Ad

சனி, 17 ஜூலை, 2021

`பணத்துக்காகப் பெண்ணைத் தாக்கிய போலீஸ் கைது'! - கோவையில் பரபரப்பு!

கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பார்த்திபன் (57). இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இவரது உறவினர் ஆர்த்தி வயது 30 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஆர்த்தி கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

கோவை

Also Read: சென்னை: `போலீஸ் இன்ஸ்பெக்டரின் டிரைவரும், என் மனைவியும் மிரட்டுகிறார்கள்’ - கணவர் பரபரப்பு புகார்!

இந்நிலையில், திருமண விவாகரத்து வழக்குக்காக ஆர்த்தி வழக்கறிஞரை சந்திக்கிறார். அந்த வழக்கறிஞர் பார்த்திபனின் சகோதரர். அப்போது பார்த்திபனுக்கும், ஆர்த்திக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் நெருங்கிப் பழகியுள்ளனர்.

இதனால், கடந்த சில ஆண்டுகளாக ஆர்த்திக்குத் தேவையான உதவிகளை பார்த்திபன் செய்து வந்துள்ளார். அவ்வப்போது ஆர்த்தியிடம் பார்த்திபன் பணம் கேட்டு வாங்கியுள்ளார். பார்த்திபன் தொடர்ந்து மிரட்டி பணம் கேட்கவே ஆர்த்தி தயங்கியுள்ளார். ஒருகட்டத்தில் பணம் கொடுக்க மறுத்துள்ளார். ஆத்திரமடைந்த பார்த்திபன் ஆர்த்தியைத் தாக்கியுள்ளார்.

பெண் புகார்

மேலும், ஆர்த்தி தந்தையினுடைய இருசக்கர வாகனத்தைத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளார். ஆர்த்தியைத் தாக்கியது மற்றும் வாகனத்தை எரித்தது தொடர்பாக பார்த்திபன் மீது சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து விசாரணை செய்த சிங்காநல்லூர் போலீஸார், சிறப்பு உதவி ஆய்வாளர் பார்த்திபன் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதேபோல, இருசக்கர வாகனத்தைத் தீயிட்டு சேதப்படுத்தியதற்காக, பார்த்திபன் மீது மற்றொரு வழக்கும் பதியப்பட்டுள்ளது.

கைது

இதையடுத்து, போலீஸார் பார்த்திபனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், பார்த்திபனை பணியிடை நீக்கம் செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



source https://www.vikatan.com/social-affairs/crime/coimbatore-police-arrested-for-attacking-a-woman

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக