாலர்கள். அன்றைய இந்திய ரூபாய் மதிப்புக்கு 21,000 ரூபாய். முதல் முதலா வெளியான ஆப்பிளோட ஐபோனோட இன்றைய விலை 4,000 அமெரிக்க டாலர்கள். இந்தியா ரூபாய் மதிப்புக்கு 2,80,000 ரூபாய். ஆமாங்க, ஆப்பிளோட அந்த முதல் ஐபோனை வாங்குறதுக்கு இன்னைக்கும் ஆப்பிள் ரசிகர்கள் ரொம்ப ஆர்வமா இருக்காங்க. இது தான் ஆப்பிளோட பலம்.



source https://www.vikatan.com/technology/nostalgia/iphone-turns-15-today

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக