Ad

வெள்ளி, 16 ஜூலை, 2021

10-ம் வகுப்பு படிக்கும் மகளின் தோழிக்கு பாலியல் தொல்லை! -தஞ்சை அதிமுக பிரமுகர் கைது

தஞ்சாவூரில் அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் பத்தாம் வகுப்பு படிக்கும் தனது மகளின் தோழிக்கு, ஆபாச மெசேஜ் அனுப்பி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக புகார் வந்ததையடுத்து, விசாரணை மேற்கொண்ட போலீஸ் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பரபரப்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை

தஞ்சாவூரை அடுத்த மாரியம்மன் கோவில் செட்டித் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (40). அ.தி.மு.க-வில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தலைவராக உள்ளார். அத்துடன் தனியார் பேட்டரி கம்பெனி ஒன்றில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய 15 வயது மகள் அரசு பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அதே வகுப்பில் படிக்கும் மற்றொரு மாணவியும் வேல்முருகனின் மகளும் தோழிகள்.

இந்நிலையில் தனது மகள் செல்போனிலிருந்து அவர் அனுப்பவது போல் மகளின் தோழிக்கு வேல்முருகன் மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தன்னுடைய செல்போனிலிருந்தும் ஆபாச மெசேஜ் அனுப்பி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் கலைவாணி விசாரணை மேற்கொண்டதுடன் வேல்முருகனை போக்சோ சட்டத்தில் கைது சிறையில் அடைத்தார்.

Also Read: பாலியல் புகாரளித்தவர்கள்மீது கொலைவெறித் தாக்குதல்; பா.ஜ.க பிரமுகரின் மகன்கள் வெறிச்செயல்!

இது குறித்து போலீஸ் தரப்பில் பேசினோம், `மகளுடன் படிக்கும் தோழி என்றும் பாராமல் வேல்முருகன் தொடர்ந்து ஆபாச மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். மேலும் சில மாதங்களுக்கு முன் அந்த மாணவியின் வீட்டிற்கு சென்றதுடன், அவர் மேல் கைபோட்டு செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது அந்த மாணவியின் பாட்டி வந்துவிட, `என் மகளை பார்க்க எப்பமா வரனு?’ கேட்பது போல் கேட்டு விட்டு சென்றிருக்கிறார்.

இதனை தொடர்ந்தும் அந்த மாணவிக்கு மெசேஜ் அனுப்பவதை நிறுத்தவில்லை. அந்த மாணவி இதனை வெளியே சொல்ல பயந்து மனதிற்குள்ளேயே வைத்திருக்கிறார். இந்நிலையில் மகள் தோழியின் வீட்டிற்கு அருகிலேயே வீடு பார்த்து குடும்பத்துடன் குடி வந்திருக்கிறார். மேலும் ஆபாச மெசேஜ் அனுப்பவதும் எல்லை மீறியிருக்கிறது.

கைது செய்யப்பட்ட வேல்முருகன்

ஒரு கட்டத்தில் இதனால் மன உளைச்சல் அடைந்த அந்த மாணவி தோழியினுடைய அப்பாவின் செயலை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர்கள் போலீஸில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவை உண்மை என தெரிய வர போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம்” எனத் தெரிவித்தனர். அ.தி.மு.கவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் வேல் முருகன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டது அக்கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



source https://www.vikatan.com/news/crime/sexual-torture-to-daughters-friend-admk-cadre-arrested-in-pocso-act

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக