Ad

வியாழன், 23 செப்டம்பர், 2021

தாம்பரம்: ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி கொலை; போலீஸார் தீவிர விசாரணை

எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் தாம்பரம் ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் காத்திருந்தார். அப்போது அஙகு வந்த இளைஞர், இளம்பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தார். திடீரென அந்த இளைஞர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இளம்பெண்ணைச் சரமாரியாகக் குத்தினார். இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்தச் சமயத்தில் இளம்பெண்ணைக் கத்தியால் குத்திய இளைஞரும் அதே கத்தியால் தன்னுடைய கழுத்தையும் அறுத்து, தற்கொலைக்கு முயன்றார். இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடினர்.

Also Read: ``நான் அமுதா பேசுறேன்" பெண் குரலில் பேசிய ஆண்;தன்பாலின ஈர்ப்பு வீடியோவால் கொலை செய்யப்பட்ட கொடூரம்!

தாம்பரம்

Also Read: சுவாதி கொலையும்! ராம்குமார் முடிவும்! ஏன் நடந்தது?

இதையடுத்து இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு இளம்பெண் உயிரிழந்தார். இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த இளம்பெண் கல்லூரி மாணவி என்று தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து தாம்பரம் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் காதல் விவகாரத்தில் இந்தச் சம்பவம் நடந்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இன்ஜினீயர், ராம்குமார் என்பவரால் குத்திக் கொலை செய்யப்பட்டார். அதன் பிறகு சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார், மின்வயரைக் கடித்துத் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவத்தைப்போலவே தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/college-student-murdered-in-tambaram-railway-station

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக