என் சகோதரி இரைப்பை குடல் புற்றுநோய்க்கான அறுவைசிகிச்சை செய்து கொண்டுள்ளார். தவிர அவருக்கு இதயம் தொடர்பான பாதிப்பும் உள்ளது. அதற்கும் மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கிறார். அவர் கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா?
- சுந்தரவடிவேலு (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இரைப்பை, குடல் சிகிச்சை மருத்துவர் வினோத்குமார்.
``இரைப்பை, குடல் தொடர்பான புற்றுநோய் இருப்பவர்களும், அதற்கான அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களும், இதயம் தொடர்பான பிரச்னை உள்ளவர்களும் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் எந்த நோயுமே தடுப்பூசி எடுத்துக்கொள்வதற்குத் தடை இல்லை. இம்யூனோ சப்ரசென்ட்ஸ் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் மருந்துகள் எடுத்துக்கொள்வோரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
Also Read: Covid Questions: காசநோய்க்கு சிகிச்சை எடுத்து வருகிறேன்; நான் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?
ஆனால் அவர்களுக்கு தடுப்பூசியின் செயல்திறன் சற்று குறைவாக இருக்கலாம்.
மற்றபடி யாருக்கு தடுப்பூசி போடக்கூடாது என்று பார்ப்போம். குழந்தைகளுக்கான தடுப்பூசி இன்னும் தொடங்கப்படாததால் அவர்களுக்குப் போட முடியாது. கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளக்கூடாது. தொற்றிலிருந்து குணமானவர்களும் மருத்துவர் குறிப்பிடும் நாள்களுக்குப் பிறகே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
Also Read: Covid Questions: தடுப்பூசிக்காக இம்யூனோ சப்ரசென்ட் மாத்திரைகளை நிறுத்தினேன்; மருந்து வேலை செய்யுமா?
முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டதும் ஒவ்வாமையை சந்தித்தவர்களுக்கும் நாங்கள் அடுத்த டோஸை அறிவுறுத்துவதில்லை. முதல் டோஸ் ஒரு தடுப்பூசியும் அடுத்த டோஸ் இன்னொன்றும் போட்டுக்கொள்வதையும் நாங்கள் அனுமதிப்பதில்லை. இப்படிச் சில விஷயங்களை மட்டும் கவனத்தில் கொண்டு, மற்ற எல்லோரும் அவசியம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்."
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/can-a-gastric-cancer-patient-take-covid-vaccine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக