கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கொட்டியூர் சென் செபாஸ்டின் சர்ச் பாதிரியாராக இருந்தவர் ரோபின் வடக்கஞ்சேரி. மானந்தவாடி மறை மாவட்டத்துக்குட்பட்டது இந்த சர்ச். 2016-ம் ஆண்டு, சர்ச்சுக்கு வழக்கமாக வரும் 12-ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் கம்ப்யூட்டரில் டேட்டா என்ட்ரிக்காக உதவ வேண்டும் எனக்கூறி தனது அறைக்கு அழைத்துள்ளார் பாதிரியார் ரோபின் வடக்கஞ்சேரி. பின்னர் தனது அறையில் மாணவியை சிறார் வதை செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்தார். சைல்ட் லைனுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் பாதிரியார் ரோபின் வடக்கஞ்சேரியின் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மாணவியை ரகசிய இடத்தில் மறைத்து வைத்து வழக்கை ஒன்றும் இல்லாமல் ஆக்கும் முயற்சிகள் சபையில் இருந்தும், வேறு சிலர் மூலமாகவும் நடந்தன. இதற்கிடையில் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ம் தேதி தலசேரி தனியார் மருத்துவமனையில் சிறுமி குழந்தை பெற்றெடுத்தார்.
Also Read: பாரதமாதா குறித்து சர்ச்சைப் பேச்சு; 7 பிரிவுகளில் வழக்கு! - பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது
சிறுமி பெற்றெடுத்த குழந்தையை, ஒரு கன்னியாஸ்திரி மற்றும் மற்றொரு பாதிரியார் ஆகியோர் மறைத்துவைக்க முயன்ற சம்பவம் அந்நேரத்தில் நடந்தது. இதனால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இதையடுத்து 2017 பிப்ரவரி 28-ம் தேதி பாதிரியார் ரோபின் வடக்கஞ்சேரி கைதுசெய்யப்பட்டார். மேலும் குழந்தையை மறைத்துவைக்க முயன்ற கன்னியாஸ்திரி, மற்றொரு பாதிரியார் ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர்.
இதற்கிடையில் சிறார் வதை சம்பவத்தில் பாதிரியார் ரோபின் வடக்கஞ்சேரியை காப்பாற்ற சபையில் உள்ளவர்கள் முயற்சி செய்துள்ளனர். பாதிரியார் ரோபின் வடக்கஞ்சேரிக்கு ஆதரவாக சிறுமியின் பெற்றோரும் செயல்பட்டனர். ஒரு கட்டத்தில் பாதிரியாரை காப்பாற்றுவதற்காக, சிறுமியின் தந்தையே அந்தப் பழியை ஏற்க முன்வந்தார். மகளை சிறார் வதை செய்ததாக சிறுமியின் தந்தை கூறினார். அந்தச் சிறுமியையும் மிரட்டி அவ்வாறு கூற வைத்தனர்.
இதற்கிடையில் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்ட சிறுமியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, தன்னை சிறார் வதை செய்தது தன் அப்பா எனச் சிறுமி கூறினாள். விசாரணை அதிகாரிகளோ, இந்த குற்றத்தை செய்தவர்களுக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை கிடைக்கும் எனக் கூறினர். இதையடுத்து தன் குழந்தைக்கு தந்தை பாதிரியார் ரோபின் வடக்கஞ்சேரி என்பதை ஒப்புக்கொண்டார். மேலும் டி.என்.ஏ பரிசோதனையிலும் இது உறுதியானது.
இதையடுத்து மானந்தவாடி மறைமாவட்டத்தில் இருந்து பாதிரியார் ரோபின் வடக்கஞ்சேரி நீக்கப்பட்டார். ``விசாரணைக்கு இடையே மாணவிக்கு 18 வயது ஆகிவிட்டது, அவரை நானே திருமணம் செய்துகொள்கிறேன், குழந்தையையும் வளர்க்கிறேன்'' எனக்கூறி தண்டனையில் இருந்து தப்பிக்க முயற்சி செய்தார் பாதிரியார். ஆனால் அதெல்லாம் எடுபடவில்லை. இதையடுத்து பாதிரியாருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தலசேரி போக்ஸோ கோர்ட் தீர்ப்பளித்தது.
Also Read: `5 குழந்தைகள் பெற்றால் குடும்ப நலத்திட்ட உதவிகள்!' - கேரள கத்தோலிக்க சபையின் சர்ச்சை அறிவிப்பு
இந்நிலையில் மாணவிக்கு 18 வயது கடந்த நிலையில், பாதிரியார் ரோபின் வடக்கஞ்சேரியை திருமணம் செய்ய விரும்புவதாகவும், திருமணத்துக்காக ரோபின் வடக்கஞ்சேரிக்கு ஜாமின் வழங்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பெண் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஏற்கெனவே கேரள ஐகோர்ட்டில் இந்த மனுவை தாக்கல் செய்தபோது, கோர்ட் மனுவை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. சிறுமியாக இருக்கும்போது தன்னை சிறார் வதை செய்த பாதிரியாரை திருமணம் செய்ய விரும்புவதாக இளம் பெண் அறிவித்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் பாதிரியார் ரோபின் வடக்கஞ்சேரியும் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்வதற்காக ஜாமின் வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
source https://www.vikatan.com/news/crime/kerala-rape-survivor-moves-to-supreme-court-to-marry-a-rapist-priest
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக