Ad

சனி, 19 ஜூன், 2021

மகாராஷ்டிரா: 'இந்துத்துவா கொள்கை யாருக்கும் காப்புரிமை கொடுக்கப்படவில்லை': உத்தவ் தாக்கரே பேச்சு.

சிவசேனா தொடங்கப்பட்டதன் 55-வது தினத்தை அக்கட்சி நேற்று கொண்டாடியது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தை சிறப்பாக கொண்டாடும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு ஆன்லைன் வழியாக முதல்வர் உத்தவ் தாக்கரே உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது: "சிலர் நாங்கள் மகா விகாஷ் அகாடியுடன் கூட்டணி வைத்தவுடன் இந்துத்துவா கொள்கையை கைவிட்டுவிட்டதாக சொல்கின்றனர். இந்துத்துவா கொள்கை யாருக்கும் காப்புரிமை கொடுக்கப்படவில்லை. பயன்படுத்திவிட்டு கழற்றிவிட இந்துத்துவா கொள்கை ஒன்றும் ஆடையல்ல. இந்துத்துவா கொள்கை எங்களின் மூச்சு என்று பாலாசாஹேப் கூறியிருக்கிறார். எனவே எங்களின் இந்துத்துவா கொள்கை பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. சிலர் வீட்டைவிட்டு நான் வெளியில் வரமாட்டேன் என்று சொல்கிறார்கள். வீட்டில் இருந்துகொண்டு அதிகமான வேலை செய்தால் வீட்டைவிட்டு வெளியில் வந்து என்ன பயன் என்று நினைத்துப்பாருங்கள். மகா விகாஷ் அகாடியின் ஸ்திரத்தன்மை குறித்து பாஜக சந்தேகம் எழுப்புகிறது. அதிகாரத்தில் இல்லாததால் சிலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்படுகிறது.

உத்தவ்தாக்கரே

சிலர் தனியாகப்போட்டியிடப்போகிறோம் என்று கோஷமிடுகின்றனர். நானும்கூட தனியாக போட்டியிடப்போகிறோம் என்று சொல்வேன். ஒவ்வொரு கட்சிக்கும் தனித்து போட்டியிட உரிமை இருக்கிறது. தனித்து போட்டியிடுவதோடு நின்றுவிடக்கூடாது என்று காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக விமர்சித்தார். மக்கள் கொரோனாவோடு போராடிக்கொண்டிருக்கின்றனர். அதோடு நிதி நெருக்கடியிலும் சிக்கித்தவிக்கின்றனர். அப்படிப்பட்ட நிலையில் தனித்து போட்டிய்டிாப்போகிறேன். செல்வாக்கை அதிகரித்துக்கொள்ளப்போகிறேன் என்று சொல்வது நல்லதல்ல. மக்கள் தெருக்களில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் போது சுய செல்வாக்கை வளர்த்து என்ன பயன்? . தேர்தல் மனநிலையை கைவிட்டுவிட்டு பெருந்தொற்றை எதிர்த்து போரிடவேண்டும். அதிகாரத்திற்காக பல்லக்கு தூக்குபவர்களாகவோ அல்லது பலவீனமாகவோ செயல்படமாட்டோம். எங்களது சொந்தக்காலில் நடப்போம். இதுதான் எங்களது கொள்கை" என்று குறிப்பிட்டார். சமீபத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் நானாபட்டோலே வரும் மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டடியிடும் என்று குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தவ்தாக்கரே மேலும் பேசுகையில், நாம் மாநில கட்டமைப்பில் இருக்கிறோம். எப்போதெல்லாம் பிராந்திய பெருமைகு அச்சுறுத்தல் ஏற்படுகிறதோ அப்போது மாநில கட்டமைப்புக்கும் நெருக்கடி ஏற்படுகிறது. உதாரமாக மேற்கு வங்கத்தை சொல்லலாம். மேற்கு வங்கத்தேர்தலுக்கு பிறகு அனைத்து மட்டத்திலான தாக்குதலையும் அம்மாநிலம் சந்தித்தது. ஆனாலும் மேற்கு வங்கத்தின் பெருமைக்கு அனைவரும் உறுதுணையாக இருந்தனர். பிராந்திய பெருமையை எப்படி பாதுகாக்கவேண்டும் என்பதற்கு மேற்கு வங்கம் ஒரு சிறந்த எடுத்துகாட்டாகும் என்று குறிப்பிட்டார். தாதரில் சிவசேனா பவன் முன்பு பாஜகவினர் போராட்டம் நடத்திய போது அவர்களை சிவசேனாவினர் அடித்து விரட்டியது குறித்து குறிப்பிட்ட உத்தவ்தாக்கரே, யாராவது உன்னை அடித்தால் திரும்ப அடி என்று பாலாசாஹேப் குறிப்பிட்டுள்ளார். இந்த வாக்கியம் கடந்த சில நாட்களாக வைரலாகி வருகிறது. இது எதற்காக வைரலாகி வருகிறது என்று எங்களுக்கு தெரியும்.



source https://www.vikatan.com/news/politics/maharashtra-chief-minister-uddhav-thackeray-speech-in-shiv-sena-partys-55-anniversary

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக