Ad

வெள்ளி, 9 ஜூலை, 2021

Covid Questions: நியூரோஃபைப்ரோமடோசிஸ் (Neurofibromatosis) பாதிப்பு இருக்கிறது; தடுப்பூசி போடலாமா?

என் உறவுக்காரப் பெண்ணுக்கு நியூரோஃபைப்ரோமடோசிஸ் (Neurofibromatosis) பாதிப்பு இருக்கிறது. அவர் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

- ஷோபாராணி (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் முத்துச்செல்லக்குமார்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் முத்துச்செல்லக்குமார்.

``நியூரோஃபைப்ரோமடோசிஸ் என்பது மரபணுக் கோளாறு காரணமாக நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடிய ஒரு நோய். மூளை, சருமம், கண், முதுகெலும்பு ஆகிய பகுதிகளை பாதிக்கும். கட்டிகளையும் சருமத்தில் புடைப்புகளையும் ஏற்படுத்தும். இதில் நியூரோஃபைப்ரோமடோசிஸ் வகை 1 (NF 1), நியூரோஃபைப்ரோமடோசிஸ் வகை 2 (NF 2) மற்றும் ஸ்க்வன்னோமடோசிஸ் (Schwannomatosis) என மூன்று வகைகள் இருக்கின்றன.

இந்த நோயால் ஏற்படும் கட்டிகள் சாதாரணமானவை என்பதால் பயப்படத் தேவையில்லை. இந்த நோய் பாதிப்புள்ளவர்கள் mRNA வகை தடுப்பூசிகள் (மாடர்னா மற்றும் ஃபைஸர்) போடுவதால் இந்தத் தடுப்பூசிகளில் உள்ள mRNA, இவர்களது NF 1 அல்லது NF 2 எனப்படும் mRNA அல்லது நோய் ஏற்படக் காரணமான மரபணுவோடு சேர்ந்து ஏதாவது பாதிப்பை ஏற்படுத்துமோ என்று பயப்படத் தேவையில்லை. மேலும் தடுப்பூசியிலுள்ள mRNA, மனித டி.என்.ஏ செயல்பாடுகளை மாற்றுவதில்லை. எனவே இத்தகைய கோவிட் தடுப்பூசிகளை இவர்கள் பயமின்றி போட்டுக்கொள்ளலாம்.

A woman receives the vaccine

Also Read: Covid Questions: பக்க வாத பாதிப்பு உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?

அதேபோல இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் கோவிட் தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளவும் அரசாங்கம் எந்தத் தடையும் விதிக்கவில்லை. எனவே தைரியமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்".

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/health/healthy/can-neurofibromatosis-patients-take-covid-vaccines

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக