Ad

புதன், 25 ஆகஸ்ட், 2021

Tamil News Today: `இந்தியாவில் ஒரே நாளில் 46,164 பேருக்கு பாதிப்பு; கேரளாவில் மட்டும் 31,455!’ - கொரோனா நிலவரம்

இந்தியாவில் மீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு!

இந்தியாவில், கடந்த சில நாள்களாக கொரோனா பாதிப்பு குறைவதும் அதிகரிப்பதுமாக மாறி மாறி இருக்கிறது. கடந்த சில நாள்களாக பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 46,164 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 3,25,58,530 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் நேற்று பதிவான 46,164 என்னும் பாதிப்பு எண்ணிக்கையில் கேரளாவில் மட்டும் 31,455 பாதிப்புகள் பதிவாகி உள்ளது குறிப்பிடதக்கது.

கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 607 பேர் கொரோனா காரணமாக பலியாகியுள்ளனர். இந்தியாவில் மொத்த பலி எண்ணிக்கை 4,36,365 ஆக உயர்ந்திருக்கிறது. நேற்று ஒரே நாளில் 34,159 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இந்தியாவில் இருந்து இதுவரை 3,17,88,440 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 80,40,407 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இதுவரை 60,38,46,475 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது எனது குறிப்பிடதக்கது.



source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-26-08-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக