Ad

வெள்ளி, 16 ஜூலை, 2021

சென்னை: `போலீஸ் இன்ஸ்பெக்டரின் டிரைவரும், என் மனைவியும் மிரட்டுகிறார்கள்’ - கணவர் பரபரப்பு புகார்!

சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, ``நான் முத்தியால்பேட்டை காவல் நிலையம் எதிரில் கூரியர் ஏஜென்ட்டாக உள்ளேன். என்னுடைய மனைவி ரூபாவதி. நானும் ரூபாவதியும் காதலித்து 6.2.2002-ம் தேதி திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு 19 வயதில் ஒரு மகன் உள்ளான்.

போலீஸ் இன்ஸ்பெக்டரின் டிரைவர் பெஞ்சமின், ரூபாவதி

முத்தியால்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டருக்கு டிரைவராக பணியாற்றிய காவலர் பெஞ்சமினுக்கும் என் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது. இந்த நிலையில் 6.6.2021-ம் தேதி ரூபாவதி திடீரென தற்கொலைக்கு முயன்றார். அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தபோதுதான் பெஞ்சமினுடன் ஏற்பட்ட பழக்கம் தெரிந்தது. காவலர் பெஞ்சமினும் என் மனைவியும் தனிமையில் இருந்த போட்டோக்கள், வீடியோக்களைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன்.

என்னுடைய மனைவியின் போட்டோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுவிடுவதாக பெஞ்சமின் மிரட்டுகிறார். அதனால் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் நான் புகாரளித்தபோது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. காவலர் பெஞ்சமின், என்னுடைய மனைவி ரூபாவதியால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது. மேலும் எனது மனைவியை மிரட்டி பணம், தங்க நகைகளை வாங்கிய பெஞ்சமின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Also Read: ` பள்ளிச் சிறுமியைக் கடத்திச் சென்ற இளைஞர்' - போக்ஸோவில் கைது செய்த போலீஸ்!

இதுகுறித்து ஜெயபிரகாஷ் நிருபர்களிடம் கூறுகையில், ``என்னுடைய அப்பா காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர். நான் கூரியர் தொழில் செய்து வருகிறேன். என் மனைவி ரூபாவதியின் நடவடிக்கையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால் அவளின் போனை ஆய்வு செய்தபோதுதான் காவலர் பெஞ்சமினும் ரூபாவதி அடிக்கடி பேசியது தெரியவந்தது. அதன்பிறகு அவள் தற்கொலைக்கு முயற்சி செய்தபிறகுதான் இருவருக்குமிடையே உள்ள நட்பு தெரியவந்தது. 13.7.2021-ம் தேதி எனக்கும் என் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அவள் பிரிந்துச் சென்றுவிட்டாள். அப்போது என்னை காவலர் பெஞ்சமினும் சேர்ந்து கொலை செய்து விடுவதாக ரூபாவதி மிரட்டினாள். 14.7.2021-ம் தேதி என்னை சந்தித்த பெஞ்சமின், ரூபாவதியின் வீடியோக்களை வெளியிட்டு விடுவேன். அதை வெளியிடாமலிருக்க 10 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று மிரட்டினார். எனவே காவலர் பெஞ்சமின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/crime/in-chennai-commissioner-office-a-husband-complaint-against-his-wife-and-a-cop

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக