Ad

புதன், 14 ஜூலை, 2021

கரூர்: `தமிழகத்தில் 13 ஆயிரம் கிராமங்களில் பா.ஜ.க கொடி பறக்கும்!' - அண்ணாமலை உறுதி

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவராக இருந்த அண்ணாமலை அறிவிக்கப்பட்டுள்ளார். நாளை சென்னையில் உள்ள பா.ஜ.க அலுவலகமான கமலாலயத்தில் தமிழகத்தின் மாநில தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு

Also Read: கரூர்: தடுப்பூசி மையத்துக்கு பூட்டு; தலைமை ஆசிரியை வாக்குவாதம்! -குளறுபடிகளால் மக்கள் அதிருப்தி

இதற்காக, கடந்த 14 - ஆம் தேதி காலை கோவையில் துவங்கி திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் வழியாக நேற்று இரவு 10 மணி அளவில் கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார். கரூர் மாவட்ட எல்லையான புகலூர் வேலாயுதம்பாளையம் பகுதியில் அவருக்கு பா.ஜ.கவினரால் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, வெங்கமேடு, கரூர் பேருந்து நிலையம், புலியூர், குளித்தலை ஆகிய பகுதிகளில் வழிநெடுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து, மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுள்ள அண்ணாமலைக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். தொடர்ந்து, கரூர் ரவுண்டானா பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி அண்ணாமலை உரையாற்றினார்.

அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு

அப்போது பேசிய அவர்,

"எனது சொந்த மாவட்டமான கரூர் மாவட்டத்தில் நீண்ட நேரம் காத்திருந்து வரவேற்பு அளித்த அனைத்து பா.ஜ.க நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காலதாமம் ஆகிவிட்டது. அதற்காக, அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும். இரண்டு மணி நேரம் தாமதம் ஆகிவிட்டது. வழியில் சில இடங்களில் மழை பெய்ததால், தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த தாமதம் ஏற்பட்டுவிட்டது. இதே ஊரில் பிறந்தவன் நான். என்னைப் பற்றி அதிகம் உங்களுக்கு தெரியும். உங்களிடம் நான் அதிகம் பேச வேண்டியதில்லை.

தமிழகத்தின் மாநில தலைவராக எனக்கு புதிய பொறுப்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் உள்ள 13 ஆயிரம் கிராமங்களில் பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை, சித்தாந்தங்களை எடுத்துச் செல்ல வேண்டும். அங்கு பா.ஜ.க கொடி பறக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரையில் தொண்டர், தலைவன் என்ற பாகுபாடு இல்லை. இங்கு அனைவரும் சமம். அனைவரும் சேர்ந்து அனைத்து கிராமங்களுக்கும் பா.ஜ.க கட்சியை கொண்டு சேர்ப்போம். அதற்காக, அயராது பாடுபடுவோம். கரூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் இனி அசுர வளர்ச்சி இருக்கும். இது, ஒரு வித்தியாசமான மாவட்டம். எனவே, கரூர் மாவட்டத்தில் பா.ஜ.கவின் அரசியலும் வித்தியாசமாக இருக்கும்.

அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு

அடுத்த ஆறு மாதம் காலத்தில் அதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். அதற்காக, நாம் கடுமையாக உழைக்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் தடம் பதிக்க வேண்டும். நாளை மாலை உங்களது சேவகனாக பொறுப்பேற்க உள்ளேன். தற்போது, தமிழகத்தில் நமது கட்சிக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். நிச்சயம் விரைவில் 180 சட்டப்பேரவை உறுப்பினர்களை கொண்ட கட்சியாக பா.ஜ.க மாறும். அதற்கு, அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்" என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/annamalai-speech-in-front-of-bjp-members-in-karur

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக