Ad

திங்கள், 26 ஜூலை, 2021

கரூர்: வீட்டில் பதுக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசிகள்! - சிக்கிய செவிலியர்

கரூர் அரசு மருத்துவமனை செவிலியர் ஒருவர் கோவிட் தடுப்பூசியை தனது வீட்டுக்கு எடுத்துச் சென்று பதுக்கிவைத்த விவகாரம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கரூர்

Also Read: கோவிஷீல்டு & கோவாக்ஸின்... தடுப்பூசியை நாம் எப்படி தேர்வு செய்யலாம்? #COVID19

திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூர் அருகேயுள்ள அய்யனார் நகரில் வசித்துவருபவர் தனலட்சுமி. இவர், கரூர் தாய் சேய் நல மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றிவருகிறார். இந்தநிலையில், கரூர் மருத்துவமனையிலிருந்து செவிலியர் தனலட்சுமி மருத்துவமனைக்குத் தெரியாமல் (100 பேருக்குத் தடுப்பூசி செலுத்தும் அளவுக்கான) கோவிஷீல்டு தடுப்பூசிகளை யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு எடுத்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.

தடுப்பூசியை எடுத்து வந்ததோடு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கும் அந்தத் தடுப்பூசிகளை தனலட்சுமி செலுத்தியது தெரியவந்துள்ளது. இந்தத் தகவல் வேடசந்தூர் வட்டார மருத்துவர் பொன்மகேஸ்வரிக்கு புகாராகச் சென்றது. அதையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள், வேடச்சந்தூர் வட்டார மருத்துவர் பொன்மகேஸ்வரி ஆகியோர் சம்பந்தப்பட்ட செவிலியரின் வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையில், செவிலியர் தனலட்சுமி கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளை பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, செவிலியரின் வீட்டிலிருந்த கொரோனா தடுப்பூசிகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து செவிலியர், `உறவினர்களுக்கு செலுத்துவதற்காகத் தடுப்பூசிகளை எடுத்துவந்ததாக'க் கூறியுள்ளார்.

கரூர்

ஆனால், 100 பேருக்குச் செலுத்தும் அளவுக்கான கோவிட் தடுப்பூசிகளை எடுத்து வந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து செவிலியர் தனலட்சுமியிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்றுவருகிறது. செவிலியர் தனலட்சுமி தடுப்பூசி தட்டுப்பாட்டில் இருப்பதைத் தெரிந்துகொண்டு, அதை விற்பனை செய்யும் நோக்கில் மருத்துவமனையிலிருந்து எடுத்துப் போய் தனது வீட்டில் பதுக்கியதாகச் சொல்கிறார்கள். கரூர் நகராட்சிக்குட்பட்ட கஸ்தூரிபாய் தாய் சேய் நல விடுதியில் பணிபுரியும் அந்த நர்ஸின் செயலால் நகராட்சி ஆணையருக்கு சம்மன் அனுப்பப்படவிருப்பதாகத் தெரிகிறது. அதோடு, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், செவிலியர் தனலட்சுமியை சஸ்பெண்ட் செய்தும், அவர் மீது துறைரீதியான விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கோவிட் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், இப்படி செவிலியர் ஒருவர் கோவிட் தடுப்பூசியை வீட்டுக்கு எடுத்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: Covid Questions: இன்னும் தடுப்பூசி போடவில்லை; `மாடர்னா வரட்டும்' எனக் காத்திருக்கிறேன்; இது சரியா?



source https://www.vikatan.com/news/crime/karur-nurse-suspended-for-taking-vaccines-to-home

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக