கரூரில் யூ-டியூப்பில் பார்த்து, வீட்டில் வைத்து குக்கரில் சாராயம் காய்ச்சிய தந்தை, மகன் கைது செய்ய்யப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read: `போன் செய்தால் வீடு தேடி வரும் உணவு!' - பசி போக்கும் திட்டத்துக்கு கரூர் மக்கள் வரவேற்பு
கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் உள்ள அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், குடிமகன்கள் மது கிடைக்காமல் அல்லாடி வருகிறார்கள். மதுவுக்காக பலரும் சொந்தமாக சாராயம் காய்ச்சி, போலீஸிடம் வசமாக சிக்கி வருகிறார்கள். கரூர் மாவட்டத்திற்குட்பட்ட குப்பிச்சிபாளையம் கிராமத்தில் குணசேகரன்(வயது: 50) மற்றும் அவரது மகன் ஜெகதீஷ் (வயது: 24) இருவரும் தங்கள் வீட்டில் குக்கரில், சாராயம் காய்ச்சுவது எப்படி என்று யூ-டியூபில் பார்த்து சாராயத்தை தயாரித்துள்ளனர். மேலும், மீதமுள்ள சாராயத்தை தனக்கு தெரிந்தவர்களுக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டு, 8 பாட்டில் மற்றும் ஒன்றரை லிட்டர் அளவு கொண்ட கள்ளச்சாராயத்தை பாட்டிலில் நிரப்புவதற்காக வைத்திருந்தனர்.
இதற்கிடையில், கரூர் மாவட்ட எஸ்.பி சசாங் சாய் உத்தரவின்பேரில், சட்டவிரோதமாக மது விற்பனை மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களைக் கண்காணிக்க, கரூர் மாவட்டம் முழுவதும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தனிப்படை போலீஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவல் அடிப்படையில், வாங்கல் காவல்துறையினர் மேற்படி குணசேகரன் இல்லத்திற்கு சென்று, திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, குக்கரில் தயார் செய்த கள்ளச்சாராயத்தைத் தயார் நிலையில் விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டறிந்தனர். பின்னர், சாராயத்தை கைப்பற்றிய போலீஸார், குணசேகரன் மற்றும் ஜெகதீஷைக் கைது செய்தனர். கரூரில் யூடியூப்பை பார்த்து, வீட்டில் வைத்து, தந்தையும், மகனும் குக்கரில் கள்ளச் சாராயம் காய்ச்சிய சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/crime/father-and-son-arrested-for-brewing-liquor-in-home-cooker-after-watching-youtube
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக