அமெரிக்காவில் பிரதமர் மோடி!
நான்கு நாள் பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றடைந்தார். விமானத்தில் அவர் வாஷிங்டன் சென்றடைந்த அவருக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர், இந்திய நேரப்படி அதிகாலை 4 மணியளவில், பிரதமர் மோடி வாஷிங்டன் சென்றடைந்தார்.
பிரதமர் மோடி, இன்று ஜப்பான் பிரதமர் யோஷிகிடே சுகா, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த சந்திப்பின் போது முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களின் சி.இ.ஓ-க்களை சந்தித்துப் பேசுகிறார். தொடர்ந்து அமெரிக்க துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸை சந்திக்கிறார் பிரதமர் மோடி.
இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவு. ஆப்கன், சீனா விவகாரம் தொழிநுட்பம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை, அதாவது, வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கும் பிரதமர், தொடர்ந்து குவாட் மாநாட்டிலும் பங்கேற்கிறார். நியூயார்க்கில் ஐநா பொது சபைக் கூட்டத்திலும் உரையாற்ற உள்ளார் பிரதமர் மோடி.
source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-23-09-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக