Ad

வியாழன், 15 ஜூலை, 2021

`அரசியலுக்கு இடமில்லை; தமிழக அரசுக்கு துணை நிற்போம்!'- மேக்கேதாட்டு விவகாரத்தில் அண்ணாமலை

``மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டிற்குத் தமிழக பா.ஜ.க எப்போதும் துணை நிற்கும். - இதில் எந்த அரசியலுக்கும் வாய்ப்பில்லை” என்கிறார் அண்ணாமலை. ஊரடங்கு காலகட்டத்தில் அண்ணாமலையை வரவேற்ற கூட்டத்தில், போலீஸாருக்கும் பா.ஜ.க நிர்வாகிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

அண்ணாமலை

தமிழக பா.ஜ.க-வின் மாநிலத் தலைவராக அண்ணாமலை இன்று பொறுப்பேற்க உள்ளநிலையில், நேற்று கரூரிலிருந்திருந்து சென்னை நோக்கி புறப்பட்டார். அண்ணாமலை பதவி ஏற்கச் செல்லும் நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பான வரவேற்று கொடுக்கப்படவேண்டும் என்று முக்கிய நிர்வாகிகள் மறைமுக உத்தரவு கொடுத்திருக்கிறது பா.ஜ.க தலைமை.

இந்நிலையில், நிர்வாகிகள் போட்டிப் போட்டுக்கொண்டு தனது முகத்தை மாநிலத்தலைவராக வரவுள்ள அண்ணாமலையிடம் பதிய வைக்க கடும் போட்டா போட்டி நிலவியது. அந்தவகையில், திருச்சி சிந்தாமணியில் உள்ள அண்ணாசிலை அருகே அவருக்கு பா.ஜ.க நிர்வாகிகள் சிறப்பாக வரவேற்பு அளித்தனர்.

வெடி வெடிப்பதில் தள்ளுமுள்ளு

அண்ணாமலை வந்தபோது அவரை வரவேற்கும் விதமாகப் பட்டாசு வெடிக்க பா.ஜ.க-வினர் முயன்றனர். அப்போது போலீஸார் ஊரடங்கு அமலில் உள்ளதால் வெடிவெடிக்ககூடாது என்று முட்டுக்கட்டை போட்டனர். அதற்கு `நாங்கள் கண்டிப்பாக வெடித்தே தீருவோம்’ என்று போலீஸாரின் எதிர்ப்பையும் மீறி வெடித்தனர். இதனால் போலீஸாருக்கும் பாஜக நிர்வாகிகளுக்கு இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையும் மீறி பாஜக தொண்டர்கள் வெடி வெடித்து இனிப்பு வழங்கினர்.

பின்பு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ``மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டிற்குத் தமிழக பா.ஜ.க எப்போதும் துணை நிற்கும். இதில் எந்த அரசியலுக்கும் வாய்ப்பில்லை. தமிழக பா.ஜ.க-வை பொருத்தவரை முழுக்க முழுக்க விவசாயிகள் பக்கம் நிற்கும். பிரதமர் மோடியின் செயல்பாடுகளைப் பார்த்தாலே நன்கு தெரியும்.

போலீஸாருடன் வாக்குவாதம்

முன்னாள் பா.ஜ.க தமிழக தலைவர் முருகன் கொங்கு மண்டலத்தில் சேர்ந்தவர் என்பதால் கொங்குநாடு எனக் குறிப்பிட்டார். ஆனால் அதனைப் பெரிது படுத்துகின்றனர். கொங்குப் பகுதியைச் சேர்ந்தவர் என்று நான் பதவி ஏற்கும்போது குறிப்பிட்டார்கள்.

அண்ணாமலை

தமிழகத்திற்குக் கொடுக்க வேண்டிய தடுப்பு ஊசிகளைத் தாண்டி அதிகமான தடுப்பூசிகளை மத்திய அரசு கொடுத்துள்ளது. ஆனால் அமைச்சர் தடுப்பூசி விவகாரத்தில் பாரபட்சம் செய்வதாகச் சொல்கிறார்கள். மக்கள் வாழ்க்கை விவகாரத்தில் அரசியல் செய்ய மத்திய அரசு விரும்பாது. நாளை (இன்று) பதவி ஏற்க உள்ளதால் பின்னர் பத்திரிக்கையாளர்களை நேரில் சந்திக்கிறேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

Also Read: `இனி பாஜக அதிரடியான, அசுரத்தனமான வளர்ச்சி பெறும்!’ - திருப்பூரில் அண்ணாமலை



source https://www.vikatan.com/news/politics/annamalai-says-in-mekedatu-dam-issue-tn-bjp-stands-with-tn-government

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக