பாதாம், பிஸ்தா, வால்நட், திராட்சை, பேரீச்சை என ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸை தினமும் சிறிதளவு சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்தை உறுதிசெய்யும் என அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்களும் ஊட்டச்சத்து ஆலோசகர்களும். இது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனாலும், தொடர்ந்து செய்வதில்தான் பலருக்கும் அலுப்பு. வெறும் ட்ரை ஃப்ரூட்ஸாகவோ, நட்ஸாகவோ சாப்பிடப் பிடிக்காதவர்கள் அவற்றை சுவையான ரெசிப்பியாக மாற்றி ருசிக்கலாம். வீக் எண்ட் சமையலை ஸ்பெஷலாக்குவதில் ட்ரை ஃப்ரூட்ஸ் ரெசிப்பிக்கு முக்கியப் பங்குண்டு. முயற்சி செய்து பாருங்கள்.
தேவையானவை:
பாதாம் – கால் கப் (பொடியாக நறுக்கவும்)
முந்திரி – கால் கப் (பொடியாக நறுக்கவும்)
வறுத்த வேர்க்கடலை – கால் கப்
வறுத்த வெள்ளை எள் – கால் கப்
பொடித்த வெல்லம் – ஒரு கப்
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை:
அடிகனமான பாத்திரத்தில் நெய்விட்டு உருக்கி, வெல்லம் சேர்த்துக் கிளறவும். வெல்லம் கரைந்ததும் அடுப்பை சிறுதீயில் வைத்து பாதாம், முந்திரி, வேர்க்கடலை, எள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கிளறவும். பிறகு, இதைச் சுத்தமான நெய் தடவிய சமையல் மேடையில் கொட்டி, கனமாகத் தேய்க்கவும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு துண்டுகளாக்கி, காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும்.
தேவையானவை:
கோதுமை மாவு – ஒரு கப்
பொடித்த ஓட்ஸ் – அரை கப்
வெண்ணெய் – அரை கப்
துருவிய வெல்லம் – அரை கப்
பொடித்த சர்க்கரை – 2 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன்
பேக்கிங் சோடா – கால் டீஸ்பூன்
உலர் திராட்சை – ஒரு டேபிள்ஸ்பூன்
நறுக்கிய பாதாம் – ஒரு டேபிள்ஸ்பூன்
நறுக்கிய முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன்
நெய் - தேவையான அளவு
செய்முறை:
கோதுமை மாவுடன் ஓட்ஸ், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்துக் கலக்கவும். வெண்ணெயுடன் வெல்லம், சர்க்கரை சேர்த்து நன்கு அடிக்கவும். இதனுடன் உலர் திராட்சை, நறுக்கிய பாதாம், முந்திரி, மாவுக் கலவை சேர்த்துக் கலக்கவும். சுத்தமான சமையல் மேடையில் நெய் தடவி, இந்தக் கலவையைக் கொட்டி, கனமான சப்பாத்தியாகத் தேய்க்கவும். பிறகு, குக்கி கட்டர் கொண்டு துண்டுகளாக்கவும் (கத்தி கொண்டும் செய்யலாம்). 180 டிகிரி ப்ரீஹீட் செய்யப்பட்ட அவனில் (oven) 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைத்து ஓரங்கள் லேசாகப் பழுப்பு நிறமானதும் எடுக்கவும். பிறகு, திருப்பிப் போட்டு மீண்டும் 2 - 3 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். ஆறிய பிறகு, காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்துப் பயன்படுத்தவும்.
தேவையானவை:
கோதுமை மாவு – 2 கப்
வெதுவெதுப்பான பால் – கால் கப்
தயிர் – ஒரு கப்
கோகோ பவுடர் – அரை கப்
இன்ஸ்டன்ட் காபி பவுடர் – அரை டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன்
பேக்கிங் சோடா – அரை டீஸ்பூன்
சாக்லேட் எசென்ஸ் – ஒரு டீஸ்பூன்
பாதாம் – கால் கப் (பொடியாக நறுக்கவும்)
வால்நட் – கால் கப் (பொடியாக நறுக்கவும்)
பொடித்த சர்க்கரை - ஒரு கப்
வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்
சுல்தானா உலர் திராட்சை (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) – கால் கப்
எண்ணெய் – அரை கப்
மைதா மாவு - சிறிதளவு
செய்முறை:
கோதுமை மாவுடன் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, கோகோ பவுடர், காபி பவுடர் சேர்த்துச் சலிக்கவும். இதனுடன் பொடித்த சர்க்கரை, நட்ஸ் வகைகள் சேர்த்துக் கலக்கவும். தயிருடன் எசென்ஸ், எண்ணெய், பால் சேர்த்துக் கலக்கவும். பிறகு, தயிர் கலவையுடன் கோதுமை மாவு கலவையைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கலக்கவும். பேக்கிங் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி சிறிதளவு மைதா மாவைத் தூவவும். இதன் மீது மாவுக் கலவையை ஊற்றவும். 180 டிகிரி ப்ரீஹீட் செய்யப்பட்ட அவனில் (oven) 35 நிமிடங்கள் முதல் 40 நிமிடங்கள் வரை வைத்து `பேக்’ செய்து எடுக்கவும். ஆறிய பிறகு, துண்டுகளாக்கிப் பரிமாறவும்.
தேவையானவை:
காய்ச்சாத பால் – ஒரு லிட்டர்
கண்டென்ஸ்டு மில்க் – கால் கப்
குங்குமப்பூ – சிறிதளவு
பாதாம் – கைப்பிடியளவு
முந்திரி – கைப்பிடியளவு
பிஸ்தா - கைப்பிடியளவு
வால்நட் – கைப்பிடியளவு
உலர் திராட்சை – கைப்பிடியளவு
உலர் அத்திப்பழம் – கைப்பிடியளவு
செய்முறை:
பாதாமுடன் முந்திரி, வால்நட், பிஸ்தா, உலர் திராட்சை, உலர் அத்திப்பழம் ஆகியவற்றை வெதுவெதுப்பான நீர் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு பாதாம், பிஸ்தாவின் தோலை நீக்கிவிட்டு, சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். சிறிதளவு பாலுடன் குங்குமப்பூ சேர்த்து ஊறவைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் மீதமுள்ள பாலை ஊற்றி, அடுப்பை சிறுதீயில் வைத்துக் காய்ச்சவும். இதனுடன் அரைத்த நட்ஸ் விழுது சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு, கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து 2 - 3 நிமிடங்கள் கொதிக்கவிடவும், இதனுடன் குங்குமப்பூ சேர்த்து 2 நிமிடங்களுக்குப் பிறகு இறக்கவும். இதைச் சூடாகவோ, குளிரவைத்தோ பரிமாறலாம்.
source https://www.vikatan.com/food/recipes/dry-fruit-chikki-dry-fruit-cookies-dry-fruit-chocolate-brownie-dry-fruit-special-weekend-recipes
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக