மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றபின், எல்.முருகன் சொந்த ஊர் விசிட், குலதெய்வ கோயில் தரிசனம், பெற்றோர்களிடம் ஆசிர்வாதம் என்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
Also Read: `இதை வாங்க அதிகாரம் இல்லை!' - தமிழக அரசின் கடனை அடைக்க செக் கொடுத்த நபர்; திருப்பி அனுப்பிய ஆட்சியர்
தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவரும், தற்போதைய மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன், கடந்த 16 -ம் தேதி முதல், மக்களை சந்தித்து ஆசிபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். 16 -ம் தேதி கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மக்களை சந்தித்து, அவர்களிடம் ஆசிபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அவரோடு, மாநில தலைவர் அண்ணாமலையும் பயணிக்கிறார். தொடர்ந்து, 17 -ம் தேதி இரவு நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் பொதுமக்களிடையே உரையாற்றினார். தொடர்ந்து, 18 - ஆம் தேதி பரமத்தி வேலூர் அருகே உள்ள வாழவந்தி ஆர்.புதுப்பாளையத்தில் உள்ள, தனது குலதெய்வக் கோயிலுக்கு எல்.முருகன் வருகை தந்தார்.
அங்கு பெருமாள் சாமியை தரிசனம் செய்தார். அதனைத்தொடர்ந்து, அங்கு நடைபெற்ற கோ பூஜையில் கலந்துகொண்டார். பசுமாட்டுக்கு பல்வேறு வகையான பொருள்களை கொடுத்து, வழிபாடு செய்தார்.
இந்த கோ பூஜையிலும், அண்ணாமலை, சி.பி.ராதாகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் உடன் கலந்துகொண்டார். அதனைத்தொடர்ந்து, கந்தம்பாளையம் அருகே உள்ள தனது சொந்த ஊரான கோனூருக்குச் சென்று, தனது பெற்றோரை சந்தித்து, அவர்களிடம் ஆசிர்வாதம் பெற்றார். அதோடு, அவர் படித்த அரசு பள்ளிக்கும் சென்று, அங்கு பனைவிதைகளை விதைத்தார்.
தொடர்ந்து, நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் ஆசி யாத்திரை பொதுக்கூட்டத்தில் எல்.முருகன் பேசினார். அப்போது அவர், "நாடு முழுவதும் புதிதாக பொறுப்பேற்ற 43 மத்திய அமைச்சர்களும், பிரதமர் மோடி உத்தரவின் பேரில் தங்களது மாநிலங்களுக்குச் சென்று, மக்களை நேரில் சந்தித்து ஆசிபெற்று வருகின்றனர். அந்த அடிப்படையில், நான் தமிழகத்தில் மூன்று நாள் யாத்திரை பயணத்தை மேற்கொண்டுள்ளேன். இதன்மூலம், அனைத்து மக்களையும் சந்தித்து, ஆசிபெற்று வருகிறேன். பிரதமர் மோடி ஏழை, எளிய மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பாஜகவில் இணைய வேண்டும் என்பது எனது சிறுவயது ஆசை. அந்த விருப்பம் இப்போது படிப்படியாக நிறைவேறியுள்ளது.
அதற்கு முக்கியக் காரணம், வழக்கறிஞர் மனோகரனும், அப்போதைய பாஜக மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனும் குறிப்பிடத்தகவர்கள். நாமக்கல் மாவட்டத்தில் பா.ஜ.க வளர்ச்சியடைந்துள்ளது. இது, மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. கடந்த 2014 - ஆம் ஆண்டுக்கு முன்புவரை கிராமப்புற மக்களுக்கு சொந்த வீடு கட்டுவது என்பது எட்டாக்கனியாக இருந்தது. கழிவறை கட்டுவதற்கே மிகவும் சிரமப்பட்டு வந்தனர். ஆனால், தற்போது பிரதமர் மோடி ஏழை எளிய மக்கள் வீடு கட்டுவதற்கு ரூ. 2 லட்சம் வரை நிதியுதவி வழங்கி வருகிறார்" என மத்திய அரசின் திட்டங்களை பட்டியலிட்டார்.
Also Read: எல்.முருகன்: `செருப்பு தைக்கும் குடும்பத்திலிருந்து வந்தவன் நான்!' - மத்திய அமைச்சர் கண்ணீர்
விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo
source https://www.vikatan.com/government-and-politics/politics/lmurugan-namakkal-visit-and-his-speech-regarding-his-dream-to-join-bjp
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக