புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பிடாரிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அன்பு தமிழன். இவர் விஜயபுரம் பகுதியைச் சேர்ந்த லதா(23) என்ற பெண்ணை காதலித்துக் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆவதற்கு முன்பு நகை, பணம் என வரதட்சணை எல்லாம் வேண்டும் என்று மணமகன் வீடார் கூறியதாகக் கூறப்படுகிறது.
காதல் தம்பதியானாலும் இருவருக்குமிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை வந்திருக்கிறது. இந்த நிலையில் தான், வழக்கம் போல் கடந்த 12-ம் தேதியும் கணவன், மனைவிக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. இதனால், ஒருவித விரக்தியிலிருந்த லதா தூக்கு மாட்டி வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகுடி போலீஸார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில் பெண் இறந்ததால் இது குறித்து ஆர்.டி.ஓ தலைமையில் விசாரணை துவங்கியது. பெண்ணின் கணவர், மாமியார், மாமனார் என மூன்று பேரிடமும் தனித்தனியாக கிடிக்குப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், மூன்று பேருமே முதலில் வரதட்சணை வேண்டாம் என்று சொல்லி திருமணம் செய்துவிட்டு, பின் அந்தப் பெண்ணை தினமும் வரதட்சணைக் கேட்டு கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, பெண்ணின் கணவர் அன்பு தமிழன், மாமியார் கற்பகம், மாமனார் பழனிவேல் ஆகிய மூன்று பேரையும் வரதட்சணைக் கொடுமை சட்டத்தின் கீழ் அறந்தாங்கி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வரதட்சணைக் கொடுமையால் வாழ வேண்டிய பெண் தற்கொலை செய்து கொண்டு இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/crime/women-lost-her-life-because-of-dowry-torture-in-puthukottai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக