Ad

வியாழன், 17 ஜூன், 2021

யூடியூபர் பப்ஜி மதன் பிரச்னை ஏன் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது?

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பப்ஜி என்ற ஆன்லைன் விளையாட்டின் போது, ஆபாசமாகப் பேசி வீடியோக்களை வெளியிட்டதாக மதன்குமார் மாணிக்கம் என்ற மதனை போலீஸார் தேடி வருகின்றனர். சென்னை வடபழனியைச் சேர்ந்த அபிஷேக் ரபி என்பவர் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவாலிடம் அளித்த புகாரில் மதன் (MADAN), மதன் டாக்ஸி 18 + (TOXIC MADAN 18+), பப்ஜி மதன் கேர்ள் ஃபேன் (PUBG Madan Girl fan), ரிச்சி கேமிங் ஒய்டி (Richie Gaming YT) போன்ற யூடியூப் சேனல்களில் மதன் ஆங்கிரி அட் ஹிஸ் கேர்ள் ப்ரண்டு (MADAN angry at his girtfrien), ஸ்ட்ரிக்ட்லி 18+ (Strictly 18+), தமிழ் பப்ஜிம் (Tamil PUBGM ) உள்ளிட்ட தலைப்புகளில் வீடியோக்களை பார்த்ததாகவும், அவற்றில், பெண்களை மிகவும் ஆபாசமான அருவருக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்தி ஸ்ட்ரீம் செய்கிறார். அவருடைய வீடியோக்களை கேட்பவருக்குத் தொல்லை தரும் வகையிலும், எரிச்சல் ஊட்டும் வகையிலும் பெண்களின் கற்பு நெறியை அவமதிக்கும் வகையிலும், பெண்களின் அந்தரங்க விஷயத்தை குறிப்பிடும் வகையிலும் உள்ளது. எனவே அவரது சேனல்களை தடை செய்து அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

சைபர் க்ரைம்

சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் தமிழகம் முழுவதும் இருந்து பப்ஜி மதன் மீது 159 புகார்கள் அந்தந்த மாவட்ட சைபர் பிரிவு போலீசாரிடம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சைபர் கிரைம் போலீஸார் மதனைத் தேடி வருகிறார்கள்.

Also Read: சென்னை: யூடியூபர் மதனின் மறுபக்கங்கள்..! - மனைவி கிருத்திகா சிக்கியது எப்படி?

மதன் மீதான வழக்கிற்கு இந்த அளவு முக்கியத்துவம் தரப்படுவது ஏன் என வழக்கறிஞர் கார்த்திகேயனிடம் பேசினோம்.. “யூடியூப் தளத்தில் மதனைப் போலப் பலர் ஆபாசமாகப் பேசிவருகிறார்கள். ஆனால், இந்தியாவில் தடை செய்யப்பட்ட குழந்தைகள் விளையாடும் விளையாட்டை சட்டத்திற்குப் புறம்பாகத் தரவிறக்கம் செய்ததோடு அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்றும் தனது யூடியூப் மூலம் மதன் பேசி உள்ளதால்தான் இந்த அளவு கவனம் பெற்றுள்ளது. அந்த சேனலின் ஆடியன்ஸ் 12 முதல் 18 வயதுடைய சிறுவர்கள்தான் அதிகம். எனில் ஆன்லைன் கேமில் மதன் வெற்றி பெறுபோது அவரைச் சிறுவர்கள் கதாநாயகனாகப் பார்க்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. மணிக்கணக்கில் நீளும் வீடியோக்களில் அவர் பேசும் அனைத்து வார்த்தைகளும் சிறுவர்களுக்கு புதியவை. கிளர்ச்சியை ஏற்படுத்துபவை. எனவே அவரை கதாநாயகனாக நினைத்து அவரைப் பின் தொடரும் சிறுவர்கள் அதைப் பிற இடத்தில் பயன்படுத்துவதோடு அதனால் பாதிக்கவும் வாய்ப்பு அதிகம்.

கார்த்திகேயன்

தன்னுடன் இணையத்திப் பேசும் சிறுமிகளின் புகைப்படங்களை வாங்கி அவற்றை ஆபாசமாகச் சித்திரித்து இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். மேலும், அவர்களுடன் ஆன்லைனில் ஆபாசமாகப் பேசி அவற்றைப் பிற யூடியூப் சேனல்களுக்கும் விற்பனை செய்திருக்கிறார். சிறார் பாலியல் புகைப்படங்களைப் பார்ப்பதும், வெளியிடுவதும் இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் மிகப்பெரிய தண்டனைக்குரிய அறுவறுத்தக்க குற்றமாகப் பார்க்கப்படுகிறது.

சிறுவர்களை மையமிட்டு ஆபாசமாகப் பேசுவது, வீடியோக்கள் வெளியிடுவதை பிடோ பில்ஸ் என அழைக்கிறார்கள். இப்படி பிடோ பில்ஸ் என்பவர்கள் இந்தியாவில்தான் அதிகம் என்று 2015-ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் புகார்கள் குவிந்தன. ஆனால், அவை தொடர்பாக இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது வெளிப்படையாக அது தொடர்பான புகார்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாவதால் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. அதில் மாட்டிய முதல் விக்கெட் இந்த டாக்சிக் மதனாக இருக்கிறார். பிஎஸ்பிபி பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்ததை அடுத்து சுஷில்ஹரி, மகரிஷி வித்யா மந்திர் எனப் பள்ளிகளில் நடந்த பாலியல் வன்கொடுமைகள் வரிசை கட்டினவோ அதோபோல இந்த பிடோ பில்ஸ் குற்றவாளிகளின் பட்டியலும் நிச்சயம் இனி நீண்டுகொண்டேதான் செல்லும்.

மதன்

பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டும் விஷயங்களை உள்ளடக்கமாக வைத்து யூடியூபில் வீடியோக்களைப் பதிவிடும் போது பாலோவர்ஸ் மற்றும் அதைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றன. இதனால் இவருக்கு வருமானம் அதிகளவில் கிடைக்கிறது.

Also Read: முன்ஜாமீன் கேட்ட யூடியூபர் மதன்... `காது கொடுத்துக் கேட்க முடியவில்லை’ எனக் கண்டித்த நீதிமன்றம்! #NowAtVikatan

மதன் மீது மேற்கொள்ள வாய்ப்புள்ள சட்டவ நடவடிக்கைகள்?

மதன் செய்தவற்றை நான் கவனித்த வகையில் ஆபாசமான வார்த்தைகள் மூலம் பெண்களைத் திட்டியதால் 507 என்ற பிரிவின் கீழ் வழக்குத் தொடுக்கலாம். பெண்களை ஆபாசமாக பேசுவது என்ற வகையில் பிரிவு 67, குழந்தைகளைப் பற்றிப் பேசியதால் பிரிவு 67 பி அடிப்படையிலும் வழக்குப் பதிவு செய்யலாம். இவற்றில் குறைந்தது ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. மேலும், போக்சோ சட்டத்தின் அடிப்படையிலும் இவர் மீது வழக்குத் தொடரப்படலாம். போக்சோ தவிர இவையெல்லாம் எளிதில் ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளவை என்பதால் “போலீஸ் என்னை ஏதும் செய்ய முடியாது” எனத் தெனாவட்டாகப் பேசியிருக்கலாம். ஆனால், இவர் செய்த குற்றங்கள் அனைத்தும் கீழ்த்தரமானவை என்பதால் எந்த நீதிபதியும் அவ்வளவு எளிதாக ஜாமீன் கொடுக்கமாட்டார்கள். மதனின் மனைவிதான் சேனல்களை எல்லாம் நிர்வகித்து வந்துள்ளார். கண்டெண்ட் மட்டும்தான் மதனுடையது. நிர்வாகம் எல்லாம் அவரது மனைவி என்பதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு குற்றத்திற்கு உதவி செய்வதும் மிகப்பெரிய குற்றம் என்பதாலும் அவரும் வீடியோவில் ஆபசமாகப் பேசியிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. எனவே அவரது கைது நியாயமானதுதான். எட்டுமாதக் குழந்தை என்பதால் பால் ஊட்டுவதை நிறுத்தியிருக்க மாட்டார்கள். அதனடிப்படையில் தான் குழந்தையோடு அவரை காவல்துறை கைது செய்திருக்கிறது.

மதன்

போலீஸார் கைது செய்துவிட்டார்கள் என்றால் சினிமாவில் காட்டுவது போல எல்லாம் எந்தத் தொல்லையும் கொடுக்க மாட்டார்கள். அவர்களைக் கைது செய்து விசாரணை செய்வார்கள். மற்றபடி அதைப் பெரியளவில் எடுத்துக்கொள்ள தேவையில்லை” என மதனின் வழக்கு முக்கியத்துவம் தரப்படுவதற்கான காரணத்தையும், அவரது கைது தொடர்பான சட்ட நுணுக்கங்களையும் அவருக்கு வழங்கவுள்ள தண்டனைகள் குறித்தும் விளக்கினார்.



source https://www.vikatan.com/government-and-politics/crime/why-madans-case-gets-so-much-attention

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக