Ad

செவ்வாய், 13 ஜூலை, 2021

விழுப்புரம்: சடலமாக மீட்கப்பட்ட காணாமல் போன மகள்; கதறி அழும் பெற்றோர்! என்ன நடந்தது?

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ளது கொங்கரப்பட்டு கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையப்பன். இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். இந்நிலையில், 11-ம் வகுப்பு சென்றுள்ள தன் 15-வயது இளைய மகள் சரண்யாவைக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காணவில்லை என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (11.07.2021) அன்று செஞ்சி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் பச்சையப்பன். அதோடு, சந்தேகத்திற்கு இடமான ஒரு நபரையும் காவல் நிலையத்தில் பிடித்து கொடுத்துள்ளார். இந்நிலையில், இன்று (13.07.2021) காலை 10.00 மணி அளவில், விவசாயி ஒருவரின் கிணற்றில் தனது மகள் உடல் மிதப்பதாகக் கிடைத்த தகவலைதத் தொடர்ந்து பதறியடித்து சென்று பார்த்துள்ளார். தன் மகளின் உடல் கிணற்றில் மிதப்பதை கண்டு அதிர்ந்துபோன பச்சையப்பன், அந்த இடத்திலேயே கதறி அழுதிருக்கிறார்.

கிணற்றில் மிதந்த மாணவி சடலம்

சம்பவ இடத்தை விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா மற்றும் ஏ.டி.எஸ்.பியும் நேரில் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். தன் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, ஊர் மக்களுடன் செஞ்சி - திண்டிவனம் செல்லும் சாலையில் வல்லம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினரின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து சாலைமறியலைக் கைவிட்டுள்ளனர்.

Also Read: கள்ளக்குறிச்சி: தேவியானந்தல் கிராமத்து மாணவி சரஸ்வதி கொலையில் நடந்தது என்ன?

இதைத் தொடர்ந்து கொங்கரப்பட்டு கிராமத்திற்குப் பயணப்பட்டோம். ஊரின் மையப்பகுதியில் ஓடுகளால் அமைக்கப்பட்டிருந்த மாணவியின் வீடு மௌனத்தால் நிரம்பியிருந்தது. மாணவியின் பெற்றோர்கள் காவல் நிலையத்திற்குச் சென்றிருப்பதாக அவர்களது உறவினர்கள் வருத்தத்துடன் கூறினர். பின்னர், செஞ்சி மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றோம். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதியும்படி கோரிக்கை வைத்துக்கொண்டிருந்த, மாணவி சரண்யாவின் தந்தை பச்சையப்பனிடம் பேசினோம். அவரிட

"கடந்த ஞாயிற்றுக்கிழமை (11.07.2021) அன்று சுமார் 4 மணி இருக்கும்போது 'மாடு ஓட்டிக்கிட்டு வரப்போன அக்காவிடம் போறதாக' சொல்லிட்டு வீட்டிலிருந்து சரண்யா கிளம்பி போயிருக்கா. 5 மணி இருக்கும் போதுதான் சரண்யா, அவங்க அக்காவை சந்திக்கல அப்படின்னு தெரியவந்தது. மகளை காணோம்னு தொடர்ந்து தேட ஆரம்பித்தோம். அப்போதுதான் முன்னுக்கு பின் முரணான பதில் கூறி மணியம்பட்டு (பக்கத்து கிராமம்) கிராமத்தைச் சேர்ந்த ஒருவன் என்னிடம் மாட்டினான்.

அவனைப் பிடித்து விசாரித்தபோது அவன் போனில் பாப்பா போட்டோ இருந்தது. அது அவனிடம் எப்படி சென்றது எனத் தெரியவில்லை. அன்றைக்கு இரவு 9.30 மணி இருக்கும், அவன் மீது சந்தேகம் இருப்பதாக செஞ்சி காவல்நிலையத்தில் அவனை ஒப்படைத்தோம். புகாரும் எழுதி கொடுத்திருந்தோம். ஆனா, போலீஸ்காரங்க அவனை சரியாக விசாரிக்காமல் அப்படியே வெளியில விட்டுட்டாங்க. மறுநாள் (12.03.2021) காலையிலும் நாங்கள் மீண்டும் அவனை பிடித்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம். விசாரணை பண்ணுவதாக சொல்லியிருந்தாங்க. இப்படியா போய்க்கொண்டிருக்கும் போதுதான், நேத்து காலையில சரண்யாவின் உடல் கிணற்றில் மிதப்பதாக ஊர்க்காரங்க பார்த்துட்டு சொன்னாங்க. அலறியடித்து ஓடிபோய் பார்த்தபோது பாப்பா கிணத்துல கிடந்தா. எங்களுக்கு அப்போ என்ன பண்ணுறதுனே தெரியல.

கொங்கரப்பட்டு

பாப்பாவின் வாயில் ரத்த காயம் இருந்தது. கையெல்லாம் கயிறு கட்டப்பட்ட தழும்பு இருந்தது. பாப்பாவக் கட்டி வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருக்கானுங்க. சோகம் தாளாமல், ஊர்க்காரர்களுடன் சென்று நீதி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டோம். மொத்தம் ஆறு பசங்க மேல சந்தேகப்பட்டு புகார் கொடுத்து இருக்கிறோம். இதில் இரண்டு பேர் எங்க ஊரை சேர்ந்தவனுங்க. நான்கு பேர் மணியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவனுங்க. நாங்க கொடுத்த புகாரை அன்றைய தினம் பதிவு பண்ணாமல் அப்படியே வைத்திருந்தாங்க. நேற்று மாலை 7 மணி அளவில் மகளிர் காவல் நிலையத்தில் தான் வழக்கு பதிவு செய்தார்கள். ஆனால் நாங்கள் ஞாயிற்றுக்கிழமையே புகார் கொடுத்திருந்தோம். நேற்று மாலை தான் புகார் கொடுத்தது போல மகளிர் காவல் நிலையத்தில் புகார் பதிவு பண்ணியிருக்காங்க. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். எங்களுக்கு நீதி வேண்டும்" என்றார் துக்கம் தாளாத குரலில்.

இதை தொடர்ந்து செஞ்சி மகளிர் காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் ஜெயந்தியிடம் பேசினோம். "எங்களுக்குக் கிடைத்த தகவலின்பேரில் நேற்று சுமார் 12.00 மணியளவில் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். பெற்றோர்களின் சந்தேகத்தின்படியான புகார் அடிப்படையில், நேற்று 366-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தோம். சந்தேகத்தின் பேரில் நான்கு நபர்களைப் பெற்றோர்கள் சொல்லியிருக்காங்க. சம்பவத்தைத் தொடர்ந்து, 366-வது பிரிவிலிருந்த வழக்கை 302-வது பிரிவின் கீழ் மாற்றி பதிவு செய்துள்ளோம்.

Also Read: சென்னை: `நள்ளிரவில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை!' - போக்சோவில் கைதான பக்கத்து வீட்டு இளைஞன்!

மகளிர் காவல் நிலையத்தில் திரண்டிருந்த பாதிக்கப்பட்ட தரப்பினர்.

பெற்றோர்கள் சந்தேகத்திற்கிடமாகக் கூறிய நபர்களில் ஒருவரை கைது செய்துள்ளோம். இன்னும் பிரேத பரிசோதனை முடிவுகள் வரவில்லை. அந்த முடிவிலேயே என்ன நடந்தது என்று தெரியவரும். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்." என்றார்.



source https://www.vikatan.com/social-affairs/crime/in-villupuram-missed-young-girl-found-as-a-dead-body

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக