Ad

ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

மதுர ருசி: சால்னாவில் முக்கிய சிங்கப்பூர், மலேசியா, சிலோன் பரோட்டாக்கள் - கலக்கும் மதுரை நியூ மாஸ்!

மதுரைக்காரர்களின் உணவு வகைகளை பல ஊர்காரர்களும் ரசித்து ருசிக்கும்போது, மதுரைக்காரர்களுக்கே புதுவித ருசியை கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள் நியூ மாஸ் ஹோட்டல்காரர்கள்.
முர்தபா

பரோட்டாக்கடை இல்லாத ஊர்களே தமிழகத்தில் இல்லையென்று சொல்லலாம். அதேநேரம் மதுரையிலுள்ள பரோட்டா கடைகள் ரொம்ப ஸ்பெஷல்.

மதுரையில் சிறியது முதல் பெரிய கடைகள் வரை பரோட்டாவுக்கு தரும் நான்கு வகை சால்னாக்கள் இன்னும் சுவையை கூட்டுகிறது.

வெரைட்டி பரோட்டா

பரோட்டக்களை பலவைகையாக உருமாற்றி மதிப்பு கூட்டுகிறார்கள் மதுரைக்காரர்கள்.

Also Read: மதுரை ஹேங்க்அவுட்: திருமாலிருஞ்சோலை, பழமுதிர்சோலை... தெய்விக அழகர் மலைக்கு ஒரு சூழல் சுற்றுலா!

அதுபோன்று சுவையான வித்தியாசமான பலவகையான பரோட்டக்களால் பட்டைய கிளப்புகிறார்கள் நியூ மாஸ் ஹோட்டல்காரர்கள்.

குர்பானி வீச்சு

தமிழர்கள் வாழும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் விரும்பப்படும் பரோட்டா வகைகளை அதே தரம் சுவையுடன் மதுரை ஸ்டைலில் தயாரிக்கிறார்கள்.

சமீபத்தில் மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகிலுள்ள நியூ மாஸ் ஹோட்டலின் கிளைக்குச் சென்றிருந்தோம். பரோட்டக்களில் கலை நயத்துடன் சுவை நயமும் படைப்பதை அனுபவப்பூர்வமாக உணர முடிந்தது.

வெரைட்டி பரோட்டா

ஏற்கெனவே நகரின் பல இடங்களில் உள்ள இவர்களின் ஹோட்டல்களில் பரோட்டோ, முட்டை பரோட்டா, வீச்சு பரோட்டா, மட்டன் சுக்கா, சிக்கன் கிரேவி பிரபலமாக இருந்தாலும் அண்ணா பேருந்து நிலைய ஹோட்டலில் வெளிநாட்டு பரோட்டக்களால் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கிறார்கள்.

மலேசியா வீச்சு,

சிங்கப்பூர் வீச்சு,

சிலோன் வீச்சு,

குர்பாணி வீச்சு

என்று வீச்சோ வீச்சென்று வீசி பரோட்டாவில் வரிசை கட்டுகிறார்கள்.

நியூ மாஸ் ஹோட்டல்

இவற்றை வழக்கமான வீச்சு பரோட்டா போலில்லாமல் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு சுவையுடன் உருவாக்குகிறார்கள்.

வழக்கமான பார்பிக்யூ சிக்கன், தந்தூரி சிக்கன், கிரில் சிக்கன், ஹரியாளி சிக்கன், சவர்மாவில் தங்கள் தனிப்பட்ட மசாலா மிக்ஸை சேர்த்து அதிகப்படியான சுவையுடன் தருகிறார்கள்.

வெரைட்டி பரோட்டா

வாழை இலை பரோட்டாவில் பரோட்டாவுக்கு மேல் கறி வைத்து, இதற்காகத் தயாரிக்கப்பட்ட சிறப்பான கிரேவியுடன் வேக வைப்பதால் வாழை இலை மனத்துடன் கிரேவி மனமும் சேர்ந்து சாப்பிட வருகிறவரை அடிமையாக்குகிறது.

Also Read: திருச்சி ஊர்ப்பெருமை: நாவில் கரையும் பதம், சுண்டியிழுக்கும் சுவை - மணப்பாறை முறுக்கின் ரகசியம் என்ன?

இப்படி வகை வகையான பரோட்டாவுடன் மற்ற வழக்கமான உணவுகளும் கிடைக்கின்றன.

வெரைட்டி பரோட்டாக்கள்

கடை நிர்வாகியிடம் பேசியபோது, "வழக்கமான பரோட்டாவுடன் சிலோன் சிங்கப்பூர் மலேசியாவில் தயாரிக்கப்படுவதுபோல் அதே ருசியில் பரோட்டோ, வீச்சு, முர்தபாவை வழங்க வேண்டுமென்று நினைத்தோம். அதன்படி வழங்கிக் கொண்டிருக்கிறோம். வீட்டு மசாலாவில் தயாரிக்கப்படும் எங்கள் ஹோட்டல் உணவுகள் அதிக சுவையானது. எளிதில் ஜீரணமாகக் கூடியது. மதுரை பாரம்பரிய சுவை மாறாமல் வெளிநாட்டு ஸ்டைலில் பரோட்டாக்கள் தயாரிக்கிறோம்" என்றார்.

அப்புறம் என்ன மதுரை சால்னாவில் முக்கிய சிங்கப்பூர், மலேசியா, சிலோன் பரோட்டக்களை சாப்பிட மதுரைக்கு வாங்க!


source https://www.vikatan.com/food/food/madurai-foods-variety-of-foreign-recipe-parottas-and-the-local-gravies

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக