தமிழகத்தின் முதல் வேளாண் பட்ஜெட்
ஏற்கெனவே கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டுக்கு இது புதுசு. இதன் மூலம் வேளாண்மைக்கு அதிக நிதி ஒதுக்கப்படும், விவசாயிகளுக்கு மானியங்கள் நிறைய கிடைக்கும், உணவு உற்பத்தி பெருகும் என்று நம்பப்படுகிறது.
தஞ்சாவூர், கோவை, மதுரை மண்டல வாரியாகவும், மாநில அளவில் சென்னையிலும் வேளாண்மை பட்ஜெட்டுக்கு விவசாயிகளிடமும், விவசாயப் பிரதிநிதிகளிடமும் கருத்துகள் கேட்கப்பட்டன. இதுதவிர பல தரப்பினரிடமும் வேளாண்மைக்கு கருத்துகள் கேட்கப்பட்டதால், தமிழக அரசு தாக்கல் செய்யும் வேளாண்மை பட்ஜெட்டுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு வேளாண்மை பட்ஜெட் 2021-22 தாக்கல் செய்யப்படுகிறது. அதன் விவரங்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம்.
source https://www.vikatan.com/news/agriculture/tamilnadu-agriculture-budget-2021-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக