Ad

ஞாயிறு, 9 ஜனவரி, 2022

வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டதாக புகார்! -ஓ.பி.எஸ், ரவீந்திரநாத் மீது வழக்கு பதிவு

தேனி மாவட்டம் காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் மிலானி. பொறியாளரான இவர், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக கடந்த 2018 வரை இருந்தவர். இந்நிலையில் இவர் தேனி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் 30-ம் தேதி தனித்தனியாக இரண்டு மனுக்களை தாக்கல் செய்தார்.

அந்த மனுக்களில், கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் மகன், ஓ.பி.ரவீந்திரநாத்குமார் மற்றும் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் இணைத்துள்ள பிரமாணப் பத்திரத்தில், உண்மையான சொத்து விவரங்களை மறைத்து பொய்யான தகவல்களை தெரிவித்துள்ளனர்.‌ எனவே அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

நீதிமன்றம்

வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுதாரரின் புகார் தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை அறிக்கையை வருகின்ற பிப்ரவரி 7-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

Also Read: `வேட்புமனுவில் சொத்து விவரம் மறைக்கப்பட்டதா?!’ - ஓ.பி.எஸ்., ரவீந்திரநாத் மீது வழக்கு பதிய உத்தரவு

அதனடிப்படையில், தேனி மாவட்ட குற்றப்பிரிவுப் போலீஸார், போடி எம்.எல்.ஏ-வும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீ ர்செல்வம் 2021 மார்ச் 3 ஆம் தேதி தாக்கல் செய்த வேட்பு மனுவில் சொத்து மற்றும் கடன் தொடர்பான விவரங்கள் தவறாக உள்ளதாகவும், அவரின் மகனும் தேனி எம்.பியுமான ரவீந்திரநாத் குமார் 2019 மார்ச் 22 -ம் தேதி தாக்கல் செய்த வேட்பு மனுவில் சொத்து விவரங்களை தவறாகக் குறிப்பிட்டுள்ளதாகவும் மனுதாரர் மிலானி அளித்துள்ள புகாரின் பேரில் இருவரும் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/case-registered-against-ops-and-his-son

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக