`பெரும்பாலானோர் நீட் தேர்வுக்கு எதிராக கருத்து..!’
நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய கடந்த மாதம் 10-ம் தேதி நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராகவும் ஆதரவாகவும் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த கருத்துக்களை ஆய்வு செய்து அதுதொடர்பான அறிக்கையை தயார் செய்து இன்று அந்த அறிக்கை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வால் அரசு பள்ளி மற்றும் ஏழை மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் பெரும்பாலானோர் நீட் தேர்வுக்கு எதிராக தங்கள் கருத்துக்களை பதிவு செய்திருப்பதாக அறிக்கையை சமர்ப்பித்த நீதிபடி ஏ.கே ராஜன் கருத்து தெரிவித்திருக்கிறார். அறிக்கை சமர்ப்பித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே ராஜன், ``நீட் தேர்வு வேண்டாம் என பெரும்பாலானோர் எங்களிடம் கருத்து தெரிவித்திருக்கிறார்கள் அனைத்து விதமான கருத்துக்களையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறோம்.
நீட் தேர்வால் என்ன பாதிப்பு என்பது பற்றி 165 பக்க அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எங்களது தனிப்பட்ட கருத்துக்களை நாங்கள் ஆய்வு அறிக்கையில் முன் முன்வைக்கவில்லை. ஆய்வு திருப்திகரமாக இருந்தது. நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் எதிராகவும் 86,342 பேர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்திருந்தார்கள். இதில் பல்வேறு அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டும். இது ஒரு வாக்கெடுப்பு போல் கிடையாது. பல்வேறு கருத்துக்கள் இருந்தது அனைத்து கருத்துக்களை நாங்கள் ஆய்வறிக்கையில் சமர்ப்பித்து இருக்கிறோம்” என்றார்.
இந்தியாவில் கொரோனா நிலவரம்!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 38,792 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில், மொத்த கொரோனா பாதிப்பு 3,09,46,074 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 624. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,11,408 -ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 3,01,04,720-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 4,29,946 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 41,000 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.
இந்தியாவில் இதுவரை 38,76,97,935 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. இதில் நேற்று மட்டும் 37,14,441 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது.
source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-14-07-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக