Ad

செவ்வாய், 11 ஜனவரி, 2022

`2 லட்சம் சதுர அடி... சர்வதேச தரம்! - மதுரையில் அமையவுள்ள கலைஞர் நினைவு நூலகத்தின் சிறப்புகள்?!

சர்வதேச தரத்தில் 114 கோடி ரூபாய் செலவில் மதுரையில் அமையவுள்ள கலைஞர் நினைவு நூலக கட்டுமானப் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டியுள்ளார்.

சென்னையிலிருந்து அடிக்கல் நாட்டும் முதலமைச்சர்

திமுக தேர்தல் அறிக்கையில் மதுரையில் கலைஞர் நினைவை போற்றும் வகையில் சர்வதேச தரத்தில் பிரமாண்ட நூலகம் மதுரையில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆட்சிக்கு வந்தவுடன் இதற்கான அரசாணை பள்ளிக்கல்வித்துறை மூலம் கடந்த ஆண்டு ஜூலை 3-ம் தேதி வெளியிடப்பட்டது.

இதற்காக மதுரை புது நத்தம் சாலையில் பொதுப்பணித்துறை குடியிருப்பு வளாகத்தில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் கலைஞர் நினைவு நூலகம் கட்ட முடிவெடுக்கப்பட்டது.

மதுரையில் நடந்த விழா

சென்னை கோட்டூர்புரத்தில் 2010-ல் பிரமாண்டமான அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகம், கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது கட்டப்பட்டது. அதைப்போலவே தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் சர்வதேச தரத்தில் நூலகம் மதுரையில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக ஆரம்பத்தில் 70 கோடிக்கு திட்டமிடப்பட்டு பின்பு 99 கோடியாக உயர்த்தப்பட்டு இறுதியாக தற்போது 114 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிதாக அமையவுள்ள கலைஞர் நினைவு நூலகம் எப்படி இருக்கும்? என்னவெல்லாம் இருக்கும்? என்பதை பார்ப்போம்.

முதல் தளத்தில் 3110 சதுர அடி பரப்பில் குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கம், பருவ இதழ்கள், நாளிதழ்கள், குழந்தைகளுக்கான நூலக பிரிவும்,

கலைஞர் நினைவு நூலகம் மாதிரி

இரண்டாம் தளத்தில் 3110 சதுர அடி பரப்பில் தமிழ் நூல்கள் பிரிவும்,

மூன்றாம் தளத்தில் 2810 சதுர அடி பரப்பில் ஆங்கில நூல்கள் பிரிவும்,

நான்காம் தளத்தில் 1990 சதுர அடி பரப்பில் அமரும் வசதியுடன் கூடிய ஆங்கில நூல் பிரிவும்,

ஐந்தாம் தளத்தில் 1990 சதுர அடியில் மின் நூலகம், அரிய நூல்கள் பிரிவு, ஆராய்ச்சி இதழ்கள் பிரிவு, போட்டித்தேர்வு நூல் பிரிவும், ஆறாம் தளத்தில் 1990 சதுர அடியில் கூட்ட அரங்கு, நூலகத்துக்கான ஸ்டுடியோ, மிண்ணணு உருவாக்கப் பிரிவு, நுண்படச்சுருள், நுண்பட நூலக நிர்வாக பிரிவு, நூல் கொள்முதல் பிரிவு என பல பிரிவுகள், நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட பல வசதிகள் அமைக்கப்பட உள்ளது.

முதலமைச்சர் சென்னையிலிருந்து அடிக்கல் நாட்ட மதுரையில் கட்டுமான வேலைகள் தொடங்கியது. இந்த நூலகம் கட்டப்பட்ட பின்பு மதுரையின் மற்றொரு அடையாளமாக திகழும் எனும் அளவுக்கு .பிரமாண்ட நூலகமாக அமைய உள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/what-was-special-in-kalaingar-memorial-library

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக