Ad

புதன், 18 ஆகஸ்ட், 2021

`நான் ஓப்பனாகத்தான் பேசுவேன்.. தெரிந்துதானே பாஜக-வில் சேர்த்து இருக்காங்க!” - சிரிக்கும் குஷ்பு

```அண்ணாத்த ஷீட்டிங்', டிவி சீரியல், கட்சி பணி, குடும்பம் என எப்படி இவ்வளவு வேலைகளையும் ஒரே நேரத்தில் கவனிக்கறீங்க?”

“நாம நினைத்தால் முடியாதது ஒன்றுமில்லை. ஆங்கிலத்தில் சொல்லுவாங்க ‘where there is will there is a way’ இதை ஃபாலோ பண்ணுறேன். அந்த வில் பவர் இருந்தால் அனைத்தையும் மேனேஜ் பண்ணமுடியும்.”

“காங்கிரஸில் உள்ள சில தலைவர்களுக்கு உங்கள் மேல் நிறைய பொறமை இருந்தது என `ஆனந்த விகடன்' இதழுக்குக் கொடுத்த பேட்டியில் சொல்லியிருந்தீங்க. அதே பிரச்னை பி.ஜே.பி-யிலும் வரலாமே…”

“இங்க கட்சிதான் வளரணும். நம்மைத் தாண்டி வேற யாருமே வளரக்கூடாதுனு என்ற எண்ணம் பி.ஜே.பி ஆட்களிடம் இல்லை. அப்படி பி.ஜே.பி நினைத்து இருந்தால், ஆளுநராகத் தமிழிசை செளந்தரராஜன், மத்திய அமைச்சராக நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி ராணி, சுஷ்மா ஸ்வராஜ் முதல் எவ்வளவோ பெண் எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள், ஆளுநர்கள்னு வளர்ந்து இருக்க முடியாது. பெண்கள் தங்களைத் தாண்டிப் போகக்கூடாது என்ற எண்ணம் இங்கு யாருக்கும் இல்லை. வேலை செய்யறாங்களா அப்போ வாய்ப்பு தரணும். வளர்த்துவிடணும். அவ்வளவுதான் பி.ஜே.பி-யில்.”

“தமிழகச் சட்டமன்ற தேர்தல் நேரத்தில், தமிழக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஒரே நேரத்தில் உண்ணாவிரதப்போராட்டம், உண்ணும் விரதப்போராட்டம், வேடிக்கைபார்க்கும் போராட்டம் எல்லாம் நடக்கும். காங்கிரஸ் அதை அனுமதிக்கும். அது ஜனநாயகம். பி.ஜே.பி அப்படி அனுமதிக்குமா?’’

(சிரிக்கிறார்) “இதுக்கு பேரு ஜனநாயகம் கிடையாதுங்க. அது கேலிக் கூத்து. காங்கிரஸ் கட்சி மீது தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நம்பிக்கை இல்லைனு அர்த்தம். இதுவே கமலாலயத்தில் உட்கார்ந்து உண்ணாவிரதமோ, போராட்டமோ கட்சிக்கு எதிராகப் பண்ண முடியாது. அந்த மாதிரி கேலிக் கூத்துக்கு இங்கு இடமில்லை. இது நாங்கள் கட்சி மீது வைத்திருக்கும் நம்பிக்கை காட்டுகிறது.’’

“தேர்தல் முடிந்த பிறகு தொகுதி பக்கம் போகவே இல்லையே?”

“கொரோனா இருக்கிறதே. இப்போ நான் தொகுதி பக்கம் போய் என்ன பண்ணப்போகிறேன்? எலெக்‌ஷன் போய்ட்டு வந்ததற்கே நீங்க எல்லாம் தேர்தல் பிரசாரம் செய்ததால்தான் கொரோனா பரவுச்சுனு சொன்னீங்க. அதுக்கு அப்புறம் கொரோனாவுல ஒரு பீக் பார்த்தோம். அப்படி ஒரு பீக் பார்த்தபிறகு எங்கே போக முடியும்? கூட்டத்தை நானே ஏன் கூட்டணும்? இப்போ கொரோனா டைம், லாக்டெளன் பிரியட்ல இருக்கோம். ஏன் ஒரு பிரச்னையை உருவாக்கணும்? அதுதான் போகலை!’’

“ `அண்ணாத்த' படத்தில் ரஜினி கூட நடிச்சிருக்கீங்க. அரசியலுக்கு வரமுடியலை என்ற வருத்தம் ரஜினிக்கு இருக்கிறதா?”

“அவருக்கு மட்டுமில்லை, நிறையப் பேருக்கு அந்த வருத்தம் இருந்தது. நல்லவர்கள் அரசியலுக்கு வரட்டுமே, அவர்கள் ஒரு நல்ல மாற்றம் கொண்டு வர முடிந்தால் நல்லதுதானே.’’

“உங்களை அறிந்தவர்களும் சரி, அரசியல் அறிந்தவர்களும் சரி… இப்படி ஓப்பானாகப் பேசுபவர்களை பா.ஜ.க விரும்பாது. அதனால், வேற கட்சிக்கு குஷ்பு போய்டுவாங்கனு சொல்லுகிறார்களே…”

“நான் இப்படித்தான் பேசுவேன்… இதுக்கு முன்னாடியும் இப்படித்தான் பேசியிருக்கேன் என்பதை அறிந்துதானே பி.ஜே.பி-யில் என்னை சேர்த்து இருக்காங்க. அப்புறம் என்ன?’’ எனச் சிரிக்கிறார் குஷ்பு.

முழு பேட்டியை ஆனந்த விகடன் இதழிலும் படிக்கலாம்.

Also Read: “ரஜினி மாறலை... கமலைப் பாராட்டுகிறேன்!”



source https://www.vikatan.com/news/politics/kushboo-interview-on-political-and-cinema-matters

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக