Ad

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

கொடநாடு விவகாரம்: அதிமுக வெளிநடப்பு ;`மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும்!’ -ஸ்டாலின்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தற்போது விசாரணை வேகமெடுத்துள்ளது. நேற்று இந்த வழக்கில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் கொடநாடு விவகாரம் வெடித்தது.

சட்டப்பேரவை

சட்டப்பேரவைக்கு கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்த அதிமுக உறுப்பினர்கள், இந்த விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரினர். ஆனால் பட்ஜெட் விவாதம் நடப்பதால் சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை. `தற்போது எதற்காக இந்த வழக்கை திமுக கையிலெடுத்திருக்கிறார்கள்?’ என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், ``எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் அதிமுக வினர் செயல்படுகின்றனர். மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். கொடநாடு வழக்கு விசாரணையில் அரசியல் தலையீடு இல்லை. யாரும் அச்சப்பட தேவையில்லை. நீதிமன்ற அனுமதியுடன் தான் விசாரணை நடைபெற்று வருகிறது. உண்மை என்ன என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அதிமுக தர்ணா
அதிமுக தர்ணா
அதிமுக தர்ணா
அதிமுக தர்ணா

தொடர்ந்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து கூட்டணி கட்சிகளான பா.ஜ.க பா.ம.க உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து அதிமுக வினர் சட்டப்பேரவையின் வெளிபுறத்தில் கோஷம் எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், ``எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்கு போடும் அராஜக செயலில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது. திமுக அரசின் அராஜகத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக இன்றும், நாளையும் அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தை புறக்கணிப்பார்கள்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/news/admk-walk-out-of-tn-assembly-in-kodanadu-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக