இன்றைய பஞ்சாங்கம்
24. 6. 21 ஆனி 10 வியாழக்கிழமை
திதி: பௌர்ணமி
நட்சத்திரம்: கேட்டை காலை 9.20 வரை பிறகு மூலம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பகல் 1.30 முதல் 3 வரை
எமகண்டம்: காலை 6 முதல் 7.30 வரை
நல்லநேரம்: காலை 10.30 முதல் 11.30 வரை
சந்திராஷ்டமம்: பரணி காலை 9.20 வரை பிறகு கிருத்திகை
சூலம்: தெற்கு
பரிகாரம்: தைலம்
வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
கோயில்களில் வழங்கும் சடாரி யார் அம்சம் தெரியுமா?
பெருமாள் கோயில்கள் என்றாலே துளசி, தீர்த்தம், சடாரி இவை மூன்றுமே முக்கியத்துவம் பெறும். தரிசனம் முடிந்து தீர்த்தம் அளித்த பின்பு இறைவனின் திருவடியிலிருந்து மகுடம் போன்ற ஒன்றை எடுத்துவந்து பக்தர்கள் தலையில் வைத்து ஆசி வழங்குவார்கள். பக்தர்கள் தம் கையால் வாய்மூடித் தலைகுனிந்து அதைத் தம் தலையில் வாங்கிக்கொள்வார்கள். ஒரு கணம் நம் சிரம் தொடும் அந்த மகுடம் அந்தப் பெருமாளின் ஸ்பரிசமே பட்டதுபோன்ற சிலிர்ப்பை வழங்கும். காரணம் அந்த மகுடத்தின் மேலே சிகரம்போல திருப் பாதங்கள் இரண்டு அமைந்திருப்பதைக் காணலாம். சடாரி என்பது இறைவனின் திருவடியிலிருந்து எடுத்துவரப்படுவதால் அது இறைவனின் திருவடியே என்று சொன்னாலும் இதில் அநேக தாத்பர்யங்களும் மகிமைகளும் அடங்கியுள்ளன. அவற்றை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.
இன்றைய ராசிபலன்
விரிவான பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
மேஷம்:
கவனம் : முற்பகலில் செயல்களில் கவனம் தேவை. புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. விவாதங்களை ஈடுபட வேண்டாம். - கேர் ஃபுல் ப்ளீஸ்!
ரிஷபம்:
நிதானம் : முற்பகலில் நம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலாக முடிவெடுப்பீர்கள். செலவுகளில் கட்டுப்பாடு தேவை. பிற்பகலுக்கு மேல் நிதானம் அவசியம் - டேக் கேர் ப்ளீஸ்!
மிதுனம்
பொறுமை : செலவுகளால் கவலை உண்டாகும். செயல்களில் பொறுமை அவசியம். பிற்பகலுக்கு மேல் எதிர்பார்க்கும் நற்செய்திகள் வந்து சேரும். - ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின் தி ரேஸ்!
கடகம்
உற்சாகம் : மனதில் உற்சாகம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடையே அன்பும் பாசமும் நிறைந்திருக்கும். - என்ஜாய் தி டே!
சிம்மம்:
அனுகூலம் : எதிர்பார்த்த செய்திகள் அனுகூலமாகும். சகோதர உறவுகள் உதவிகரமாக இருப்பார்கள். என்றபோதும் உடல் நலனில் சிறு அக்கறை தேவை. - ஜாலி டே!
கன்னி:
உதவி : புதிய முயற்சிகளைக் காலையிலேயே தொடங்கலாம். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். உங்களின் ஆலோசனை அனைவராலும் பாராட்டப்படும். - ஆல் தி பெஸ்ட்!
துலாம்:
பக்தி : மனதில் பக்தி அதிகரிக்கும். காரியங்கள் அனுகூலமாகும். செயல்களில் பொறுமை அவசியம். உணவுகளிலும் அக்கறை தேவை.- இறைவன் இருக்க பயம் ஏன்?!
விருச்சிகம்:
நிதானம் : மனதில் சின்னச் சின்ன குழப்பங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பிற்பகலுக்கு மேல் சாதகமான பலன்கள் கிடைக்கும். - டேக் கேர் ப்ளீஸ்!
தனுசு:
குழப்பம் : சின்னச் சின்னக் குழப்பங்கள் மனதில் தோன்றி மறையும். பணவரவும் திடீர் செலவுகளும் ஏற்படும். சகோதர உறவுகளை அனுசரித்துச் செல்லவும். - எல்லாம் நன்மைக்கே!
மகரம்:
பணவரவு : பணவரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியம் சிறு தாமதத்துக்குப் பின் சாதகமாக முடியும். எதிர்பார்த்த நல்ல தகவல்கள் வந்து சேரும். - ஆல் இஸ் வெல்!
கும்பம்:
அலைச்சல் : சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம் என்பதால் அவசர முடிவுகளைத் தவிர்க்க வேண்டியது அவசியம். - லெஸ் டென்ஷன் மோர் வொர்க்!
மீனம்
சாதகம் : செயல்கள் வெற்றியாகும். புதிய முடிவுகளை எடுப்பீர்கள். அவை சாதகமான பலனைத் தரும். உற்சாகமாகச் செயல்படுவீர்கள். திடீர் செலவுகள் ஏற்படலாம். - சாதகமான ஜாதகம் இன்று!
source https://www.vikatan.com/spiritual/astrology/the-reason-behind-sadari-in-temples
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக