Ad

வெள்ளி, 4 ஜூன், 2021

Covid Questions: ஆஸ்துமா உள்ளவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

- பரணி கௌஷிக் (விகடன் இணையத்திலிருந்து)

ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமைக்கான சிறப்பு மருத்துவர் ஶ்ரீதரன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆஸ்துமா, அலர்ஜி சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரன்.

``உலக அளவில் ஆஸ்துமா, அலர்ஜி என்பது பரவலாகக் காணப்படுகிற ஒரு நோய். அதாவது 18 முதல் 20 சதவிகிதம் பேருக்கு ஆஸ்துமா, அலர்ஜி பாதிப்பு இருக்கிறது. அப்படிப் பார்த்தால் அந்த 18 முதல் 20 சதவிகிதம் பேருக்கு கோவிட் தடுப்பூசி போடாமலிருக்க முடியுமா? இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்குத்தான் அவசியம் இந்தத் தடுப்பூசியைப் போட வேண்டும். ஏனென்றால் ஆஸ்துமா, நீரிழிவு, சிஓபிடி எனப்படும் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு, ரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்ற இணை நோய்கள் உள்ளவர்களுக்கு கோவிட் தொற்று பாதித்தால் அதன் தீவிரம் மிக அதிகமாக இருக்கும்.

ஆஸ்துமா நோயாளிகளைப் பொறுத்தவரை அந்த நோய்க்கான முறையான சிகிச்சையை மேற்கொள்ளாமல், கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கூடாது. ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோயாளிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். தடுப்பூசி போட்டுக் கொள்ளும்போதும் ஆஸ்துமாவுக்கான மருந்துகளை நிறுத்த வேண்டாம்."

எனக்கு ஈஸினோபிலியா பாதிப்பு உள்ளது. நான் கொரோனாவுக்கான தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

-C. Erusappan (விகடன் இணையத்திலிருந்து)

``அலர்ஜி உள்ளவர்களுக்கு ஈஸ்னோபில்ஸ் அதிகமாகவே இருக்கும். அதற்கும் தடுப்பூசிக்கும் எந்தத் தொடர்புமில்லை என்பதால் நிச்சயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்,

ஈஸ்னோபில்ஸ் ஏன் அதிகமாக இருக்கிறது என்பதை சரியான மருத்துவ ஆலோசனையில் தெரிந்துகொண்டு, அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியது அவசியம், மற்றபடி இதைக் காரணம் காட்டி தடுப்பூசியைத் தவிர்ப்பது விஞ்ஞானபூர்வ மனோபாவம் அல்ல."

ஆஸ்துமா - Representational Image

Also Read: Covid Questions: கேட்டராக்ட் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் எப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்?

என் மனனவிக்கு சளித் தொல்லை இருக்கிறது. அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

- விஜய் (விகடன் இணையத்திலிருந்து)

``சளித்தொல்லை என நீங்கள் குறிப்பிட்டிருப்பது சைனஸ் பாதிப்பா, டஸ்ட் அலர்ஜியா அல்லது ஆஸ்துமா பாதிப்பா என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். மருத்துவரை அணுகி, டெஸ்ட் செய்து முறையான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.எந்தக் காரணமாக இருந்தாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றைக் கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/health/healthy/covid-questions-2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக