Ad

ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

சென்னை: மூன்று இளைஞர்களால் சிறுமிக்கு அடுத்தடுத்து நேர்ந்த கொடுமை! - இருவர் கைது

சென்னை வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் வசித்துவரும் 15 வயது சிறுமியைக் காணவில்லை என அவரின் குடும்பத்தினர் கடந்த 28.8.2021-ம் தேதி ராயபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார் சிறுமி மாயம் என வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் சிறுமிக்கு அறிமுகமான பொன்னேரியைச் சேர்ந்த விஜய் என்பவர், அவரிடம் ஆசைவார்த்தைகளைக் கூறி வேளச்சேரியிலுள்ள உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றது தெரியவந்தது.

பாலியல் தொல்லை

அதனால் சிறுமியைத் தேடி போலீஸார் வேளச்சேரிக்குச் சென்றனர். ஆனால் சிறுமியும் விஜய்யும் அங்கு இல்லை. அவர்கள் இருவரும் வேளச்சேரியிலிருந்து சென்னை சென்ட்ரலுக்குச் செல்லும் தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. அதனால் போலீஸார் சென்ட்ரலுக்கு வந்தனர். அங்கேயும் சிறுமி இல்லை. இந்தநிலையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறுமியை விஜய் விட்டுவிட்டு வீட்டுக்குச் சென்ற தகவல் போலீஸாருக்கு தெரியவந்தது. ஆனால் அங்கேயும் சிறுமி இல்லை.

இந்தச் சூழலில் சென்ட்ரலிருந்து ஆட்டோ மூலம் சிறுமி ராயபுரம் மாடிப் பூங்கா பகுதிக்குச் சென்றிருக்கிறார். அப்போது சிறுமிக்கு அறிமுகமான இளையராஜாவை அவர் சந்தித்திருக்கிறார். பின்னர் இளையராஜா சிறுமியை அழைத்துக்கொண்டு மெரினா கடற்கரைக்குச் சென்றிருக்கிறார். இரவு நீண்ட நேரமானதால் சிறுமியை வண்ணாரப்பேட்டையிலுள்ள இளையராஜாவின் நண்பரான கணேஷ் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு சிறுமிக்கு இளையராஜாவும் கணேஷும் பாலியல் தொல்லை கொடுத்திருக்கின்றனர். அங்கிருந்து சிறுமி வெளியேறி வீட்டுக்கு வந்திருக்கிறார்.

Also Read: சென்னை: குளிர்பானத்தில் மது; பெற்ற மகளுக்குப் பாலியல் தொல்லை! - தந்தை, சித்தி கைது

பாலியல் தொல்லை

பின்னர் காவல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்ட சிறுமியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது விஜய், இளையராஜா, கணேஷ் மூன்று பேரும் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தகவலை தெரிவித்திருக்கிறார். அதைக் கேட்டு சிறுமியின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து ராயபுரம் காவல் நிலையத்திலிருந்து சிறுமி மாயம் வழக்கு, ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

Also Read: நாமக்கல்: போர்டில் ஸ்பா மசாஜ்; உள்ளே பாலியல் தொழில்! - அதிரடி காட்டிய போலீஸார்

மகளிர் போலீஸார் சிறுமியிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். அதையடுத்து சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் சிக்கிய பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கணேஷ் என்கிற கணேசன் (20), பழைய ஆட்டுத் தொட்டி சாலை, பிளாட்பாரப் பகுதியில் வசிக்கும் இளையராஜா (19) இருவரையும் போலீஸார் கைதுசெய்தனர். இந்த வழக்கில் பொன்னேரியைச் சேர்ந்த விஜய்யை போலீஸார் தேடிவருகின்றனர். இவர்கள் மீது போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். சம்பந்தப்பட்ட சிறுமிக்கு கவுன்சலிங், மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-two-youth-in-pocso-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக