Ad

புதன், 8 செப்டம்பர், 2021

ஸ்ரீஸூக்த ஹோமத்தின் பெருமைகள்: விரும்பியவை வசமாகும், வேதனைகள் தீரும்! நீங்களும் சங்கல்பிக்கலாம்!

சுடர்விடும் விளக்கில் மகாலட்சுமி தீபலட்சுமியாக இருக்கின்றாள். ஏற்றும் தூபத்தில் மகாலட்சுமி பரிமள லட்சுமியாக கொலுவிருக்கிறாள். படைக்கும் நைவேத்தியத்தில் லட்சுமி அன்னலட்சுமியாக இருக்கிறாள். ஒலிக்கும் மணிச் சத்தத்தில் வேதலட்சுமியாக வெளியாகிறாள். வாசலில் மாக்கோலமிட கிரக லட்சுமி வருவாள். நெற்றியில் திலகமிட பாக்கிய லட்சுமி அருளுவாள். இப்படி அன்பும் தூய்மையும் நிறைந்த இடத்தில் எல்லாம் திருமகள் தானாகவே வெளியாகி 16 வகை செல்வங்களையும் அளிக்கிறாள் என்கின்றன புராணங்கள்.
மகாலட்சுமி

சங்கு சக்கரதாரியான திருமகளை சரண் அடைந்த ஜீவன்கள் எந்த துக்கத்திலும் வீழ்வதில்லை என்கிறார்கள் ஆன்றோர்கள். கருடனை வாகனமாகக் கொண்டு வலம் வரும் இந்த தேவிக்கு இலந்தைப் பழம் என்றால் பெரு விருப்பமாம். நெல்லிக்கனி திருமகளே குடியிருக்கும் அற்புதக்கனி என்கிறார்கள். வில்வமும் திருமகளின் அம்சமே என்கின்றன நூல்கள். அண்டசராசரங்களின் நாயகியாம் ஆதிபராசக்தி எடுத்த தச மகாவித்யை ரூபங்களில் 10-வது வித்யையாக அவதரித்தவள் கமலாத்மிகா எனும் மகாலட்சுமி.

குபேரனை ஏவலாளியாகக் கொண்டு நவநிதிகளையும் விநியோகிப்பவள் இவளே. ஜொலிக்கும் தங்க நிறத்தினள். ஒப்புயர்வற்ற நான்கு யானைகளின் துதிக்கையால் தாங்கும் பொன்மயமான அமிர்த கலசங்களால் அனவரதமும் அபிஷேகம் செய்விக்கப்படுபவள். நான்கு திருக்கரங்கள் கொண்டவள். தாமரை மலர்மேல் அமர்ந்தவள்.

Also Read: விநாயகர் சதுர்த்தி: பேதமே இல்லாத பெருங்கடவுளின் வலது தந்தம் உடைந்தது எப்படி? பிள்ளையார் பெருமைகள்!

ரத்னாபரணங்கள் அணிந்து, சிவப்பு பட்டாடை உடுத்தி, மேலிரு கரங்களில் அன்றலர்ந்த தாமரை மலர்களை ஏந்தி, கீழிரு திருக்கரங்களில் அபய வரதம் அளிப்பவள். சர்வாலங்கார பூஷிதையாக சதா கருணை கொண்ட மனத்தினளாகக் காட்சி தருபவள் மகாலட்சுமி.

கமலாத்மிகா

அதனால் சகல தரித்திரத்தில் இருந்தும் விடுபட ‘தாம் பத்மினீம் சரணமஹம் ப்ரபத்யே’ என லட்சுமியை சரணடைய உபதேசிக்கிறது ஸ்ரீஸூக்தம். ஆனந்தர், கர்தமர், ஸிக்லீதர் உள்ளிட்ட ரிஷிகள் மகாலட்சுமியை சரண் அடைவதே மானிடர் பிழைப்பதற்கான வழி என்று உபதேசித்துள்ளார்கள். மகாலட்சுமியின் அருள்பெற, அவள் என்றென்றும் நம்மோடு நிலைத்திருக்க தினமும் ஸ்ரீஸூக்த ஜபம் செய்ய வேண்டும் என்பார்கள். ஆண்டுக்கு ஒருமுறையாவது ஸ்ரீஸூக்த ஹோமம் செய்ய வேண்டும் என்பார்கள் ஆன்றோர்கள்.

வில்வம், தாமரை, மல்லிகை, சந்தனம், விசேஷ சமித்துகள், சுகந்த பரிமள திரவியங்கள் கொண்டு செய்யப்படும் இந்த ஹோமத்தால் திருமகள் மகிழ்வாள் என்றும் அதனால் நீங்கள் வேண்டி விரும்பும் சகல ஐஸ்வர்யங்களையும் அளிப்பாள் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக தனம், தான்யம், மகப்பேறு, சௌபாக்கிய வாழ்வு, அதிகாரம், பதவி, வேலை வாய்ப்பு, தோழி விருத்தி, செல்வாக்கு, சொல்வாக்கு, வெளிநாட்டு வாய்ப்பு, செல்வபோகம் யாவும் அருள்வாள் என்கின்றன ஆன்மிக நூல்கள்.

ஸ்ரீஸூக்தஹோமம்

மேலும் கடன் தீரும்; தீராத நோய் தீரும்; பகை உறவாகும்; விரும்பியவை வசமாகும்; வேதனைகள் தீரும்; அவமானங்கள் வெகுமானமாக மாறும்; அச்சங்கள் விலகும் என இந்த ஹோமத்தின் பெருமைகளைச் சொல்வார்கள்.

இந்தச் சிறப்பு வாய்ந்த ஸ்ரீஸூக்த ஹோமம் வரும் புரட்டாசி மாத பௌர்ணமி (20-9-2021) திங்கள்கிழமை நாளில் நடைபெற உள்ளது. தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் அமைந்துள்ள ஸ்ரீசாம்ராஜ்ய லட்சுமி நரஸிம்ஹ பீடத்தில் இந்த வைபவம் நடைபெற உள்ளது.

வாசகர் நலம் பெற சிறப்புமிக்க இந்த ஹோமத்தை ஸ்ரீசாம்ராஜ்ய லட்சுமி நரஸிம்ஹ பீடமும் உங்கள் சக்தி விகடனும் இணைந்து நடத்தித் தர உள்ளார்கள். அன்பர்கள் யாவரும் இந்த ஹோமத்தில் சங்கல்பிக்கலாம். திருமண வரன் வேண்டும் அன்பர்களுக்கு இந்த ஸ்ரீஸூக்த ஹோமம் ஒரு நல்வாய்ப்பு எனலாம். இந்த ஸ்ரீஸூக்த ஹோமத்தில் சங்கல்பித்துப் பிரார்த்தித்தால் நித்ய சௌபாக்கிய வாழ்வை அடைவர் என்பது நிச்சயம்.

ஸ்ரீசூக்த ஹோமம்

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்) மற்றும் ரட்சை அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.



source https://www.vikatan.com/spiritual/gods/sri-suktha-homam-in-keezhapavur-sri-samrajya-lakshmi-narasimha-peedam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக