Ad

புதன், 12 ஜனவரி, 2022

AMRITA கல்வி நிறுவனங்களில் இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது!

AMRITA ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங்கில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது.

NAAC-யால் A++ அங்கீகாரம் வழங்கப்பட்ட, 2021-ன் NIRF தரவரிசைப்பட்டியலின்படி இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 5-வது சிறந்த பல்கலைக்கழகமாக விளங்கும் AMRITA பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புக்கான சேர்க்கைகள் தற்போது தொடங்கியிருக்கின்றன. அமிர்தா விஷ்வ வித்யாபீடத்தில் பொறியியல் துறைகளில் சேர அமிர்தா பொறியியல் நுழைவுத் தேர்வு (AEEE) அல்லது 2021 JEE Mains தேர்வு, SAT தேர்வு, பியர்சன் UG நுழைவுத் தேர்வு ஆகிய ஏதாவது ஒரு தேர்வில் பெற்ற மதிப்பெண்ணைக் கொண்டு விண்ணப்பிக்கலாம். அம்ரிதாவின் AEEE நுழைவுத் தேர்வு, JEE Mains தேர்வு வடிவத்திலேயே நடைபெறும்.

AEEE நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிப்பதற்கு 12-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் 55 சதவிகித மதிப்பெண்களும், மூன்றையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 60 சதவிகித மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் 2001, ஜூலை 1-க்குப் பிறகு பிறந்தவராக இருக்க வேண்டும்.

பொறியியல் படிப்புகள்

AMRITA விஷ்வ வித்யாபீடத்தின் கேரளா, பெங்களூர், சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நான்கு கிளைகளிலும் B.Tech படிப்புகளில் சேர பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் இரண்டு சுற்றுகளாக AEEE 2021 நுழைவுத் தேர்வு நடத்தப்படும். படிப்பில் சேர இணையவழித் தேர்வு அல்லது நேரடித் தேர்வு என இரண்டு வழிகளில் ஏதேனும் ஒரு வழியில் மாணவர்கள் தேர்வெழுதலாம். எந்த வழியில் தேர்வு எழுத வேண்டும் என்பதைத் தேர்வெழுதும் மாணவரே முடிவு செய்து கொள்ளலாம். ஒரு மாணவர் அதிகபட்சமாக 3 முறை நுழைவுத் தேர்வை எழுதலாம். 3 முயற்சிகளில் எதில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார்களோ அது தரவரிசைக்குப் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

AMRITA ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங்கில் மொத்த இடங்களில், 50 சதவிகித இடங்களை உதவித்தொகை பெரும் மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. 2021 இங்குப் பயின்ற 88 சதவிகித மாணவர்கள் பல்வேறு முன்னணி MNC-க்களில் வேலைவாய்ப்பினைப் பெற்றிருக்கிறார்கள். இங்குப் பயின்ற மாணவர்கள் அதிகபட்சமாக வருடத்திற்கு 56.95 லட்சம் ரூபாய் சம்பளத்தில் மாணவர்கள் வேலைவாய்ப்பினை பெற்றிருக்கிறார்கள். மைக்ரோசாப்ட், இன்டெல், அமேசான் மற்றும் பல முன்னணி நிறுவனங்களில் சராசரியாக வருடத்திற்கு 6 லட்சம் ரூபாய் சம்பளத்தில் மாணவர்கள் வேலைவாய்ப்பினைப் பெற்றிருக்கிறார்கள்.

மேலும் விபரங்களுக்கு: amrita.edu/btech

AMRITA ஸ்கூல் ஆஃப் பிஸ்னஸில் முதுகலை மேலாண்மைப் படிப்புக்கான சேர்க்கை:

NAAC-யால் A++ அங்கீகாரம் வழங்கப்பட்ட, 2021-ன் NIRF தரவரிசைப்பட்டியலின்படி இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 5-வது சிறந்த பல்கலைக்கழகமாக விளங்கும் அமிர்தா பல்கலைக்கழகத்தில் முதுகலை மேலாண்மைப் படிப்பிற்கான சேர்க்கைகள் தொடங்கியிருக்கின்றன.

CAT, XAT, MAT, CMAT, GMAT, GRE ஆகிய தேர்வுகளில் ஏதாவது ஒன்றில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்கள் அமிர்தா ஸ்கூல் ஆஃப் பிசினஸில் MBA படிப்புகளுக்காக விண்ணப்பிக்கலாம். மார்க்கெட்டிங், பைனான்ஸ், ஆப்ரேஷன்ஸ், பிஸ்னஸ் அனாலிட்டிக்ஸ், மற்றும் ஹ்யூமன் ரிசோர்சஸ் ஆகியவற்றில் நிபுணத்துவத்துடன் MBA படிப்புகளை வழங்குகிறது அமிர்தா ஸ்கூல் ஆஃப் பிஸ்னஸ்.

அமெரிக்காவின் சிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றான University of Buffalo-உடன் இணைந்து ஒருங்கிணைந்த MBA-MS இரட்டை முதுகலை மேலாண்மைப் பட்டப்படிப்பையும் வழங்குகிறது அமிர்தா பல்கலைக்கழகம். மேலும், சர்வதேச அளவில் முன்னணியில் இருக்கும் கல்வி நிறுவனங்களுடன் Student Exchange Program-யும் கொண்டிருக்கிறது அமிர்தா. AMRITA ஸ்கூல் ஆஃப் பிசினஸில் 2022-ம் ஆண்டுக்கான MBA படிப்புகளில் சேர இணையவழியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.

மோலாண்மைப் படிப்புகள்

விண்ணப்பித்த மாணவர்கள் பெற்ற அகாடமிக் மற்றும் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வுக்கான தேதி மின்னஞ்சல் அல்லது SMS மூலம் தெரிவிக்கப்படும்.
AMRITA ஸ்கூல் ஆஃப் பிசினஸ் பெரும்பான்மையான இடங்கள் உதவித்தொகை பெறும் மாணவர்களுக்காகவே ஒதுக்கப்பட்டிருக்கிறது. 2021-ல் AMRITA ஸ்கூல் ஆஃப் பிஸ்னஸில் பயின்ற அனைத்து மாணவர்களும் வேலைவாய்ப்பினை பெற்றிருக்கிறார்கள். இங்குப் பயின்ற மாணவர்கள் அதிகபட்சமாக வருடத்திற்கு 17.55 லட்சம் ரூபாய் சம்பளத்திலும், சராசரியாக 7.71 லட்சம் ரூபாய் சம்பளத்திலும் வேலைவாய்ப்பினைப் பெற்றிருக்கிறார்கள்.

மேலும் விபரங்களுக்கு: amrita.edu/mba



source https://www.vikatan.com/news/education/admission-started-in-amrita-university-for-engineering-and-mba

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக