அஜித் ரசிகர்களுக்கு வலுவூட்டும் செய்தி. இன்று இரவு 10.30 மணிக்கு 'வலிமை'யின் முதல் பாடல் வெளியாகிறது.
'நேர்கொண்ட பார்வை'க்கு பின் அஜித், போனி கபூர், இயக்குநர் ஹெச்.வினோத் இணையும் 'வலிமை' படம் ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது. யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தில் இயக்குநர் விக்னேஷ்சிவனும் பாடல் எழுதியுள்ளார். 'என்னை அறிந்தால்' படத்தில் அவர் எழுதிய 'அதாரு அதாரு' சூப்பர் ஹிட். அதேபோல 'வலிமை'யிலும் ஒரு மாஸ் ஓப்பனிங் பாடல் எழுதியிருக்கிறார் விக்கி. இப்பாடலுக்காக ஒடிஷாவில் இருந்து டிரம் கலைஞர்களை சென்னை வரவழைத்து லைவ் ரெகார்டிங் செய்திருக்கிறார் யுவன். இதுதான் ஓப்பனிங் பாடல் என்கிறார்கள்.
இந்தப் பாடல் காட்சி ஹைதராபாத் மற்றும் சென்னையில் படமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இப்போது அதன் லிரிக் வீடியோ மட்டுமே வெளியாகிறது.
யுவனின் இசையில் பாடலாசிரியராக விக்னேஷ்சிவன் இணைவது இது நாலாவது முறை. ஏற்கெனவே 'யாக்கை'யில் 'சொல்லித் தொலையேன்டா...', விஷாலின் இரும்புத்திரையில் 'ஆங்கிரி பேர்டு' சூர்யாவின் 'என்.ஜி.கே.'வில் 'திமிறணும்டா..' எனப் பாடல்கள் எழுதியிருக்கிறார் பொயட் விக்னேஷ் சிவன்.
source https://cinema.vikatan.com/tamil-cinema/ajithkumars-valimai-first-single-song-to-be-released-today
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக